ஆறுக்குப் பின்னால் ஏழு

எண்கள், அதிர்ஷ்டம் என்பன ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புள்ளதாக ஆண்டாண்டு காலமாக, உலகிலுள்ள மக்களால் நம்பப்பட்டு வருகிறது. எண்கள் பற்றிக் கதைக்கும் காரணம், நான் அண்மையில் எனது நண்பர் ஒருவரிடமிருந்து Forward மின்னஞ்சல் ஒன்றைப் பெற்றிருந்தேன். அந்த மின்னஞ்சல் எதிர்வரும் சனிக்கிழமை பற்றி கொஞ்சம் ஓவராகவே சொல்லியிருந்தது.

கடந்த வருடமும் ஜுன் மாதம் ஆறாம் திகதி தொடர்பில் இதே நிலைதான் அவதானிக்கப்பட்டது. அதாவது, கடந்த வருடம் ஜுன் 06 என்பது 06/06/06 என்ற வகையில் அமைந்திருந்ததே இதற்குக் காரணம். இந்த வருடமும் எதிர்வரும் சனிக்கிழமை, ஜுலை மாதத்தின் முதல் சனிக்கிழமை 07/07/07 என்றவாறாக அமைகிறது. இதுவே அந்த மின்னஞ்சலி்ல் குறிப்பிடப்பட்டிருந்தது.

மின்னஞ்சலைப் பார்த்தவுடன் எனக்கு, இந்த விடயம் தொடர்பாக ஆராய வேண்டும் எனத் தோன்றியது. தேடினேன். கொஞ்சம் கொஞ்சமாய் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அவை அனைத்துமே சுவாரஸ்யம் மிகுந்தவை. சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்வதில் எனக்கு நிறைய ஆர்வம் ஆதலால் 07/07/07 எனும் விடயம் பதிவாக உருவாயிற்று.

seven.jpgஏழு என்ற எண் மும்முறை தொடராக வருவது தமக்கு அதிர்ஷ்டத்தை அளிக்குமென உலகில் உள்ள பலரும் நம்பி, அந்த நாளில் முக்கியமான கருமங்களை தொடங்க காத்திருக்கிறார்கள். அதிகமான திருமணங்கள் இந்நாளில் நடைபெறவும் ஏற்பாடாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கிறிஸ்தவர்களின் புனித சமய நூலான பைபிளில் அதிகமாகவும், முக்கிய இடங்களிலும் ஏழு என்ற எண் காணப்படுவதால் இந்த எண் அதிர்ஷ்ட எண்ணாகக் கணிக்கப்படுகிறது என வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எமது விதிகளைத் தீர்மானிப்பதில் எண்களுக்கு ஏதும் பங்குண்டா? எனப் பார்த்தால், இது தொடர்பில் பல தகவல்கள் இருக்கின்றன.

சில பேர் வெள்ளிக்கிழமையாகவுள்ள 13ஆம் திகதிகளில் திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள். கூடவே, இன்னும் சிலரோ 666 என்ற இலக்கமுடைய வீட்டில் குடியிருக்க விரும்புவார்கள். ஆனாலும் ஏழு என்ற இலக்கம் எந்த விடயத்தல் சம்பந்தப்பட்டாலும் அது அவர்களுக்கு நன்மை பயக்கும் என நம்புவோர்கள் தான் அதிகமாக உள்ளனர்.

எண்கள் பற்றியதில் 6, 7, 13 போன்ற எண்கள் மட்டுமே அதிர்ஷ்டம் கொண்டவை என சொல்ல முடியாதெனவும், இந்த எண்கள் தொடர்பான ஆர்வங்கள் புராதன காலந்தொட்டே நடந்து வருவதாக, வரலாற்றாசியர்கள் குறிப்பிடுகின்றனர்.

12, 5 போன்ற இலக்கங்கள் கூட அதிகளவி்ல் அதிர்ஷ்டம் உள்ள இலக்கங்களாகக் கணிக்கப் படுவதாக நியூ கம்ஸெயர் பல்கலைக்கழகத்தின் சமயக் கற்கைகள் மற்றும் வரலாறு தொடர்பான பேராசியர் David Frankfurter தெரிவிக்கிறார்.

