உலகம் – இது தத்துவம் பேச நினைப்பவன் யோசிக்கும் வார்த்தை. சில வேளை பேசும் வார்த்தையாக இருக்கவும் கூடும். நான் சிலவேளை நண்பர்களுடன் கதைக்கும் போது, “உலகம் உருண்டை” என்று கூறி சம்பாஷனைகளுக்கு பலம் சேர்ப்பதுமுண்டு.
உலகத்தைப் பற்றி உலகிலுள்ள விஞ்ஞானிகளோ, ஆராய்ச்சியாளர்களோ இன்னமும் முழுமையாக அறிந்து முடிக்கவி்ல்லை. அதற்குள் செவ்வாய்க்கு ஏக வேண்டும். நிலாவில் காணி வாங்க வேண்டும் என்ற ஆசைகளுக்கும், ஆர்வங்களுக்கும் குறைவேயில்லை.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பனவற்றின் அதீத முன்னேற்றத்தின் பயனாக, உலகமே ஒரு குக்கிராமமாக உருவெடுக்கும் வாய்ப்பு பற்றி பல்லாண்டு காலமாக எதிர்வு கூறப்பட்டு வருகின்றது.
இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவதோ, சுவாரஸ்யமான தகவல்தான். உலகத்தை வெறும் 100 பேர் மட்டும் வாழும் சிறிய கிராமமாக உங்களால் எண்ணிக் கொள்ள முடியுமா? இந்தப் பதிவை நீங்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டின், நீங்கள் கட்டாயம் 100 பேர் கொண்ட சிறிய கிராமமாக உலகத்தை எண்ணித்தான் ஆக வேண்டும்.
இதோ, நீங்கள் எண்ணிய சிறுகிராமம் பற்றிய தகவல்கள்…
கிராமத்தில் 61 பேர் ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களாவர். (இதில் 20 பேர் சீனர்களாகவும், 17 பேர் இந்தியர்களாகவும் இருப்பர்)
14 பேர் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
11 பேர் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
9 பேர் தென்அமெரிக்கர்களாவர்.
5 பேர் வட அமெரிக்கர்களாவர்.
அவுஸ்திரேலியா மற்றும் அந்தாட்டிக்கா கண்டங்களைச் சேரந்த எவரும் கிராமத்தில் இருக்க மாட்டார்கள்.
கிராமத்தில் 18 பேருக்கு மட்டுமே, வாசிக்க அல்லது எழுத முடியுமாக இருக்கும். அத்தோடு, 33 பேரிடம் கையடக்கத் தொலைபேசி காணப்படும். கூடவே, 16 பேர் தொடர்ச்சியாக இணையத்தில் இணைந்த படி இருப்பார்கள்.
கிராமத்தில் 18 கார்களே காணப்படும்.
33 பேர் கிறிஸ்தவர்களாக இருப்பர்.
20 பேர் முஸ்லிம்களாக இருப்பர்.
13 பேர் இந்துக்களாக இருப்பர்.
6 பேர் பெளத்தர்களாக இருப்பர்.
2 பேர் நாத்திகர்களாக இருப்பர்.
12 பேர் எம்மதத்தையும் சாராதவர்களாக இருப்பர்.
எஞ்சியுள்ள 14 பேரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.
கிராமத்தில் ஒருவர் எயிட்ஸ் தொற்றுக்கு இலக்காகி இருப்பார். ஆனால், கிராமத்தில் 26 பேர் புகை பிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர்.
இந்தத் தகவல்கள் சதவீதத்தில் குறிக்கப்பட வேண்டும். அதைக் கொஞ்சம் வித்தியாசமாக 100 பேர் கொண்டவொரு கிராமமாக உலகை உருவகித்து கூற விளைந்தேன்.
இந்தப் பதிவில் நான் சேர்க்காத தகவல்கள் ஏதும் இருந்தால் அவற்றை மறுமொழியாக நீங்கள் சொல்லலாமே!
-உதய தாரகை
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், இயற்கை, உலகம், கட்டுரை, சுவாரஸ்யம், செய்தி, மேற்கோள்




http://www.miniature-earth.com/ – இங்க இந்த 100 பேர் ஊரைப் பத்தின நிகழ்படம் கிடைக்கும்
100 பேர் கொண்ட கிராமத்தில் ஒருவருக்கு எய்ட்ஸ் தொற்றியிருப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள். அங்குள்ள ஏனையோருக்கு எய்ட்ஸ் தொற்றியிருக்காத பட்சத்தில் அந்த ஒருவருக்கு எப்படி எய்ட்ஸ் வந்திருக்கும்.
அப்பாடியோவ்….இவளுக்கு இதே வேலையாப் போச்சு என்று யோசிக்கிறது எனக்குப் புரியுது.
என்ன பண்ண நானும் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவள் தானே. மனிதன் என்றாலே மற்றையவர்களில் குறை காண்பது வழக்கம். இது எனக்குள்ள குறை. என்ன பண்ண, அந்த குறை அழகென்று கொள்வோம். அப்போ வாழ்க்கையில் பிழையே இருக்காது.
உங்கள் கருத்துக்கள், ஆய்வுகள் ஏனையவற்றிலிருந்தும் வித்தியாசப்பட்டிருக்கின்றன. நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தகவல்களையும் கட்டுரைகளையும் படைப்பது மட்டுமன்றி வாசிப்பவர்களையும் சிந்திக்க வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.