நிறத்தின் இன்னொரு பிரபஞ்சம்

தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு முதலில் தோன்றியது என்ன? நிறங்களின் மீடிறன்களின் எல்லையில்லாத் தன்மையை நான் சொல்லப் போவதாகவா நீங்கள் நினைத்தீர்கள்? அல்லது இந்த வலைப்பதிவின் ஏதாவது சாதனையை நான் சொல்லப்போவதாகவா நீங்கள் நினைத்தீர்கள்?

நீங்கள் என்னதான் நினைத்தாலும் நான் சொல்லப் போகும் விடயமோ கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால், சுவையாக இருக்குமென நம்புகிறேன். அப்படியென்ன நான் சொல்லப்போகிறேன். (வியப்பு உஙகள் கண்களி்ல் தெரிகிறது!! 🙂 )

ஒவ்வொரு மனிதனுடைய நினைவுகள் எல்லாம் மிகவும் இனிமையாகவே அமையுமென்பதில்லை. ஆனால், இனிமையில்லாத நினைவுகளைக் கூட மீட்டிப் பார்த்து அதனை எமக்கு நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது ஏற்படும் சுகமே தனித்துவமானதுதான்.

இதேபோன்று தான், எமது வாழ்வில் இடம்பெற்ற இனிப்பான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போதும், ஏற்படும் சந்தோசம் மட்டில்லாதது. நாம் வாழ்வில் கண்ட அனுபவங்களின் பின்னணியில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். ஆயிரம் படிப்பினை இருக்கும். அவற்றை கண்டு கொள்பவர்களுக்கு நினைவுகள் எல்லாமே கலாசாலைகள். அவை ஒன்றாகச் சேர்ந்து ஒரு பிரபஞ்சத்தையே தோற்றுவிக்கும் ஆற்றல் பெற்றன.

எனது இளமைக்காலம் முதல் இன்று வரை நான் சந்தித்த அனுபவங்கள் அதனால் நான் அறிந்து கொண்ட பாடங்கள் என விரியும் விடயங்களை சுவாரஸியமாக பதிவு செய்யலாம் என நினைத்தேன். இந்த எண்ணக்கரு உருவாகியது.

இந்தத் தொடருக்கு “இன்னொரு பிரபஞ்சம்” என பெயரிட்டேன். அனுபவங்கள் தரும் அதிர்ச்சிகள், அதிர்வுகள், அமைதிகள், ஆனந்தங்கள் எல்லாமே ஒரு பிரபஞ்சத்தின் கூறுகள் தாம். என் வாழ்க்கை அனுபவங்களை நான் பதிவு செய்யப் போவதால், அது இங்கு “இன்னொரு பிரபஞ்சமாகவே” உணரப்படல் பொருத்தம் என எண்ணினேன்.

ஒரு தலைப்பை வைத்துவிட்டால், அதற்கு துணைத்தலைப்புகள் வைப்பது இப்போதைய காலப்போக்கு. இவ்வாறு வரும் துணைத்தலைப்புக்கு அல்லது ஓரிரு சொற்களுக்கு ஆங்கிலத்தில் Motto மற்றும் Slogan என்று பெயர். இதனை தமிழில் சொல்வாக்கு என்று சொல்லிவிடலாம் எனத் தோன்றுகிறது.

இப்படி Motto ஐப் பற்றிக் கதைக்கும் போதுதான் ஞாபகம் வருகிறது. பாடசாலைகளுக்கும் இவ்வாறான Motto தனித்துவமாகக் காணப்படும். நான் கல்வி கற்ற கொழும்பு றோயல் கல்லூரியின் Motto எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த Motto என்ன தெரியுமா? Disce Aut Discede என்பதாகும். என்ன புரியவில்லையா? இது இலத்தின் மொழிச் சொற்கள்.

இதன் கருத்து மிகவும் அருமையானது. Learn or Depart அதாவது வெளிப்படையாக நல்ல தமிழில் சொல்லப் போனால் “படி அல்லது வெளியேறு” என்று பொருள்படும். எவ்வளவு காத்திரமான சொல்வாக்கு!!

இந்தப் பாடசாலையின் கீதமும் எனக்கு மிகவும் பிடித்தவொன்று தான். அது பற்றி இன்னொரு தருணத்தில் சொல்கிறேன்.

“இன்னொரு பிரபஞ்சம்” என்ற இத்தொடரின் Motto ஆக நான் தேர்ந்தெடுத்துள்ளது, “யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்” என்பதாகும். ஏன் இப்படி வைத்தேன்? என்று கேட்கக் கூடாது. 😆

இத்தொடருக்கு முன்னோட்டம் மற்றும் இலட்சினை என்பனவற்றை தயாராக்கி விட்டேன்.

இதோ வருகிறது. பதிவுத் தொடரின் முன்னோட்ட இலட்சினை.

cosmic.jpg

இந்தத் தொடரில் நான் வாழ்வில் சந்தித்த பாத்திரங்கள், சம்பவங்கள் என விரியும் நினைவுகளை நீங்கள் பார்க்காத கோணத்தில் இரசிக்கும் படி சுவையாகச் சொல்வதற்கு முனைகின்றேன். எல்லாம் நலமாக நடக்கும் என்ற நம்பிக்கை இந்தத் தொடரை உயிர்ப்பாக்கும் என நம்புகிறேன்.

தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களையும் சொல்லியனுப்புங்கள்.

விரைவில் “இன்னொரு பிரபஞ்சத்தின்” முதலாவது நினைவுகளின் பதிவுகளோடு சந்திக்கிறேன்.

இதேவேளை “நிறத்தில்” அரங்கேறும் அனைத்து விதமான பதிவுகளும் வழமை போல் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்படும். “இன்னொரு பிரபஞ்சம்” தொடரின் நினைவுகளும் அது கூடவே உங்களை வந்தடையும். வித்தியாசத்திற்கு தொடரின் பதிவுகளின் மேலே கீழேயுள்ள Splash நிழற்படம் காட்சியாகும். அதிலிருந்து தொடரின் பதிவுகளை இனங்காண முடியும். (எங்களுக்குப் புரியுது.. இவ்வளவு Risk ஏன் எடுக்கிறீங்க உதய தாரகை??!! — ஆமா… எங்களுக்கு Risk எடுக்கிறதெல்லாம் Rusk சாப்பிடுற மாதிரி.. தெரியுமில்ல.. 🙂 )

cosmic1.jpg

சந்திப்போம்… சிந்திப்போம்..

– உதய தாரகை

2 thoughts on “நிறத்தின் இன்னொரு பிரபஞ்சம்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s