ஆங்கிலமில்லாத மொழி

தமிழ் மொழி மூலம் சிந்தித்து எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் எமது வாழ்க்கையோட்டத்தில் அறிந்தோ அறியாமலோ முக்கியமான ஓரிடத்தைப் பெற்றுக் கொள்ள ஆங்கிலத்திற்கு முடிந்துள்ளது. இப்பழக்கம் தமிழ் மொழியினை பாவிக்கும் மக்களிடம் மட்டுந்தான் வந்துள்ளதா? என்று ஆய்ந்தால், இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. ஏனெனில் உலகிலுள்ள பல நாடுகளிலும் ஆங்கிலத்தினை தம் அன்றாட விடயங்களில் பாவிக்கும் தன்மை நிறைய மக்களிடம் காணப்படுகிறது. இந்நிலை எவ்வாறு சாத்தியமானது என்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் பட்டியற்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை தொடர்பாக கதைக்க எனக்கு [...]

இது ரொம்ப பெரியது!!

உலகில் எத்தனை விதமான ஆச்சரியங்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றன. இவை செயற்கையாக மனிதனின் முயற்சியால் மட்டுமல்லாது, இயற்கையாகவும் இடம் பெறுகின்றன. இங்கு நான் குறிப்பிடப்போகும் தகவலும் இயற்கையாக உண்டாகியுள்ள ஆச்சரியம்தான்.
மலர் – பூ : யாவரும் விரும்பும் அழகிய சொற்கள்.. யாவரும் இரசிக்கும் அழகிய சடப்பொருள்.. யாவரும் நுகரும் இனிய நறுமணம் தாங்கி.. இப்படியாக மலர்களின் மகத்துவத்தினை அடுக்கிச் சொல்லலாம்.
மலர்களில் எனக்கு மல்லிகையைப் பிடிக்கும். ரோஸாவும் பிடிக்காதென்றில்லை. இந்தக் காலத்தில் ரோஸா பூவுக்கே அதிகம் கிராக்கி இருக்கும் என [...]