பட்டம் பறக்கும் இரகசியம்

cosmic1.jpg

இன்னொரு பிரபஞ்சம் என்றொரு தொடரை தொடர் முன்னோட்டம், துணைத் தலைப்பு என விடயங்களை அட்டகாசமாக வழங்கி ஆரம்பித்து வைத்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஆனாலும், தொடரின் முதல் பதிவை இன்றே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் நான் சந்தித்த அனுபவங்கள், சம்பவங்கள், பாத்திரங்கள் என விரிந்து செல்லும் விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைத்துள்ளேன் என்பது பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன். இதோ விரிகிறது என் நினைவுகளில் இருந்தும் அகலாத சம்பவமொன்று.

தொடர்ந்து படிக்க…

அத்தி பூத்தாற் போல்…

நிலவு, நிலா, தண்மதி எனவெல்லாம் பெயர் கொண்டு அழைக்கப்படும், சந்திரனுக்கு நிறைய மதிப்புண்டு என்றே எண்ணத் தோன்றுகிறது. நிலவைப் பாடாத கவிஞரே இருக்க முடியாது. சங்க கால இலக்கியங்களில் கூட நிலவைப் பற்றி நிறைய கவிஞர்கள் பாடியுள்ளனர். பெண்களின் அழகை வெளிப்படுத்தும் பொருட்டு நிலா உவமையாகக் கொள்ளப்பட்டுள்ளது. “பிறைநுதல்” கொண்ட இளவரசி வந்தாள், என்று பெண்ணின் நெற்றியின் அழகை நிலவுடன் சேர்த்து, வியந்து பாடியிருப்பார் புகழேந்திப் புலவர்.

என்னது… ஒரே நிலாவைப் பற்றிக் கதைக்கிறது. என்னதான் நீங்க சொல்லப்போறீங்க..? என்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள். கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் சுவாரஸ்யமாக இருக்குமென நம்புகிறேன்.

தொடர்ந்து படிக்க…

இப்போது மாற்றிவிட்டார்களா?

“மொழி” திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் அருமையிலும் அருமையானவை தான். “ஆழக் கண்ணால் தமிழ் சொன்னாலே.. ஜாடை கொண்டு பாசை சொன்னாலே..” என்று தொடங்கி முடியும் ஒரு சிறிய பாடலை நீங்கள் அந்தத் திரைப்படத்தில் கேட்டிருப்பீர்கள். கண்களால் பேசும் திறமையை மிகவும் எளிமையான சொற்களால் கவிதையாக்கிச் சொல்லியிருப்பார் கவிஞர். “மெளனமே உன்னிடம் அந்த மெளனம் தானே அழகு..” என்று வரும் பாடலும் மெளனத்தின் வலிமையைச் சொல்லும்.

என்ன உதய தாரகை! “அழகிய தமிழ் மகன்” திரை விமர்சனம் எழுத வேண்டிய நேரத்தில் “மொழி” திரைப்படம் பற்றி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? என்றல்லவா என்னைப் பார்த்துக் கேட்கிறீர்கள்… ஆனால், இங்கு எந்தத் திரைப்படம் பற்றியும் நான் விமர்சிக்கப் போவதில்லை. மௌனம் – பேச்சு – கேட்டல் என்பனவற்றைப் பற்றி நீங்கள் காணாத கோணத்திலிருந்து பேசலாம் என நினைக்கிறேன்.

தொடர்ந்து படிக்க…

பாலத்தை உடைத்துப் போட்ட பறவை

பறவைகளின் பால் மனிதர்களுக்கு நிறைய ஈர்ப்பு உடையதாகவே எண்ணுகிறேன். பாடசாலைக்குச் செல்லும் சிறிய பிள்ளைகளின் கற்பனை வளத்தை கண்டு கொள்ளும் பொருட்டு ஆசிரியரால் மாணவர்களுக்கு வழங்கும் கட்டுரைத் தலைப்பு “நான் பறவையானால்…” என்பதாகும். அது மட்டுமா, இதிகாசங்கள் பலதிலும் நாட்டுக்கு நாடு தூது விடும் ஊடகங்களாகக் கூட பறவைகள் இடம்பெற்றுள்ளதை நம்மால் அவதானிக்க முடிகிறது.

