இணைக்கப்பட்ட உலகினில் வாழ்வியல் கோலங்கள்

இணையம் (Internet)என்றாலே, அதுவொரு பழைய விஷயம் என்றாகிவிட்டது. இணையத்தோடிணைந்த புதிய தொழில்நுட்பங்களின் வருகையே இணையத்தின் ஏகப்பட்ட கோணங்களை அடிக்கடி நினைவுபடுத்திச் செல்லும். இந்த இணையம் எமக்கு என்ன செய்துள்ளது? என்ற கேள்வி எழுந்தால் அதற்கு அதிகம் அதிகம் என்றே பதில் கூறவேண்டும். அப்படியென்ன அதிகம் செய்துள்ளது?
இணையம் எமக்கு செல்வத்தைத் தந்ததா? வக்கிர உணர்வுகளை தூண்டும் காட்சிகளையல்லவா எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் காட்டிக் கொண்டிருக்கிறது!! என்று நீங்கள் கேட்பது புரிகின்றது! என்ன செய்ய சுதந்திரம் என்ற சொல்லுக்கு ஒவ்வொருவரும் [...]

நீருக்குள் மீன்கள்

என்ன இது? மீன்கள் நீருக்குள்ளேதானே இருக்கும். இது தெரியாதா? எமக்கென்று ஆச்சரியமாகக் கேட்பது எனக்கு புரிகிறது. மீன்கள் நீருக்குள் வாழ்வதால் அதன் சுவாசத் தொகுதியானது நிலத்தில் வாழும் அங்கிகளின் சுவாசத் தொகுதியிலிருந்தும் முற்றும் மாறுபட்டது. மீன்கள் அவற்றின் பூக்கள் மூலம் நீரில் காணப்படும் ஒட்சிசனை பெற்று அதன் மூலம் சுவாசத்தை மேற்கொள்ளும். மீன்கள் அவற்றின் வாய்களினூடாக நீரை உள்ளெடுக்கும். இந்நீரானது பின்னர் அதன் தலையின் இருபுறமும் காணப்படும் பூக்களிற்கூடாக கடத்தப்படும். இதில் நீரில் கரைந்து காணப்படும் ஒட்சிசன், [...]

சாயும் பைஸா கோபுரம்

உலகத்தில் பிரபல்யமாகக் காணப்படும் விடயங்கள் மக்களால், சந்ததி சந்ததியாக மிகக் கரிசணையுடன் பார்க்கப்படும். இத்தாலியிலுள்ள பைஸா நகரத்தில் அமைந்துள்ள சாயும் கோபுரத்தினை அறிந்திராதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த நகரத்தின் வரலாறு மிகவும் சிறப்பும், உயர்வுமுடையதை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள். சாயும் பைஸா கோபுரமும் ஒரு ஆச்சரியமான விடயமென்றால் மறுப்பதற்கில்லை.
கோபுரம் முழுக்க வெள்ளைப்பளிங்கால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, கோபுர சுவரின் தடிப்பு நான்கு (4) மீற்றர் உடையதாகவும், எட்டு மாடிகளையும் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இதன் உயரம் 54.5 மீற்றர்கள் ஆகும். [...]

காற்றின் கவலை

அவதரிப்பு முதல் தொட்டு
அன்பால் அரவணைக்கும்
என்னை…
கண்டு கொள்ளாமலே
கொல்ல நினைக்கிறீர்!!
நீர் நாட்டில்
நலமாய் சிறக்க
பிராண வாயு தந்து
பிரயாணிக்கச் செய்ததை
மறந்தீரோ…!!
கரியமில வாயு கொண்டு
கழுத்தறுக்கிறீர்..!
இதனை கண்டுணர்ந்து
யாரும் கதையளந்தால்
உடன் மறுக்கிறீர்..!
என்னை மாசாக்கின்
உன்னை தூசாக்க
எத்தனையோ உண்டு கேளீர்!
சூறாவளியென்ன?
சார்சும் அதிலொரு வகையே!
ஆனாலும், மனிதர்கள்
நன்றி மறப்பதொன்றும்
புதிதில்லை என்பதனால்
இன்னும் பூமியிலே உள்ளுர
புழுங்கித் தவிக்கின்றேன்..!!
2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் பிரசுரமான என் “கவிதை”…

அதிசய கூகிள் தொடர் – 01

கூகிள் (Google) – ஓர் அறிமுகம்
இணைய உலகிலே, இன்றைய காலகட்டத்தில் கூகிள் என்ற சொல்லைப் பயன்படுத்தாது எந்த விடயம் சார்பாகவும்; கதைக்க முடியாதளவுக்கு கூகிள் மிக வேகமாக மக்களை ஆட்கொண்டுவிட்டது என்றே சொல்லவேண்டியுள்ளது.
அண்மையில் கூகிள் என்ற பெயர்ச்சொல் முக்கியமான ஆங்கில அகராதிகளில் தேடல் என்னும் வினைச்சொல்லின் ஒத்தகருத்துச்சொல்லாக (google) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவ்வாறு தேடல் எனும் வினைச்சொல்லிற்கு பதிலாக பல வேற்று மொழிகளிலும் கூகிள் என்ற சொல்லை சேர்த்து பயன்னடுத்துவதாக விக்கிபீடியா சொல்கிறது! தமிழில் [...]

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே…

நேற்று எனது பழைய கால நினைவுகளை மீட்டிக் கொள்ள ஓர் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதெப்படி? ஆம், எனது பாடசாலை நாட்களில் எனது சக மாணவத் தோழர்களோடு இணைந்து பல ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்த ஞாபகங்கள், பள்ளியை விட்டு போகும் போது, நண்பர்கள் குறிப்பிட்டு தந்த ஆட்டோகிராஃப் (Autograph) இனை பார்க்கையில் எழுந்தது.
அந்த குறிப்புகளை வாசிக்க வாசிக்க பசுமையான எண்ணங்கள் என் மனவானில் நிறைவாக தாலாட்டியது. நான் படிக்கின்ற காலத்தில் எமது மாணவர் கூழாமோடு சேர்ந்து விஞ்ஞான [...]

புரிவதில்லை…

அலைபாயும் வேளையில்
கரை ஒதுங்கும் சருகுகள்…
இடர்காணும் நேரமதில்
அகன்றோடும் சொந்தங்கள்!!
காந்தம் கண்டு கவரப்படும் இரும்பு…
காசு வந்தால்
ஒட்டிக் கொள்ளும் உறவு!!
கதிரவன் வழியில்
கண்சிமிட்டும் சூரியகாந்தி…
நன்மை கூடுமிடும்
வேஷமிடும் உணர்வுகள்!!
இன்னும் ஏராளம்!!
வினோதமான நாடகங்கள்
இப்பூமியிலே…
மனித உணர்வுகளின்
வஞ்சத்தை எண்ண,
நெஞ்சத்தை தாக்கிறது
ஒரு புயல்..!!
இன்னும் புரியவில்லை!!
இந்நாடகங்கள் “மனிதனுக்கு”
எதற்கென்று…
2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 05 ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் பிரசுரமான என் “கவிதை”..