இன்னொரு ஆண்டு பிறக்கிறது…

இன்னும் இரண்டு நாட்களில் புதிய ஆண்டு ஒன்று ஆரம்பிக்கப்போகிறது. இந்த ஆண்டில் நாம் செய்தவைகள் என்ன? செய்ய நினைத்தும் செய்ய மறந்தவைகள் என்ன? அல்லது செய்ய முடியாமல் போனவை என்ன? என்பது பற்றியெல்லாம் எண்ணத் தொடங்கிவிட்டீர்களா??

ஆனாலும், உலகத்தில் கடந்து செல்லும் இவ்வாண்டில் என்ன நடந்தது? அவற்றின் முக்கியத்துவம் என்ன? என்பவை பற்றியெல்லாம் அறிந்து வைத்திருத்தல் வேகமாக உலகில் விவேகமாக நிலைத்து நிற்பதற்கு கட்டாயம் அவசியம்.

கடந்து செல்லும் இவ்வாண்டு எமக்காக விட்;டுச் சென்ற நினைவுகள் பெறுமதியானவை… முக்கியமானவையும் கூட.. அவையாவற்றையும் அடுக்கிவிட இந்ந இடம் அவகாசம் தராது. இருந்தும் முக்கியமான விடயங்களைப் பற்றி குறிப்பாக தெரிந்து வைத்துக் கொள்வோம்…

kuwait-voting-women.jpg2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 29ஆம் திகதி குவைத் நாட்டில் வாழும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை முதன்முறையாக வழங்கப்பட்டது. படத்தில் குவைத் பெண்மணியொருவர் வாக்களிப்பதையே காண்கிறீர்கள்.


30-4_worldcup_italy.jpgஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் மோதின. அதில் இத்தாலி உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. படத்தில் இத்தாலி நாட்டு கால்பந்தாட்ட அணி கிண்ணத்தை பெற்ற மகிழ்ச்சியில் இருப்பதையே காண்கிறீர்கள். இது ஜுலை மாதம் 09ஆம் திகதி இடம்பெற்றது.

 


Yahoo தேடற்பொறியில் 2006ஆம் ஆண்டு அதிகமாக தேடப்பட்ட தனிநபரின் பெயர் பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) என்பதாகும். இவர் இளம் மனங்களை கொள்ளை கொண்ட பெரும் புகழ் படைத்த பொப் பாடகர் ஆவார். படத்தில் பிரிட்னியையே காண்கிறீர்கள்.இவரின் தனிப்பட்ட வாழ்க்கையானது மிகவும் அசௌகரியங்கள் நிறைந்ததாகவே உலக ஊடகங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன. இருந்தும் இன்னும் பாடகியாகவே இவர் பவனிக்கின்றார்.

 


குறிப்புகள்

 

  • நவம்பரில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜெரால்ட் போட் காலமானார்.
  • பெப்ரவரியில் அமெரிக்காவின் உப ஜனாதிபதி டிக் செனி, வேட்டையாடும் போது தவறுதலாக தன்னோடு வந்த நண்பரின் முகத்தில் சுட்டார்.
  • ஜனவரியில் தேம்ஸ் நதிப்பக்கமாக பெரியதொரு திமிங்கலம் மிதந்தது. அநேகமானோர் இதனைக் காண நதிக்கரையோரம் வந்திருந்தனர்.
  • கார்டஸில் (Gardasil) எனப்படும் புதிய வக்சீன் முள்ளந்தண்டு புற்று நோய்க்கு எதிராக பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. இது 75 சதவீதம் நோய் வராமல் தடுக்குமென சொல்லப்படுகின்றது

இன்னும் வரும்… அதுவரை பொறுமனமே…

நீங்கள் நான் நாம்

என்ன தலைப்பைக் கண்டு ஒரே குழப்பமாய் இருக்கிறதா? இது இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தினைப் பற்றிப் பேசுவதற்காகவே செய்யப்பட்டது. இன்றைய நாள் டிசம்பர் முதலாம் திகதி – உலக எய்ட்ஸ் தினமாக நினைவுகூறப்படுகிறது. இந்த ஆண்டின் தொனிப்பொருளாக, நீங்கள் நான் நாம் (You Me Us) என்ற வாசகமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் – ஒரு சிவப்பு பட்டியை அணிந்து கொள்ளுங்கள் (You – Wear a Red ribbon) . நான் – மக்களிடம் பேசுங்கள் (Me – Talk to people) . நாங்கள் – நிகழ்வுகளில் ஈடுபடுவோம் (Us – Get involved in Events) என்பதாகும்.

strap1.gif

உலகம் பூராகவும் சுமார் நாற்பது மில்லியன் மக்கள் HIV எனும் எயிட்ஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகின்றது. இங்கிலாந்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர் HIV தொற்றுக்குள்ளாவர்கள் வாழ்வதோடு, ஒவ்வொரு வருடமும் HIV தொற்றுக்குள்ளாவர்கள் 7000 பேர் புதிது புதிதாக இனங்காணப்பட்டு வருகின்றனர். இந்த எயிட்ஸ் பரவுவற்கு, இதுபற்றிய விழிப்புணர்வு இன்மை பிரதான காரணமென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இன்று எனது நண்பர் ஒருவர் உலக எயிஸ்ஸ் தினத்தை ஒட்டி, அது தொடர்பான ஒரு நிழற்படத்தினை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். அதனையே இங்கு தருகின்றேன்.

aids-day_1.jpg

எயிட்ஸ் எனும் நோயினை புவியிலிருந்து ஒழிப்பதற்கு அல்லது அதன் வியாபிப்பை கட்டுப்படுத்துவதற்கு குறித்த நோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்திக்கொள்ளுதல் காலோஷிதமானதாகும். நீங்கள், நான், நாம் எல்லோரும் சேர்ந்து எயிட்ஸ் நோயை இல்லாதொழிக்க முயற்சி செய்திடுவோம்!! “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”