அன்புதான் தியாகம். அழுகைதான் தியானம்

“உன் காலடி மட்டும் தருவாய் தாயே! சுவர்க்கம் என்பது பொய்யே!” என்பது ஒரு பாடலில் வரும் வரிகள். “பெண்ணைப் படைத்தான், மண்ணைப் படைத்தான், காற்றும் மழையும் ஒளியும் படைத்தான். பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை. சாமி தவித்தான் – தாயைப் படைத்தான்.” என அப்பாடல் தொடர்ந்து செல்லும். “உயிரும் நீயே.. உடலும் நீயே..” என்ற பாடலிலேயே இவ்வரிகள் வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். அன்பு என்னும் போது, தாய் என்ற பாத்திரம் கட்டாயம் ஜொலிக்க ஆரம்பிக்கும்.

என்ன உதய தாரகை ஒரே சென்டிமண்டாக கதைக்கத் தொடங்கியிருக்கீங்க? என்று நீங்கள் கேட்க முனைவது போல் எனக்குப் புரிகிறது.

800-rose.jpg

அன்பின் ஆழமான உணர்வை நான் எனது வாழ்நாளின் பல கட்டங்களில் அறிந்திருக்கிறேன். அண்மையில் கூட எனக்கு நேர்ந்த சம்பவமொன்று “அன்பு” என்ற உணர்வின் ஆழத்தை அழுத்தமாகப் பதித்துச் சென்றது. வாழ்க்கையில் எம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி எம்மிடம் சொல்லித் தருவதற்காகவே சில நிகழ்ச்சிகள் நடக்கின்றனவோ என்று நான் பல வேளைகளில் நினைத்ததுண்டு. அப்படி ஒரு சந்தர்ப்பம் சொல்லித்தந்த உணர்வுகளின் வலிமையைச் சொல்லத்தான் இந்தப் பதிவு.

நாம் எல்லோரும் ஏனையோருக்கு ஏதாவதொரு வகையில் நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டுமென்றே நினைப்போம், விரும்புவோம். நீங்கள் செய்யும் சிறு உதவி மூலம் ஏனையவர்களில் மிகப்பெரிய சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆக்கபூர்வமான சிந்தனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இந்த நிலை ஏற்படுவதற்கு, உதவி செய்யும் ஆற்றல், தேர்ச்சி  கொண்டவர்களாக எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

சில பேர் மிகத் தீவிரமாகவே ஏனையவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் உதவி தேவைப்படுபவர்களை நாடி அச்சந்தர்ப்பத்தில் உதவி செய்யும் வழமையைக் கொண்டிருப்பார்கள். இதனால் தான், ஒருவரின் பெயரை சொன்னவுடனேயே, “ஓ… அவரா.. நிச்சயமாக அவர் உதவி செய்வார்” என மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்டிருப்பீர்கள். இவ்வாறு அவர்கள் சொல்ல முனைவதற்கு குறித்த நபர் பற்றி அறிந்துள்ள நல்ல செயல்கள் காரணமாக இருக்கும். அவரின் உதவி செய்யக்கூடிய மனப்பாங்கு பற்றி அவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.

ஒருவர் மற்றவர்களால் நல்லவராக இனங்காணப்பட செல்வாக்கு, தேர்ச்சி என்பனவெல்லாம் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய தேவையில்லை. ஒருவரின் மனப்பாங்கே அவரை நல்லவராக வல்லவராக மற்றவர்களுக்கு காட்டுகின்றது என்றே நான் நம்புகிறேன். இப்படியானவர்கள், மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு நின்றுவிடுவதில்லை, மற்றவர்கள் தம்மைப் பற்றி ஆக்கபூர்வமாக எண்ண வேண்டுமென்ற வகையில் அவர்களின் நடவடிக்கைகள் முன்மாதிரியானதாக இருக்கும்.

உதவி தேவைப்படும் நேரங்களில் எமக்கு அதனை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் தெளிவு இருக்காது. உதவி செய்ய வருபவர்களின் உதவியையும் பெற்றுக் கொள்வதில் சிலவேளை உங்களுக்கு தயக்கம் ஏற்படலாம். எந்தத் தயக்கமும் உதவி செய்யும் போதும், உதவி பெறும் போதும் இருக்கவே கூடாது என்றே நான் சொல்வேன்.

உதவி செய்வது என்பதை எந்த வகையில் சாத்தியமாக்கலாம் என்பதை நான் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். எனது அன்புக்குரியவர்கள் பலரும் எனக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கே இந்தப் பதிவு. (அப்போ! இன்னும் பதிவின் மேட்டர் தொடங்கவில்லையா? என்ன கொடுமை இது? இதற்கு இவ்வளவு பில்ட்அப் தேவைதானா?)

