குருதி என்றால் சிவப்புத்தானே!!

நான் இன்று காபன் மொனொக்சைட்டு வாயுவானது, மனிதனின் சுவாசத் தொகுதியில் ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள கூகிள் செய்த போது, ஒரு அதிசயமான செய்தியொன்றைக் கண்டு கொள்ள வாய்ப்பேற்பட்டது. பொதுவாகவே, சாதாரண நிலைகளிலிருந்து முற்றிலும் வேறுபடும் தன்மைகளே அதிசயங்கள் என வரையறுக்கப்படும். அதிசயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். அது இப்பதிவாயிற்று.

Mr Spockநீங்கள் ஸ்டார் ட்ரெக் (Star Trek) எனும் வினோதமான மனிதர்கள் தொடர்பான நாடகத் தொடரைக் கண்டு களித்திருப்பீர்கள். அதில் ஒரு பாத்திரம் இருக்கிறது. பெயரோ Mr Spock என்று சொல்லப்படும். அந்தப் பாத்திரம் சாதாரண மனிதரில் இருந்து வேறுபடும நிலைகள் அதிகமாகக் காணப்பட்டாலும், ஒரு இயல்பு மட்டும் முக்கியமானது. அது நான் சொல்லப்போகும் விடயத்திற்கு நேரடியாகவே பொருந்தக்கூடியது.

அண்மையில், கனடாவிலுள்ள வைத்தியசாலையொன்றில், 42 வயதான ஒருவருக்கு மருத்துவர் குழுவொன்று சத்திர சிகிச்சை செய்து கொண்டிருந்தது. அத்தருணம், அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விடயமொன்று அரங்கேறியது.

அது என்ன அதிசயம்? நீங்கள் ஆவலாக இருப்பது புரிகிறது.

சத்திர சிகிச்சை செய்யும்போது அவர் உடலிலிருந்து வெளியான இரத்தம் தான் அதிசயத்திற்கு காரணம். குருதி, இரத்தம் என்றால் சிவப்புத்தானே! சிவப்பு நிறத்தை நீங்கள் சிலவேளை “ரெத்தக் கலர்” என்று கூடச் சொல்லியிருக்கலாம். ஆனாலோ, மருத்துவர்கள் குறித்த நோயாளியின் உடலில் இருந்து வெளிவரக் கண்ட இரத்தத்தின் நிறமோ பச்சையாகும்.

ஆச்சரியத்தில் ஆழ்ந்த இந்த மருத்துவர் குழு, குறித்த இரத்தத்தின் மாதிரியை பரிசோதனைக்காக உடனடியாகவே அனுப்பியது. பின்னர், கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் படி, இந்த நிறமாற்றத்திற்கு காரணம் சல்பீமோகுளோபினேமியா (sulfhaemoglobinaemia) என்ற அசாதாரண நிலையே எனக் கண்டறியப்பட்டது.

கந்தக அணுக்கள், குருதியில் ஒட்சிசனைக் காவிச் செல்லும் புரதங்களான ஈமோகுளோபினுடன் தாக்கமடையும் நிலையே sulfhaemoglobinaemia என்று சொல்லப்படும்.

குறித்த நோயாளி ஒருபக்க தலைவலிக்காக எடுத்துக் கொண்ட “சல்பனமைட்” மருந்துகளாலேயே இந்நிலை ஏற்பட்டிருக்கலாமென சந்தேகித்த வைத்தியர்கள், குறித்த மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என நோயாளிக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். ஐந்து கிழமையின் பின்னர் நோயாளி முற்றாக குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Mr Spock இன் பாத்திரம் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். இவருக்கும் குருதியின் நிறம் பச்சையாக இருந்தாலும், அப்பச்சை நிறம் ஈமோகுளோபின் புரதத்திலுள்ள இரும்பு மூலகத்தை செப்பு மூலகம் பிரதியிடுவதாலேயே தோன்றியது என நாடகத் தொடரில் விளக்கம் சொல்லப்படும்.

ஆக, இந்த இரு நிலைகளிலும் ஒற்றுமையாகவுள்ளது – “நிறம்” ஒன்றேதான்!

-உதய தாரகை

2 thoughts on “குருதி என்றால் சிவப்புத்தானே!!

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s