Posted on செப்டம்பர்28, 2006 by உதய தாரகை
சுவாரஸ்யம் மிகுந்த செய்தியொன்று Google தளத்தினை தலைகீழாக காட்சிப்படுத்தும் தளம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குறித்த தளத்தில் Google தளத்தில் காணப்படும் சகல அம்சங்களையும் கண்ணாடி விம்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நீங்கள் இந்த Google தளத்தில் தேடுவதற்கு உட்செலுத்தும் சொல் கூட தலைகீழாக அமைந்திருக்க வேண்டுமாம். சென்றுதான் பாருங்களேன்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இணையம், சுவாரஸ்யம், புதியவை | Leave a Comment »
Posted on செப்டம்பர்27, 2006 by உதய தாரகை
மூன்று வயதுடைய சிறுவன், 9000 ஸ்டெலிங் பவுண் பெறுமதியான Nissan Figaro என்ற காரை ஏல விற்பனைக்கு பெயர் போன இணையத்தளமான eBay இல் வாங்கியுள்ளான். ஜேக் என்ற இச்சிறுவன் காலையில் விழித்தெழுந்தவுடன் தானொரு காரை வாங்கியுள்ளதாக கூறியுள்ளான்.
இச்சிறுவனால் வாங்கப்பட்ட குறித்த கார் ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோடு ஏல விற்பனையில் அதன் ஆரம்பப் பெறுமானமாக 7999 ஸ்டெலிங் பவுண் காணப்பட்டுள்ளது.
இச்சுவையான கொள்வனவு பற்றிய முழுச் செய்தியையும் அறிய இங்கே செல்லவும்.
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், இணையம், சுவாரஸ்யம், செய்தி, புதியவை | Leave a Comment »
Posted on செப்டம்பர்27, 2006 by உதய தாரகை
வாசிப்பின் மூலம் நிறைய விடயங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும். அதனாலோவென்னமோ, வாசிப்பு மனிதனை பரிபூரணமாக்கும் என்று கூடச் சொல்லுவார்கள். ஆக நிறைய வாசிக்கும் பழக்கமுள்ள ஆர்வலர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! Google நிறுவனம் தொடரறா நூலகமொன்றை (Online Library) ஏற்படுத்தியுள்ளது. இந்த Library இலிருந்து உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களைக் கூட PDF (Portable Document Format) நிலையில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இருந்த போதும், பதிப்புரிமை செய்யப்பட்ட (Copyrighted Editions) நூல்களை பதிவிறக்கம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இணையம், செய்தி, தொழில்நுட்பம், புதியவை | Leave a Comment »
Posted on செப்டம்பர்26, 2006 by உதய தாரகை
கணினி சம்பந்தமான நிறைய விடயங்களைச் செய்யக்கூடிய அறிவுடைய Hackers எனப்படும் குழுவினரும், மனித உரிமை சார்பாக கடமை புரியும் ஊழியர்களும் இணைந்து, புதிதாக இணையத்தளங்களை பார்வையிடுவதற்கான இணைய உலாவியொன்றினை (Internet Browser) தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
Torpark என பெயரிடப்பட்டுள்ள இந்த இணைய உலாவியானது பல சிறப்பியல்புகளைக் கொண்டது. இதனைக் கணினியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை. USB Drive இல் இருந்தவாறே பயன்படுத்த முடியும். இந்த இணைய உலாவியின் மூலம் இணையத்தினை வலம் (Surf) செய்யும் போது, [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இணையம், செய்தி, தொழில்நுட்பம், புதியவை | Leave a Comment »
Posted on செப்டம்பர்26, 2006 by உதய தாரகை
Wikipedia வின் உருவாக்கத்தில் இணைந்து பணிசெய்த Larry Sanger என்பவர் அண்மையில் Citizendium எனும் செயற்றிட்டத்தினை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார். இச் செயற்றிட்டத்தின் நோக்கம் இதுவரையில் Wikipedia வில் காணப்படும் உள்ளடக்கங்களை (Contents) பெற்று, அவற்றை துறை சார் நிபுணர்களின் உதவியுடன் தொகுத்து இணையம் மூலம் வெளியிடுவதாகும்.
இந்தச் செயற்றிட்டத்திற்கு எவரும் தமக்குத் தேவையானவாறு தகவல்களை வழங்க அல்லது தொகுக்க முடியும். ஆனாலும், அவை வெளிவிடப்படுவது தொடர்பான இறுதி முடிவை எடுக்கப்போவதென்னவோ, குறித்த விடயம் சார்பாக பாண்டித்தியம் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது இணையம், செய்தி, தொழில்நுட்பம், புதியவை | Leave a Comment »
Posted on செப்டம்பர்18, 2006 by உதய தாரகை
இலட்சியமும் இலக்குகளும் உடையவராய் இருத்தல்.
என்றும் புன்னகையுடன் இருத்தல்.
சந்தோஷமான சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்தல்.
மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடிய மனப்பான்மை கொண்டிருத்தல்.
மனத்தை குழந்தை மனம் போல் வைத்திருத்தல்.
பலதரப்பட்ட மனிதர்களுடன் நட்புடன் இருத்தல்.
ஆச்சரியங்கள் வரும் போது, அமைதி காத்தல்.
நகைச்சுவை உணர்வைக் கொண்டிருத்தல்.
மற்றவர்களை மன்னித்தல்.
உண்மையான நண்பர்கள் சிலரை கொண்டிருத்தல்.
குழுவாக எப்போதும் பணிகளை ஆற்ற வேண்டும்.
குடும்ப ஒன்று கூடலின் போது களிப்புடன் இருத்தல்.
தன்னம்பிக்கை உடையதாகவிருப்பதோடு, உங்களைப் பற்றி திருப்தியடையுங்கள்.
பலவீனங்களைக் கூட மதியுங்கள்.
சிலவேளைகளில் உங்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்யுங்கள்.
நேரத்திற்கு நேரம் வேலை செய்யுங்கள்.
ஈடுபாடும் வீரமும் உடையவராய் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது வாழ்க்கை | 1 மறுமொழி »