அதிசய கூகிள் தொடர் – 01

கூகிள் (Google) – ஓர் அறிமுகம்

இணைய உலகிலே, இன்றைய காலகட்டத்தில் கூகிள் என்ற சொல்லைப் பயன்படுத்தாது எந்த விடயம் சார்பாகவும்; கதைக்க முடியாதளவுக்கு கூகிள் மிக வேகமாக மக்களை ஆட்கொண்டுவிட்டது என்றே சொல்லவேண்டியுள்ளது.

அண்மையில் கூகிள் என்ற பெயர்ச்சொல் முக்கியமான ஆங்கில அகராதிகளில் தேடல் என்னும் வினைச்சொல்லின் ஒத்தகருத்துச்சொல்லாக (google) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவ்வாறு தேடல் எனும் வினைச்சொல்லிற்கு பதிலாக பல வேற்று மொழிகளிலும் கூகிள் என்ற சொல்லை சேர்த்து பயன்னடுத்துவதாக விக்கிபீடியா சொல்கிறது! தமிழில் தேடுவதை கூகிள் பண்ணு! என்று குறிப்பிடலாமெனவும் விக்கிபீடியா தரவுப்பக்கத்தில் குறிப்பிடப்படுகின்றது.

இத்தனை விடயங்களை கொண்டுள்ள கூகிள் எவ்வாறு தோற்றம் பெற்றது என முதலில் அறிந்து கொள்வோம்.

1995 இல், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University)சந்தித்த நண்பர்களான லெரி பேஜ் (Larry Page) மற்றும் சேர்ஜே பிரின் (Sergey Brin) ஆகிய இருவரும், குறித்த பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான சேவையகத்தில் (Server) நிறுவப்பட்டு இயங்கும் தேடற்பொறியான BackRub இனை, உருவாக்கினர். பின்னர், இத்தேடற்பொறிக்கு பல புதிய நுட்பங்களைப் புகுத்தி, புதிய தொழில்நுட்ப உத்திகளடங்கிய தேடற்பொறியை உருவாக்கி, அதற்கு Patent License ஐயும் பெற்றனர். இந்தத் தேடற்பொறி மூலம் பல இலட்சக்கணக்கான இணையத்தளங்களில் தேடல் மேற்கொள்ள முடியுமென்பதனால், ஒன்று எனும் இலக்கத்திற்கு பின்னால் நூறு பூச்சியங்களை சேர்ப்பதன் மூலம் தோன்றும் எண் பெறுமானத்திற்கு ஆங்கிலத்தில் பாவிக்கப்படும் ‘Googol’ எனும் பெயரை இந்தத் தேடற்பொறிக்குச் சூட்டத் தீர்மானித்தனர். ஆனால், பிழையாக எழுத்துக்கூட்டப்பட்டதால், Google எனும் பெயர் இந்த தேடற்பொறிக்கு வந்தது.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் Google ஸ்தாபனம் நிறுவப்பட்டு, அதன் Google எனும் Search Engine உம் இணையப் பயனர்களுக்கு விருந்தாக வந்து சேர்ந்தது. இன்றைய நிலையில் கூகிள் இணையத்தின் எல்லா நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது வெள்ளிடை மலை.

இவ்வாறான கூகிள் எனும் பாரிய இணையச் சேவை வழங்கும் நிறுவனம், தமது நிறுவனத்தில் வேலை செய்வதற்காக பொருத்தமான ஆளுமைகளை தெரிவு செய்யும் முறை வித்தியாசமானது அத்தோடு சுவாரஸ்யமானது.!! இதுபற்றி அதிசய கூகிள் தொடர் 02 இல் பார்ப்போம்… உங்கள் கருத்துக்களையும் அனுப்பி வையுங்கள்..

One thought on “அதிசய கூகிள் தொடர் – 01

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s