உங்களுக்கு தெரிந்த விடயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் மிக முக்கியமான பண்பாகும். உங்கள் அறிவு, பலம் என்பவற்றைப் பற்றி வெளிப்படையாக இருப்பது பொருத்தமானது. (அதற்காக நீங்கள் பெற்ற பட்டங்களை நெற்றியில் ஒட்டிக்கிட்டு திரிய வேண்டுமென்ற அவசியமேயில்லை.  🙂  )

நீங்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற விடயங்களை மற்றவர் அறிந்து கொள்ளும் போது, அவர்கள் தேவை ஏற்படும் போது, உதவிக்காக உங்களை அனுகுவார்கள். உதவும் கரமாய் நீங்கள் அந்நேரம் ஜொலிக்கலாம். பலரும் பல்வேறுபட்ட ஆற்றல்களைத் தங்கள் வசம் பொதித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவற்றை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதில் ஆர்வம் கொள்வதில்லை. இதனால், அவர்களின் உதவி செய்யக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதிலும் அவர்கள் இனங்காணப்படாமலே போய்விடுகின்றனர்.

இப்படி நீங்கள் இருக்க முடியுமா? இல்லையே! நீஙகள் உலகை ஆளும் சிந்தனைகளோடு வாழும் ஆளுமைகளல்லவா? (இதெல்லாம் ரொம்ப ஓவர்!) உங்களுக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில் தயக்கம் காட்டாதீர்கள்.

உதவி வேண்டப்படும் நேரங்களில் உதவி தேவைப்படுவோர் அநேகமாக நீங்கள் செய்யும் உதவிகளை ஏற்காமல் இருக்கமாட்டார்கள். நீங்கள் உங்களில் அதிகளவான நம்பிக்கை கொண்டுள்ள போதே மற்றவர்கள் நீங்கள் செய்யும் உதவியை பூரணமாக ஏற்றுக் கொள்ள வழியமைக்கலாம்.

உதவி செய்ய முடியாமைக்கான காரணங்களை, உங்களிடம் போதியளவு நம்பிக்கையில்லாத போதே சொல்ல நினைப்பீர்கள். ஆக, நம்பிக்கையோடு விடயங்களைச் செய்வதுதான் சாதகமான பலன்களைத் தரும் முன்னெடுப்பாகும். (நம்பிக்கைதான் வாழ்க்கை என்றெல்லாம் நான் திரும்பத் திரும்பச் சொல்ல மாட்டேன். நாங்க ஒரு தடவை சொன்னா…. பெரிசா யோசிக்காதீங்க.. ஒரு தடவை சொன்ன மாதிரிதான்.. புரியுதா?)

இடர் கண்ட உங்கள் அன்புக்குரியவர்களின் உடனடிப் பிரச்சினைகளை விரைவாக தீர்ப்பதில் கவனம் செலுத்துதல் மிகவும் அவசியமானதே! அவர்களிடம் நடந்த விடயம் பற்றி கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல்”, உடனடித் தேவைகளை உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்தல் உசிதமான வழி – அது நல்லுறவின் மொழி.

உடனடித் தேவையை பூர்த்தி செய்து அல்லது பிரச்சினையை தீர்த்து வைத்ததன் பின்னர் உங்கள் “அட்வைஸ்” படலத்தை ஆரம்பம் செய்யலாம். எதிர்காலத்திலும் இவ்வாறான இடர்கள் ஏற்படாமலிருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக செய்ய வேண்டிய விடயங்களையும் உங்கள் “அட்வைஸ்” (அதுதாங்க.. நல்ல தமிழில சொன்னா… அறிவுரை என்னு வரும்.. புரிஞ்சுதா — இதெல்லாம் ரொம்ப ஓவர்..) பட்டியலில் சேர்த்துக் கொள்ளுதல் பொருத்தமாயிருக்கும்.

மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்யும் போது, நீங்கள் ஆனந்தம் அடைவதே நல்ல பண்பாகும். நீங்கள் அடையும் ஆனந்தத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் அன்பின் காரணமாக இலவசமாகவோ அல்லது தொழில் நிமித்தம் கூலிக்காகவோ உதவியைச் செய்யும் போது, நீங்கள் அச்செயலால் அடையும் ஆனந்தத்தை குறித்தவர்களிடம் வெளிப்படுத்துங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். ஆனந்தம் என்பதும் அன்புதானே!

மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் ஆனந்தம் அடைவதோடு மட்டுமல்லாமல், புதிய விடயங்களையும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவையும் தேர்ச்சியையும் விருத்தி செய்வதற்கு உதவி செய்யும் தருணங்களை ஆதாரமாகக் கொள்வது பொருத்தமானதே!

இன்னொருவரின் பிரச்சினையை தீர்ப்பதனால் அதிலிருந்து உங்களால் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் நிறைய இருக்கும்.

உங்களால் மற்றவர்களின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடியுமா? உங்களுக்கு ஒருவரின் கஸ்டத்தில் உதவ வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறதாகவிருந்தால், மற்றவர்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஆற்றல் உங்களிடம் உண்டு என்ற தெளிவான முடிவுக்கு வரலாம்.

மற்றவர்களின் உணர்வுகளை உணர்ந்து கொள்வதற்கு அவர்களின் விடயங்களை செவிமடுக்க வேண்டும். வெறுமனே கேட்கக்கூடாது. (கேட்பதற்கும் செவிமடுப்பதற்கும் இடையான வித்தியாசத்தைச் சொல்லும் பதிவொன்றை “இப்போது மாற்றிவிட்டார்களா?” என்ற தலைப்பில் ஏற்கனவே நிறத்தில் சேர்த்துள்ளேன். அதனை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.)

அன்பு செலுத்துவதென்பது, உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர்களாலேயே செய்யக்கூடிய விடயமாகும். அன்பு என்பதுதான் அகிலத்தின் உயிர். அதுதான் வாழ்வியலின் ஆதார ஒளி. அன்பு செலுத்துவதும் அன்பைப் பெறுவதும் மகிழ்ச்சியைத் தரும் இதமான விடயங்களே. நீங்கள் அன்பு செலுத்தத் தொடங்குகையில் உங்களுக்குள் நீங்கள் அடக்கி வைத்திருந்த ஆசைகள், ஆர்வங்கள், நல்லெண்ணங்கள் எல்லாம் வெளிப்படத் தொடங்கக்கூடும்.

எல்லாமே அன்புதான். உதவுவதும் அன்புதான். உதவி பெறுவதும் அன்புதான். அதனாலென்னவோ, அன்புதான் தியாகம் என்று ஒரு பாடலில் சொல்லியிருப்பார் ஒரு கவிஞர்.

அன்பின் வெளிப்பாடு, உணர்வுகளின் பகிர்வாகவே இருக்கும். உணர்வுகளின் பகிர்வு என்பது வெறும் இன்பங்களின் பகிர்வாக மட்டுமே இருக்காது, துன்பங்களும் உணர்வுகளின் உயிர்ப்பான வடிவம் தானே! அன்பினால் பிணைக்கப்பட்ட நிலையில் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்படும் ஆறுதல் அளப்பரியதே!

சந்தோசத்தில் ஆனந்தக் கண்ணீர், துக்கத்தில் கண்ணீர் என தன்னை அறியாமலே கண்ணிலிருந்து நீர் வடிக்கும் உங்கள் அன்பான உறவுகளைக் கண்டிருப்பீர்கள். அவர்கள் எம் உணர்வுகளோடு ஒன்றிப்போனவர்கள். அன்பினால் இணைந்த நிலையிலேயே இந்த அழுகையும் சாத்தியமாகும். ஆக, அழுகை உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தியானம் என்பது பொருந்தும் தானே!

என்ன உதய தாரகை? ஒரே தத்துவம்ஸ் தத்துவம்ஸ்ஸா சொல்லிக்கிட்டு இருக்கீங்க..? இப்படி எல்லாம் நீங்க ஆகிவிடுவீங்க என்டு நாங்க நெனக்கவே இல்ல? – என்றுதானே நீங்கள் சிந்திக்கிறீங்க…?

வாழ்வியலின் உண்மையான விடயங்கள் தத்துவங்களாகாது. அவை வாழ்வின் ஆதாரங்கள். உணர்வுகளின் ஒளி விளக்குகள். அன்பு என்பது ஆழமானது. அதனை அறிந்தவர்களும் ஆழமான எண்ணங்களின் துணையைக் கொண்டவர்கள் தாம். ஆக்கபூர்வமான எண்ணங்களின் உயிர்ப்பில் அன்பு வெளிப்படும் என்பது வெள்ளிடை மலை.

நீங்கள் அன்பின் அடிமையா? சொல்லியனுப்புங்கள்.

– உதய தாரகை

4 thoughts on “அன்புதான் தியாகம். அழுகைதான் தியானம்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s