காலை – நாளின் முகவரியது!!

வாழ்க்கை என்பது இனிப்பதும் கசப்பதும் அதை நாம் பார்க்கும் கோணத்தில்தான் இருக்கிறது என நான் நம்புகிறேன். வாழ்வின் நிலைகளில் நாம் பெறக்கூடிய ஆறுதல்கள், பாராட்டுக்கள், களிப்புகள் எல்லாமே நம்மாலே நாம் பெற்றுக் கொள்ளுவதாகவே இருக்க முடியும்.

எமது எண்ணங்களின் மொத்த வடிவமாகத்தான் எம் நடை, உடை, பாவனை என எல்லாமே கோர்க்கப்பட்டுள்ளதாக நான் வாசித்த உளவியல் சம்மந்தமான நிறையப் புத்தகங்களில் குறிப்பிட அவதானித்திருக்கிறேன்.

வாழ்க்கையை மற்றும் அதனோடு கட்டிப்போடப்பட்டுள்ள அம்சங்களை ஆக்கபூர்வமாக காண்பதில் நிறைய சுகங்களை அனுபவிக்கலாம்.

“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற முதுமொழி சொல்வதுவும் இதைத்தான். வாழ்வில் எம்மாலேயே எமக்கு கஸ்டங்களும் வரலாம். மகிழ்ச்சியும் வரலாம். ஆனால், அவற்றை நித்திய சந்தோஷமாக மாற்றிக் கொள்வது எமது சிந்தனையிலேயே பொதிந்து கிடக்கிறது.

காலை என்றவுடன் தூக்கம் விட்டெழும் உற்சாகமான பொழுது – ஒரு நாளின் ஆரம்பத்தை அறிவிக்கும் சமிஞ்சை என்றெல்லாம் விபரிக்கலாம். இந்தப் பொழுதை நன்றாகப் பயன்படுத்துவதில்தான் எமது எண்ணங்களின் வளர்ச்சி இருக்கிறது.

காலையில் கண்விழிக்கும் போது எமது பார்வைக் கோணத்தில் படும் பொருளோ, நிலையோ அந்நாளை சந்தோஷமாக மாற்றத் துணை செய்யும் ஆதாரமாக இருக்க வேண்டும். ஆக்கபூர்வமான சிந்தனைகள் அப்போதுதான் எம்மனவானில் சிறகடித்தத் தொடங்கும்.

வாழ்க்கைக்கு உயிர்ப்பான மாற்றத்தை நீங்கள் கொடுக்க விரும்பினால், அது தொடர்பில் இன்றே கருமமாற்ற வேண்டும் என்று ஒரு நூலில் படித்த ஞாபகம் எனக்குண்டு. இங்கு இன்று என்பது காலையின் ஆரம்பத்தில்தான் உயிர்கொள்ளும்.

ஆக, காலை என்பதே அன்றைய மொத்தப் பொழுதின் அத்தனை விடயங்களையும் செம்மைப்படுத்தும் தளம். காலையில் உடற்பயிற்சி மட்டும் செய்வதோடு நின்றுவிடாது. மனப்பயிற்சியும் செய்தல் கட்டாயமானதே!

மனத்தை ஒருமுகப்படுத்தலில் நாம் அடையக்கூடிய பலம் சொல்லி மாளாது. மன ஒருமுகப்படுத்தலில் எமது நம்பிக்கைக்கு உரமேற்றப்படும். இந்நிலையில் தான் வாழ்வின் அர்த்தங்கள் புரியத் தொடங்கும்.

காலையை – நாட்களின் முகவரியை – தொலைத்தவர்களாகாமல் அதனை எம் மனத்தை புடம் போடும் ஆயுதமாக மாற்றிக் கொள்வோம்.

காலையில் எமது எண்ணங்கள் எப்படியமைகிறதோ அது போலவே, அன்றைய நாள் முழுக்க நிகழ்வுகள் நடந்தேறும். இதனை நீங்களும் அனுபவித்திருக்கக்கூடும்.

re.jpg

சூரியன் பூமிக்கு தன் ஒளிக்கீற்றால் பொன்னாடை போர்த்தும் நிகழ்வும் காலையில் தான் நடைபெறும் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை. நீங்களும் ஒரு புன்முறுவலாலேயே சூரியன் செய்யும் விடயத்தைச் செய்து விடமுடியும் மனிதர்களிடத்தில்.

காலையை நாளின் ஆதாரமாக்கி, நாட்களை வசப்படுத்தும் வித்தையைக் கற்றுக் கொள்வோம்!!

-உதய தாரகை

One thought on “காலை – நாளின் முகவரியது!!

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s