நிறைவான நினைவுகளுடன்…

கடந்த மாதம் 13 ஆம் திகதி முதல் தொடங்கிய “கிரிக்கட் காய்ச்சல்” கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் குணமாகியது என்றே சொல்ல வேண்டும். இம்முறை உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பல முக்கிய அணிகள் “சூப்பர் எயிட்” (Super Eight) குழுவுக்குள்ளேயே வரமுடியாமல் போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதியாட்டத்தில் இலங்கை மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய அணிகள் மோதிக் கொண்டன. போட்டியானது மைதானம் அமைந்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது. [...]