அதி்ர்ஷ்ட எண்கள் கலாசாரம், நம்பிக்கைகள், விருப்பங்கள், நிகழ்வுகள் என்பவற்றுக்கேற்ப வேறுபட்டுக் காணப்படுகின்றன. நல்ல நிகழ்வொன்று ஒரு தினத்தில் நடந்தால் அந்தத் தினம் என்ன இலக்கம் உடையதாகவிருந்தாலும், அது அதிர்ஷ்ட நாளாகிவிடும். அத்தினத்தின் எண்ணும் அதிர்ஷ்ட எண்ணாகிவிடும் என்பது உண்மையான கூற்றாகும்.

சீனர்கள் இலக்கங்களின் அதிர்ஷ்டத்தை துணிவதில் அந்த இலக்கத்தை உச்சரிக்கும் தன்மையை கவனிக்கிறார்கள். எட்டு என்ற இலக்கம் சீன மொழியில் உச்சரிக்ககப்படும் முறையானது, செளபாக்கியம், செல்வம் ஆகிய சொற்களின் உச்சரிப்போடு மிகவும் நெருக்கமாகவுள்ளது. இதனாலோ என்னமோ தெரியவி்ல்லை, 2008 ஆம் ஆண்டு பீஜிங் நகரில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட ஏற்பாடாகியுள்ளது. இங்கும் 08/08/08 என எண்கள் அமைகிறது.

இருந்தாலும், சீனர்கள் மரணத்தோடு இணைந்த துரதிஷ்ட எண்ணாக இலக்கம் ஏழை (7) கருதுகின்றார்கள் என்பது அதிர்ச்சியான தகவல்தான். ஏழு – சீனர்களுக்கு அதிர்ஷ்டமில்லாத இலக்கம். ஆனால், அது உலகுக்கே அதிர்ஷ்டமான இலக்கமாக இருக்கிறது. இது தான் வாழ்க்கை.

07/07/07 என்ற திகதியில், அதாவது எதிர்வரும் சனிக்கிழமை ஏதும் விஷேட நிகழ்வுகள் இருப்பதாகப் பார்த்தால், அன்றுதான் உலகின் புதிய 7 அதிசயங்கள் (New 7 Wonders) போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் அறிவிக்கப்பட இருக்கிறது. நீங்கள் Vote பண்ணி விட்டீர்களா? புதிய உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் நீங்கள் பங்காளர் ஆகலாம். இன்னும் ஒரு நாளும் ஒரு சொட்டு மணித்தியாலங்கள் மாத்திரம் தான் இருக்கு. உடனே சென்று Vote பண்ணுங்க… நம்ம தாஜ் மஹாலுக்கு…

ஏழு பற்றி நீங்கள் இன்னும் பல தகவல்களை அறிந்திருக்கலாம். அவற்றை மறுமொழியாகச் சொல்லலாமே!!

-உதய தாரகை

One thought on “ஆறுக்குப் பின்னால் ஏழு

  1. // இருந்தாலும், சீனர்கள் மரணத்தோடு இணைந்த துரதிஷ்ட எண்ணாக இலக்கம் ஏழை (7) கருதுகின்றார்கள் என்பது அதிர்ச்சியான தகவல்தான்.//

    ம்.. இருக்கலாம். எனக்கும் சில நண்பர் நண்பிகள் இருந்தார்கள். அவர்களுக்கு எதிலும் ஒருபோதும் திருப்தி என்பது கிடையவே கிடையாது. எந்தநேரமும் ஏதாவது குறை சொல்லிக்கொண்ட இருப்பார்கள். தங்களை திருத்த அவர்கள் ஒரு போதும் முயற்சித்ததில்லை. சரியான சோம்பேறிகள். சீனர்களுக்கு சோம்பேறிகளைப் பிடிப்பதில்லைதானே. அதுவாக இருக்கலாம்.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s