மனிதன்: பலவீனங்களின் மொத்த வடிவம்

மனிதனின் ஆளுமைகளை நோக்கும் போது, பலவீனங்களின் மொத்த வடிவமாக அவனை எப்படிச் சொல்ல முடியுமென்று நீங்கள் கேட்கலாம்?

மனிதனின் பலவீனங்களின் மொத்த வடிவமாகவே உலகில் பிறக்கின்றான். உலகிலுள்ள உயிர்களின் பலவீனத்தின் வடிவம் தான் மனிதன் என சொல்ல வேண்டியுள்ளது. ஏன் இப்படி மனிதனை பலவீனங்களின் மொத்த வடிவமாக இனங்காண வேண்டும்.

தொடர்ந்து படிக்க…

நிறம் என்றால்…

நிறம் – COLOUR என்பதுதான் எனது இவ்வலைப்பதிவின் பெயர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வலைப்பதிவு ஏன் நிறம் என்ற பெயரைக் கொண்டிருக்க வேண்டும் என நீங்கள் யோசித்திருக்கலாம் அல்லது நிறம் என்ற பெயரை ஏன் நான் எனது வலைப்பதிவின் பெயராக வைக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம்.

“நிறம்” சொல்லும் விடயங்கள் ஏராளம். ஏராளம். இதோ நான் சொல்கிறேன் இவ்வலைப்பதிவு ஏன் நிறம் எனப் பெயர் கொண்டதென்பதை.

தொடர்ந்து படிக்க…

இருள் விலகட்டும் என்று பாடிய நாள்

அண்மையில் எனது புத்தக அலுமாரியில் (Book Shelf) நூலொன்றை தேடிய போது, எனது பழைய கால நினைவுகளை மீட்டிக் கொள்ளக்கூடிய வகையில் பல விடயங்கள் கண்களில் பட்டன. அவை நெஞ்சத்தைத் தொட்டன.

அந்த நினைவுகளை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். அவை இப்பதிவாயிற்று. சிறு பராயம், கடந்த காலம் என்பன சுவையான நினைவுகளைக் கொண்டது என்பதில் இரு வேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.

தொடர்ந்து படிக்க…

காலை – நாளின் முகவரியது!!

வாழ்க்கை என்பது இனிப்பதும் கசப்பதும் அதை நாம் பார்க்கும் கோணத்தில்தான் இருக்கிறது என நான் நம்புகிறேன். வாழ்வின் நிலைகளில் நாம் பெறக்கூடிய ஆறுதல்கள், பாராட்டுக்கள், களிப்புகள் எல்லாமே நம்மாலே நாம் பெற்றுக் கொள்ளுவதாகவே இருக்க முடியும்.

எமது எண்ணங்களின் மொத்த வடிவமாகத்தான் எம் நடை, உடை, பாவனை என எல்லாமே கோர்க்கப்பட்டுள்ளதாக நான் வாசித்த உளவியல் சம்மந்தமான நிறையப் புத்தகங்களில் குறிப்பிட அவதானித்திருக்கிறேன்.

தொடர்ந்து படிக்க…

இது ரொம்ப ஓவர்!!

அல்பர்ட் ஐன்ஸ்டைன் எனது நிறம் வலைப்பதிவைப் பற்றி எப்படி சமன்பாடு அமைப்பார் என்ற ஒரு கிறுக்குத்தனமான சிந்தனை வந்தது. செய்து பார்த்தேன்.

ஐன்ஸ்டைன் எவ்வாறு சமன்பாட்டை உருவாக்கியிருப்பார் என்ற சிறிய கற்பனை இது. ரொம்ப யோசிக்காதீங்க…. அப்படியொன்னும் E, m, c அப்படியெல்லாம் எதுவுமே வராது… அப்போ எப்படி…??

தொடர்ந்து படிக்க..

சுத்தம் இல்லாத கையால் செத்துப்போன ஜனாதிபதி

ஆரோக்கியம் என்பது எமக்கு அத்தியாவசியமான உயிர்ப்புள்ள பண்பு. சுகாதாரமாக வாழ்தல் என்பது அவ்வளவு இலேசுபட்ட காரியமல்ல. சுத்தம் என்பது மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கு இட்டுச் செல்லக்கூடிய அவசியமான கூறு.

நேற்று நான் “புறா எச்சம்” (நிறம் வலைப்பதிவில் புறாவின் எச்சம் பற்றி நீங்கள் அறிந்திராத அதிசயத் தகவல்கள் விரைவில் பதிவாக வரவிருக்கிறது) தொடர்பாக சில விடயங்களைப் பற்றி கூகிள் செய்யும் போது, சுத்தம் பற்றிய விடயங்கள் பற்றியும் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. சுத்தம் பற்றி நானறிந்து கொண்ட விடயங்கள் வித்தியாசமானவை: ஆச்சரியத்திற்குரியவை.
தொடர்ந்து படிக்க…