நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

கடந்த மாதம் எனது ஊரில் ஒரு அதிசய நிகழ்வு இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டேன். அதனைச் சரியாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கடந்த வாரம் ஊரிலிருந்து வந்த எனது நண்பர் ஒருவரைச் சந்திக்க வாய்ப்பேற்பட்டது. இதன் போது, ஊரில் இடம்பெற்ற அதிசய நிகழ்வு பற்றி அவரிடம் விசாரித்தேன். அவரோ தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்த குறித்த அதிசய தென்னை மரத்தின் நிழற்படத்தை என்னிடம் காட்டி அசத்திவிட்டார்.

நீங்கள் இப்போது புதிர் போல நான் பேசிக்கொண்டிருப்பதாக எண்ணுவது போல் தோன்றுகிறது. இதோ அந்த அதிசய நிகழ்வைப் பற்றி நண்பர் என்னிடம் கூறிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

ஒருவர் தனது வீட்டு வாசலில் தென்னை மரக்கன்றொன்றை நட்டிருக்கிறார். அதுவும் அவர் இட்ட நீர் மூலம் வளர்ந்து கொண்டு வந்திருக்கிறது. இது நடப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் அந்தத் தென்னை மரம் மிக வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது. 15 ஆம் நாளில் அந்த மரத்தில் 12 சிறிய இளம் தேங்காய்கள் உருவாகியிருக்கிறது. இதைக் கண்ட வீட்டுக்காரர் அதிசயத்தில் உறைந்து போக, இந்த அதிசய நிகழ்வு பற்றிய செய்தி ஊர் முழுக்கக் காட்டுத் தீயாய் பரவியதாம்.

மக்கள் பலரும் சாரி சாரியாக வந்து இந்த அதிசய தென்னை மரத்தைக் கண்டு ஆச்சரியமே உருவாய் சென்றனராம். என்னால் நம்பவே முடியவில்லை இருந்தும் தனது கையடக்கத் தொலைபேசிக் கமராவினால் எடுத்த நிழற்படங்களை எனக்கு நண்பர் காட்டியதும் வேறு வழியின்றி நம்பியேயாக வேண்டும் என்று தோன்றியது.

இவ்வாறான நிகழ்வுகள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்படி நிகழ்வைக் நேரடியாகக் கண்டவருடன் கதைக்கக் கிடைத்தது குறித்த நிகழ்வை நேரில் பார்த்தது போன்ற பிரமிப்பைத் தந்தது.

அவரின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து எனது கையடக்கத் தொலைபேசிக்கு Bluetooth தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த நிழற்படங்களைப் மாற்றிக் கொண்டேன். இதோ உங்கள் பார்வைக்காக அவற்றைத் தருகிறேன்.

நம்பினால் நம்புங்கள்..

zeezat-11.jpg


zeezat-1.jpg


zeezat.jpgநீங்கள் இந்த நிகழ்வைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என மறுமொழியாகச் சொல்லலாமே! இது போன்ற அதிசய நிகழ்வுகளை நீங்கள் நேரடியாகக் கண்டிருந்தால் அதுபற்றிய உங்கள் அனுபவங்களைக் கூட நிறத்துடன் பகிர்ந்து கொள்ளலாமே!-உதய தாரகை

One thought on “நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

  1. இயற்கையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் தான் பிற்காலத்தில் வரலாறாக உணரப்படும். நிறத்தின் மூலமாக இயற்கையின் மாறுதல்களை அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமை எனக்கு மகிழ்ச்சியையே தருகின்றது. நன்றிகள் பல..

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s