இயற்கை என்பது பெருங்கொடையாகும். இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் நாதம் இருக்கும். நிறைவான நிம்மதி இருக்கும். இயற்கையை இரசிக்கக் கற்றுக் கொண்டவனின் வாழ்வில் சந்தோசம் இதமாகத் தாலாட்டும். இயற்கையை பற்றி வியந்து பாடாத கவிஞர்களே இல்லையெனும் அளவிற்கு கலையார்வளர்களை இயற்கை கட்டிப்போட்டு வைத்துள்ளது.
இதிலிருந்து இயற்கையை இரசிப்பவனே கவிஞனாக முடியுமென்றும் கருத்துக் கொள்ளலாம் என பொதுவாக எண்ணத் தோன்றுகிறது. இயற்கைக்கு மொழி கிடையாது. அனைத்தும் காட்சிகளின் வண்ணமயமான கோலங்கள்! காட்சிகளை இரசிக்கும் பாங்கில் அவரவர் மொழிக்கேற்ப இதனை மற்றவர்களால் [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது வாழ்க்கை | Leave a Comment »



