பல் போனால் இதயமே போகுமாம்!!!

“பல் போனால் சொல் போகும்” என்று கேட்டிருக்கிறோம். அதென்ன இதயம் போகும் என்ற கதை… என்று நீங்கள் கேட்டபது புரிகிறது. என்னங்க செய்வது, விஞ்ஞானிகள் புதுசு புதுசா பல விசயங்களைப் பற்றி ஆய்ந்தறிந்து அதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தத் தகவல்கள் இன்றளவில் மனிதனின் வாழ்க்கை முறை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை உண்டு பண்ணியுள்ளதெனலாம்.

பல்லே சொற்களை உச்சரிக்க மிகவும் துணை நிற்பதாகும். ஆனால் அவை இழந்து போக நாம் சொற்களை தெளிவாக உச்சரிக்க முடியாமல் தவிக்க நேரிடும்.

குருதிக்குழாய்களான நாடி மற்றும் நாளம் ஆகியவற்றில் தடை ஏற்பட்டுள்ள நோயாளிகள் பலருக்கும், பல் சீமெந்து தொடர்பான தாக்கங்கள் இருப்பதாக அண்மையில் வைத்திய குழுவொன்று ஆய்ந்தறிந்துள்ளது.

இதனால், பற்களை நன்றாக பற்தூரிகை கொண்டு சுத்தப்படுத்தல் எம்மை இதய நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வழியேற்படுத்தும் என ஆய்வில் ஈடுபட்டவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.

பற்கள் தொடர்பான நோய்கள் குறுகிய காலத்திலும், நீண்ட காலத்திலும் வரக்கூடியனவாகும். இந்த நோய்கள் இதயம் தொடர்பான நோய்களுடன் நேரடியாகவே தொடர்புற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பற்களிடையே கழிவுகள் மற்றும் உணவுக்கூறுகள் எஞ்சி தேங்குவதால் அவை பற்களையும், அதன் சீமெந்தையும் சிதைவடையச் செய்யும் வல்லமை உடையன. இதனால் நீண்ட கால பல் சீமெந்து தொடர்பான Periodontitis எனும் நோயேற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இதனால் பற்களை அன்றாடம் சுத்தம் செய்தல் இவ்வாறான நோய்கள் எம்மை தாக்காமலிருக்க வழியை ஏற்படுத்தும்.

பற்களை சுத்தம் செய்யாமல் இருந்தால், அவை தனது வலிமையை இழந்து கழன்று விழுந்து விடக்கூடிய நிலைகளையும் நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.

ஆனாலும், பற்கள் தொடர்பான நோய்கள், இதயத்தை தாக்கி நோய்கள் ஏற்படுத்துவதற்கான தெளிவான காரணங்கள் உணரப்படாமல் இருக்கின்றது. இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டு சிதைவடைந்த பற்களிலிருந்து விடுவிக்கப்படும் பக்றீரியாக்களாகிய நுண்ணங்கிகள் இதய நோய் உண்டாக்குவதற்கு மூலமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

எது எவ்வாறிருந்த போதும் பற்களை அன்றாடம் மறக்காமல் தீட்டிக் கொள்தல் எல்லாவற்றிற்கும் நல்லதே! என்பதுதான் இப்போதைய Medical Advice.

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை தடவை பல்துலக்க வேண்டுமென சிபாரிசு செய்கிறீர்கள் என்பதை மறுமொழியில் சொல்லலாமே!

-உதய தாரகை

One thought on “பல் போனால் இதயமே போகுமாம்!!!

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s