இதென்ன!? பறவைகள் பற்றி ஏன் இவ்வளவு அதிகமாக கதைக்கப்போகிறீர்கள் என்று தானே நீங்கள் எண்ணுகிறீர்கள்…? இது அதிசயங்களை அடுக்கிச் சொல்லப்போகும் ஒரு ஆராய்ச்சிப் பதிவு…

தொடர்ந்து படிக்க…

கலை: தொடர்பாடலின் ஆதாரம்

மனிதனின் விசாலமாக்கப்பட்ட வாழ்வியல் எல்லைக்குள் அடங்கும் நடவடிக்கைகள், பழக்கங்கள் என்பவற்றின் தோற்றத்தால் உருவாகும் வெளிப்பாடுகள் தான் கலை என்ற வரையறைக்குள் வர முடியும். அதாவது, ஒரு தனிமனிதனைச் சூழ்ந்து காணப்படும் சமூகமொன்றினது கலாசார வெளிப்பாடு தான் கலையாகும் என நான் கருதுகிறேன்.

கலை என்றவுடன் அதனை வெறும் சிற்பம், ஓவியம் ஆகியவற்றோடு மட்டும் நிறுத்திவிட முடியாது. ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பதை அறிந்தவர்களல்லவா? நாங்கள்!

தொடர்ந்து படிக்க…

நிறத்தின் இன்னொரு பிரபஞ்சம்

தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு முதலில் தோன்றியது என்ன? நிறங்களின் மீடிறன்களின் எல்லையில்லாத் தன்மையை நான் சொல்லப் போவதாகவா நீங்கள் நினைத்தீர்கள்? அல்லது இந்த வலைப்பதிவின் ஏதாவது சாதனையை நான் சொல்லப்போவதாகவா நீங்கள் நினைத்தீர்கள்?

நீங்கள் என்னதான் நினைத்தாலும் நான் சொல்லப் போகும் விடயமோ கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால், சுவையாக இருக்குமென நம்புகிறேன். அப்படியென்ன நான் சொல்லப்போகிறேன். (வியப்பு உஙகள் கண்களி்ல் தெரிகிறது!! 🙂 )

தொடர்ந்து படிக்க…

எனது நாய்க்கு நீந்தத் தெரியாதாம்!!

அண்மையில் தொலைதூரப் பயணமொன்றை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வழமை போலவே, பேருந்துப் பயணம் தான். முன்கூட்டியே ஆசனத்தை பதிவு செய்து கொண்டேன். இதேவேளை பேருந்தில் என் நண்பர்கள் பலரும் வந்தார்கள். அவர்கள் ஆசனத்தை முன்பதிவு செய்யாததால் ஆசனம் கிடைக்கவில்லை. நின்று கொண்டு வந்தவர்களில் அவர்களும் அடக்கம். அடிக்கடி ஆசனத்தை பகிர்ந்து கொண்டு எங்கள் பயணம் தொடர்ந்தது.

குறிப்பிட்ட காலம் – விடுமுறைக் காலம், நிறையப் பேர் பயணம் செய்ய பேருந்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். உண்மையில் ஆசனமில்லாமல் நின்றவர்களின் தொகையும் ஆசனத்தில் இருந்தவர்களின் தொகையும் சமனென்றே சொல்ல வேண்டும். அவ்வாறுதான் எனக்குத் தோன்றியது. நெடுந்தூரப் பயணம் என்பதால் பயணிகளின் பயணப் பொதிகளே பேருந்தை நிரப்பிவிடும் அளவிற்கு மலையாய்க் குவிக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து படிக்க…