ஒரு ரூபாயும் கொல்லும்

rupee.gifஇன்று நான் உங்களுடன் ஒரு ரூபாய் பற்றி கொஞ்சம் பேசலாம் என்றிருக்கேன். ஒரு ரூபாய் என்பதை விட ஏதாவது நாணயக்குற்றி என்றும் சொல்லலாம். நாணயக்குற்றிகள் பொதுவாக உலோகத்தால் ஆக்கப்பட்டிருக்கும். ஒரு நாணயத்தில் தனியே ஒரு உலோகமோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உலோகங்களோ சேர்க்கப்பட்டிருக்கும்.

அண்மையில் நான் ஒரு விஞ்ஞான இணையத்தளமொன்றில் இந்த நாணயத்தைப் பற்றி அறிந்து கொண்ட விடயம் ரொம்ப ஆச்சரியமானது. ஆச்சரியத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். என்ன ஆச்சரியம் என நீங்கள் ஆச்சரியமே உருவாய் காணப்படுவது எனக்குப் புரிகிறது.

நாணயம் ஒன்றுக்கு மனிதனைக் கொல்லும் சக்தி கிடைத்திருக்கிறது. எப்படி என்று பார்க்க இங்கேதான் ஆச்சரியமே எழுகிறது.

நீங்கள் 1250 அடி உயரமான ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து ஒரு நாணயத்தை சுண்டி விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது தரையை அடைவதற்கிடையில் அதன் வடிவம் சார்பாக வளியுடன் அது உணரும் உராய்வு அதனை மனிதனைக் கொல்லும் ஆயுதமாக மாற்றிவிடுகிறது. நீங்கள் சுண்டிய நாணயம் கட்டடத்திற்கு கீழே நடந்து செல்பவரின் மீது விழுந்தால், அவர் நிலையோ துரதிர்ஷ்டம்தான் என விஞ்ஞானம் செப்புகிறது.

என்னங்க… ஒரு ரூபாய் நாணயத்திற்குமா இவ்வளவு முடியுது? ஆமா, நீங்க யோசிக்கிறது எனக்குப் புரியுது. நம்ம சிவாஜி ஒரு ரூபாய் காசை வச்சி என்னமெல்லாம் பண்றாரு. அதனால இது பெரிசில்ல.. என்னுதானே நெனக்கிறீங்க…

எனக்கு பதிவுகளைப் போடும் போது, சினமாவை தொடுக்காமல் இருக்க முடிவதில்லை என்று நீங்கள் குற்றம் சாட்டலாம். ஆனால், நீங்கள் நினைக்கும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும் என்ற அனுமானம் தான் இப்படியெல்லாம் சொல்ல வைக்கிறது. என்ன செய்ய??

திரைப்படத்தைப் பற்றி எழுதுறது. போதாக்குறைக்கு ஏன் எழுதினோம் எங்கிறத்துக்கு Justification வேற என்று என்னை பார்த்து நீங்கள் கேட்கத் துடிப்பதும் எனக்குப் புரிகிறது.

சரி.. சரி.. ஓவராப் பேசிட்டேனோ???

நீங்கள் இந்தத் தகவலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என மறுமொழியாகச் சொல்லுங்களேன்…

-உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s