மின்னஞ்சலில் இணையத்தள மாற்றங்கள்

இணையத்திலே 100 மில்லியன் பதிவு செய்யப்பட்ட இணையத்தளங்கள் உள்ளதாக நெட்கிராப்ட் (Netcraft) எனும் இணைய வளர்ச்சி தொடர்பில் ஆராயும் நிறுவனம் கடந்த மாதம் கருத்துத் தெரிவித்தது. இவ்வாறு 100 மில்லியன் தளங்கள் இருக்கின்ற பொது எமக்கு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்வதென்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாதான். தேடற்பொறிகளுக்கும் இந்த நிலையில் ஓய்வில்லாத வேலைதான். விசயத்திற்கு வருகின்றேன்.

நாம் தகவல்களைப் பெறுவதற்காக ஒரு இணையத்தளத்தினை அல்லது வலைப்பதிவினைப் பார்வையிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். இந்த இணையத்தளத்திலோ அல்லது வலைப்பதிவிலோ நாம் பார்வையிட்ட பின்னர் ஏற்படும் மாற்றங்களை அறிய ஆவலாய் இருந்தால் என்ன செய்யலாம்? வழமையாகச் செய்வது போல் குறிப்பிட்ட கால இடைவெளியில் குறித்த தளத்திற்கு மீண்டும் சென்று மாற்றங்களைக் கண்டு கொள்ளலாம். இந்த முறை பழையது. இதே விடயத்தினை புதிதான முறையில் கையாளுவதற்கு இன்னொரு இணையத்தளம் எமக்கு துணையாக வந்துள்ளது.

ப்ளோகோரிதம் (Blogarithm) எனப்படும் இந்த இணையத்தளத்தில் எமக்கு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதா? என்று அறிய வேண்டிய இணையத்தளத்தின் முகவரியையும், எமது மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்தால் போதும். குறித்த தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கே செய்தி வரும். நல்லதுதானே! இந்த புதிய முறை ஆர் எஸ் எஸ் ஊட்டங்களுக்கு (RSS Feeds) இயைபாக்கமில்லாத இணையத்தளங்களில் ஏற்படும் மாறுதல்களை அறிவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்….

ஒரு தடவை முயன்றுதான் பாருங்களேன்…