இளமைக் கால நினைவுகளை நினைப்பதிலும் பகிர்ந்து கொள்வதிலும் ஒரு சுவையே இருக்கிறது. அது இனிய சுவை – இன்பச் சுவை. தனிச் சுவை. வார்த்தைகளால் அந்த அனுபவத்தை வர்ணிக்க முடியாது.
என் இளமைக் காலக் கோலங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்தப் பக்கம். இதில் என்னிடம் இருக்கும் நிழற்படங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
“இது சுயம்” என்று இப்பக்கத்திற்கு தலைப்பிட்டதில் ஒரு பொருளுண்டு.
அதாவது, எனது விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதேயே இந்தப் பக்கம் மூலமாகச் நான் செய்வதனால் இதற்கு சுயம் என்ற சொல்லைத் தவிர வேறு எந்தச் சொல்லும் பொருந்தாது என்ற முடிவுக்கு வந்தேன். தலைப்பிட்டேன். (சும்மா தலைப்பை வைக்கிறது, பின்ன அதுக்கு விளக்கம் வேற சொல்றது!! இது ரொம்ப ஓவர்
)
சரி இதோ எனது நிழற்படங்களின் தொகுப்பு விரிகிறது.

வீட்டில் மூன்று சக்கர "துவிச்சக்கர வண்டி"
ஓடிக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட நிழற்படம்.

ஊரில் எனது நண்பனொருவனுடன் கடற்கரையை அண்டிய பகுதியொன்றில் இருந்த போது, எடுக்கப்பட்ட நிழற்படம் (இதில நண்பன் யார்? உதய தாரகை யார்? - என்று புதிர்ப் போட்டி ஏதும் வைக்கலாமா?
)

றோயல் கல்லூரி கால்பந்தாட்ட அணியில் நானும். எங்கே உதய தாரகை என தேடுகிறீர்களா? கண்டுபிடிங்க பார்க்கலாம்.
இப்போதைக்கு இவ்வளவும் போதும், அவ்வப்போது, புதிய நிழற்படங்களை சேர்ப்பேன். புதியது என்றால் இந்த இடத்திற்குத்தான் புதிது. ஆனால் நிழற்படங்கள் ஏற்கனவே எனது சிறுவயதில் எடுக்கப்பட்டவைதாம்.
தொடர்ந்தும் நிறத்துடன் இணைப்பிலிருங்கள்.
- உதய தாரகை



