மொழி கடந்த பார்வை

இயற்கை என்பது பெருங்கொடையாகும். இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் நாதம் இருக்கும். நிறைவான நிம்மதி இருக்கும். இயற்கையை இரசிக்கக் கற்றுக் கொண்டவனின் வாழ்வில் சந்தோசம் இதமாகத் தாலாட்டும். இயற்கையை பற்றி வியந்து பாடாத கவிஞர்களே இல்லையெனும் அளவிற்கு கலையார்வளர்களை இயற்கை கட்டிப்போட்டு வைத்துள்ளது.

இதிலிருந்து இயற்கையை இரசிப்பவனே கவிஞனாக முடியுமென்றும் கருத்துக் கொள்ளலாம் என பொதுவாக எண்ணத் தோன்றுகிறது. இயற்கைக்கு மொழி கிடையாது. அனைத்தும் காட்சிகளின் வண்ணமயமான கோலங்கள்! காட்சிகளை இரசிக்கும் பாங்கில் அவரவர் மொழிக்கேற்ப இதனை மற்றவர்களால் அனுபவிக்க வழங்கும் ஆற்றல் மொழியால் காட்சிகளைச் செதுக்கும் வல்லமை கொண்ட கவிஞர்களுக்ககே உரித்தான மிகப் பெரிய சொத்தாகும்.

இயற்கையை இரசிப்போம். இனிய இன்பங்களை ருசிப்போம்.!!

மொழி கடந்த பார்வையாய் சில நிழற்படங்களை இங்கே தருகிறேன். இதோ உங்கள் பார்வைக்கு இயற்கையின் இனிமையான இருப்புக்கள்!!

new.jpg

வானம் தெரிகிறதோ இல்லையோ… வாழ்வின் கானம் இக்காட்சியில் ஒலிக்கிறது.

new-1.jpg

காட்சியில் சூரியனைக் காணவில்லை. ஆனால், சூரியனின் பாதிப்பு காட்சியில் பளிங்காக ஜொலிக்கிறது.

new-2.jpg

இங்கே கார் நிற்பதைப் காண்பதா? இயற்கையின் விசித்திரமான வியாபிப்பை காண்பதா?

new-3.jpg

மழை பெய்யப்போகிறதோ? ஆனாலும் மலர்கள் இன்னும் செழிப்பாகத்தான் நிற்கின்றன.

new-4.jpg

எனக்கொரு வரம் வேண்டும். நான் மட்டும் பிரபஞ்சத்தில் ஒரு வீட்டில் தனித்திருக்க வேண்டும்.

-உதய தாரகை