பல்லே லக்கா பல்லே லக்கா… என ஆரம்பமாகும் பாடலை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். சிவாஜி படத்தில் இந்தப் பாடல் இடம் பெறுகின்றது என்பதை நான் சொன்னால், அது “சிறு பிள்ளைத் தனமாகி விடும்”. சரி மேட்டருக்க வர்ரேன்.
சூரியனும், சந்திரனும் எப்போதும், அதன் தொழிற்பாட்டை செய்து கொண்டே இருக்கும். யார் கண்ணை மூடினாலும், யார் கண்ணைத் திறந்தாலும் சூரியனோ சந்திரனோ அவர்களுக்காக மறைவதும் இல்லை தெரிவதும் இல்லை. சூரியன் தன்பாட்டிலேயே தனது கடமைகளைச் செய்து கொண்டிருக்கும். அது சூரியன்.
“இதென்ன ஒரே தத்துவம்ஸ் தத்துவம்ஸ் ஆக சொல்றன் என்டு நெனைக்க வேணாம்”
இன்று நான் உங்களுடன் சூரிய கிரகணம் பற்றிக் கதைக்கலாமென எண்ணினேன். கீழேயுள்ள நிழற்படத்தை ஒரு தடவை நன்றாகப் அவதானியுங்கள்.
இந்தப் படம் சூரிய கிரகணம் ஒன்றின் போது, பூமி காட்சியாகும் கோலத்தைத் தெளிவாகக் குறித்து நிற்கிறது. சந்திரனின் நிழலே இப்படத்தில் இருண்ட பகுதியாகக் காட்சியாகிறது. இந்த நிழலானது, மணிக்கு 2000 கிலோ மீ்ற்றர் என்ற வேகத்தில் பூமி வழியாகப் பயணிக்கும். இந்த இருண்ட பகுதியின் நடுவில் இருந்து அவதானிப்போருக்கு மாத்திரமே பூரண சூரிய கிரகணம் தென்படும்.
ஏனையவர்கள் குறைச் சூரிய கிரகணத்தையே காணமுடியும், அதாவத, சந்திரனால் ஒரு பகுதி மறைக்கப்பட்ட சூரியனையே காண்பார்கள்.
மேலே நீங்கள் அவதானித்த படமானது, 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தை குறித்து நிற்கிறது. இது மிர் விண்வெளி ஆய்வகத்தினால் எடுக்கப்பட்ட இறுதி படமும் கூட என்பது போனஸ் தகவல்.
இந்தப் படத்தின் இடது பக்க மேல் மூலையில் காணப்படும் இரு பிரகாசமான புள்ளிகள் வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் என நம்பப்படுகிறது. ஆனாலும் இதுவரையில் இந்த விடயம் ஊர்ஜிதப் படுத்தப்படவில்லை.
சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் ஏற்படும் வேளையில் சில காரியங்களைச் செய்யக்கூடாது என சொல்லுவார்கள் அதுபற்றி நீங்கள் ஏதும் அறிந்திருந்தால் மறுமொழியாகக் குறிப்பிடலாமே!
சூரியனும் சந்திரனும் சட்டென நேராக வரும்போது கிரகணம் ஏற்படும் என்பது நீங்கள் அறிந்ததே!
-உதய தாரகை
rompethan jollu paravillai paravailla
very good !
please don’t stop it.
hats of your work.