எனது பெயரும் வெங்காயமும்

உலகம் என்பது விந்தை, வினோதம் என விரியும் வியப்புகளின் தொகுப்பு என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். ஒரு மனிதனின் உடல் அமைப்பிலேயே ஆயிரமாயிரம் அற்புதங்கள், அதிசயங்கள். ஏன், தாவரங்களிலும் எத்துணை வகை விந்தைகள். இவற்றையெல்லாம் எண்ணும் போது, எம்மால் பூமியில் உள்ள அனைத்து அற்புதங்களையும் கண்டறிய முடியாமல் போய்விடும் என்பது உண்மையே.

விலங்குகளின் நடத்தைக் கோலங்களில் மாற்றம்,  இயற்கையின் சீற்றத்தை எதிர்வுகூறும் அடையாளக் குறிகள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். (என்ன உதய தாரகை! மனிசன், விலங்கு, தாவரம் என்டு ஒரே பில்ட்அப் ஆக இருக்குது. என்ன விசயம். ஏதாவது “பயோலொஜி” மேட்டர் ஏதும் சொல்லப்போறீங்களோ?)


இன்று உங்களுடன், நான் அறிந்து கொண்ட சில அற்புதமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைத்தேன். இப்பதிவு உருவாயிற்று. வாழ்க்கை என்பது நாம் அதனை எவ்வாறு பார்க்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது. (ஆமா! சொல்ல வந்த அற்புத தகவல்களுக்கும் இப்ப சொல்ற மேட்டருக்கும் என்ன சம்பந்தமுங்க..? ஒரே குழப்பமாயிருக்கே!!)

குழம்பக்கூடாது. ஒரு நிகழ்ச்சி தொடங்குமுன் இன்றைய நற்சிந்தனை என்று சொல்லி ஒரு விடயம் சொல்வார்களே, அது போன்றுதான் அந்தக் கூற்றையும் இனங்காண வேண்டும். (என்னது இழுவ… மேட்டருக்கு வாங்க உதய தாரகை!)

“ஒவ்வொரு நாளும் அநேகமான வீடுகளிலுள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் அழுவது இப்போது வழக்கமாகிவிட்டது. “அழுகைப் பெட்டியே” இதற்குக் காரணம்” என்றெல்லாம் ஒரு பத்திரிகையில் வாசித்த ஞாபகம் எனக்குண்டு. தொலைக்காட்சிப் பெட்டிக்கா இந்தப் பெயர் என்று நீங்கள் வியப்பே உருவாகி நிற்பது எனக்குப் புரிகிறது. சீரியல்கள் செய்யும் வேலைதான் இதுவென்று சொல்லப்படுகிறது. ஆனால், நான் சொல்ல வருவதோ இந்த விடயங்கள் எதைப் பற்றியுமல்ல ஆனால் அழுகை.

அழுகை வரும் நிலைகளை ஒரு துக்கமான நிகழ்வு இடம்பெறும் போது, அல்லது சந்தோசமான நிலை உண்டாகும் போது கண்டுகொள்ள முடியும். “ஆனந்தக் கண்ணீர்” என்று வேறு சந்தோசமான நேரங்களில் வரும் கண்ணீருக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். வெங்காயம் இருக்கிறதே! – அதை வெட்டும் போதும் எமது கண்களிலிருந்து கண்ணீர் வரும். அவ்வாறு கண்ணீர் வராமல் வெங்காயத்தை வெட்ட முடியுமா என்று பார்த்தால் ஆம் என்ற பதில் கிடைக்கிறது.

onion_b.jpg 

இந்த விடயம் எங்களுக்கும் தெரியும் தானே. குளிர்சாதனப் பெட்டிக்குள் வெங்காயத்தை வைத்து பின்னர் அதனை நீருக்குள் அமிழ்த்திய நிலையிலேயே வெட்டினால் கண்ணீர் வராது என்பதைத் தானே நீங்க சொல்ல வர்ரீங்க? என்று என்னை முந்திக் கொண்டு நீங்கள் சொல்லத் துடிப்பது எனக்குப் புரிகிறது. ஆனால், இதை விடவும் மிகவும் இலேசான முறையொன்று உள்ளது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Chewing Gum ஐ சாப்பிட்டுக் கொண்டே வெங்காயத்தை வெட்டினால் கண்ணீர் வராதாம்.  செய்துதான் பாருங்களேன்!

வெங்காய மேட்டர் அது. வெங்காயத்தைப் பற்றி இன்னொரு விசயமும் இருக்கிறது. அது என்ன தெரியுமா? அதுதான், வெங்காயத்தை கொழுப்புச் சத்துள்ள உணவை உண்ட பின்னர் சாப்பிட்டால், அவ்வுணவால் உண்டாகும் கொழுப்புச் சத்தை குறைப்பதில் பங்கெடுக்கும் என்றும் சொல்லப்பபடுகிறது.

இனி அடுத்த மேட்டர் என்னவென்று பார்ப்போமா?

எனது பெயர் உதய தாரகை. உங்கள் பெயர் என்ன? என்று கேட்டால் உங்கள் பெயரை நீங்கள் சொல்வீர்கள்தானே? (நாங்க அப்படியெல்லாம் கேட்கிற தா. அல்லது உங்கள் பெயரைச் சொல்லி அடுத்தவரின் பெயர் என்னவென்று கேட்பீர்கள். (என்னப்பா! பெயரைப் பற்றி இவ்வளவு பில்ட்அப் எதற்கு? 🙂 )

விசயம் இல்லாமலா சொல்லுவாங்க. விசயம் இருக்குப்பா. விசயம் இருக்கு. உங்களிடம் எழுதுவதற்காக புதிய பேனையொன்று தருவிக்கப்பட்டால், நீங்கள் அப்பேனாவைக் கொண்டு எதனை முதன் முதலாக எழுதுவீர்கள்? உலகில் 97 சதவீதமானமாவர்கள் புதிய பேனாவொன்றால் முதன் முதலாக எழுதுவது அவர்களின் சொந்தப் பெயரையாம் என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. (சிரிக்கிறத்தைப் பார்ரா… உண்மைதானே!!??)

சரி.. சரி.. இருக்கோட்டும். இருக்கோட்டும்…

இந்த விசயத்தைச் சொல்றதுக்கா இப்படியொரு தலைப்பு. நாங்களும் ஏதோ வேறு ஏதாவது விசயம் இருக்கென்று பார்த்தால், இப்படியா? என்று நீங்கள் கேட்கத் துடிக்கிறீர்கள் போலும்.

சீரியஸா தொடர்ச்சியாக பதிவு போட்டதால், கொஞ்சம் சுவாரஸ்யமாக ஒரு பதிவு போடலாம் எண்ணினேன். இப்படி தகவலையும், நகைச்சுவையையும் சேர்த்து பதிவு போடுதல் பொருத்தம் எனத் தோன்றியது. இப்பதிவு உருவானது.

என்ன நம்ம பதிவு நன்னாயிருக்கா? மறக்காம சொல்லுங்க என்ன….?

– உதய தாரகை

3 thoughts on “எனது பெயரும் வெங்காயமும்

  1. ஐயா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கூடவே மறுமொழிக்கும் நன்றிகள் பல.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s