நிலவிற்கு உங்கள் பெயரை அனுப்புங்கள்

உலகத்தின் வினாடிகளை அலங்கரிக்கும் அச்சாணியாக விளங்குவது, அறிவியல் தான். அறிவியலினால் எட்டப்பட்டுள்ள சாதனைச் சிகரங்கள் எத்துணை பாரியவை. விசாலமானவை. அறிவியலின் ஆர்வத்தின் வெளிப்பாடுதான் மனிதன் பூமியை விட்டும் வேற்று கிரகங்களுக்கு ஏகி ஆராய்ச்சி செய்யத் துணிந்தது.

1969 ஆம் ஆண்டு இந்த மாதம் (அதாங்க.. ஜுலை மாதம்..) 20 ஆம் திகதி முதன் முதலாக நிலவிற்குச் சென்றார். உலகமே வியந்த அந்த நிகழ்வு இன்றும் வெகுவாக நினைவு கூறப்படுகிறது. பல அறிவியல் ஆய்வுகளின் அடித்தளமாகக்கூட இது உணரப்படுகிறது. (சரி.. சரி.. என்ன இழுவ… உதய தாரகை.. மேட்டருக்கு வாங்க…)

உங்கள் பெயரை நிலவுக்குச் செல்லும் விண்வெளியோடத்தில் பொறித்து, நிலவிற்கு அனுப்ப ஆர்வமுள்ளதா? (என்ன உதயதாரகை.. இப்படி கேட்டுப்புட்டீங்க…? எங்களுக்கு ஆர்வமுள்ளதாவா..? எப்படி அனுப்பலாம்.. சீக்கிரமாகச் சொல்லுங்கய்யா…) கொஞ்சம் பொறுங்க.. விளக்கமாக சொல்கிறேன்.

நாஸா – அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிய நிலையத்தின் பெயர். விண்வெளி பற்றிக் கதைக்கும் போது, அனைவரும் உச்சரிக்கும் பெயர். விண்வெளியே தனது மூச்சாய் சுவாசிக்கும் அமைப்பு, வயது வேறுபாடின்றி, உங்கள் அனைவரினதும் பெயரை நிலவிற்கு அனுப்ப Lunar Reconnaissance Orbiter (LRO) spacecraft என்ற செயற்றிட்டத்தின் மூலமாக அழைப்பு விடுத்திருக்கிறது. நம்ப முடிகிறதா…? நம்பித்தான் ஆகணும். பெயர்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஜுன் 27 ஆக அமைந்த போதும், இதற்கு பொதுமக்களிடையே காணப்பட்ட ஆர்வம் காரணமாக இந்த இறுதித் திகதியை ஜுலை 25 ஆக மாற்றியமைத்திருக்கிறது. அதிர்ஷ்டக் காரர்கள் தான் நீங்கள்.. இப்போ நீங்களும் உங்கள் பெயரை நிலவிற்கு அனுப்பலாம்.

உங்களின் பெயர் விபரத்தை இங்கே வழங்கி, நாஸாவினால், வழங்கப்படும் சான்றிதழையும் பெற்றிட மறந்து விடாதீர்கள். நமது பெயரை சந்திரனுக்கு அனுப்புவதென்றால் சும்மாவா…? இவ்வாறு இத்திட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் பெயர்கள் யாவும் தரவுத்தளம் ஒன்றினுள் நிரற்படுத்தப்பட்டு ஒரு நுண்ணிய இலத்திரனியல் சில்லொன்றின் சேமிக்கப்பட்டு இந்த ஆண்டில் நிலவிற்கு ஏகவுள்ள விண்ணோடத்தில் பொருத்தப்பட்டு நிலவிற்கு அனுப்பப்படவுள்ளது.

நான் எனது பெயரை சமர்ப்பித்து விட்டேன், சான்றிதழும் பெற்றுக் கொண்டேன். நீங்கள் உங்கள் பெயரை அனுப்பிவிட்டீர்களா? முந்திக் கொண்டு உங்கள் பெயரை நிலவிற்கு அனுப்ப ரெடியாகிட்டீங்க போலத் தோணுது..? நான் Already done! நீங்க ready ஆ?

– உதய தாரகை

9 thoughts on “நிலவிற்கு உங்கள் பெயரை அனுப்புங்கள்

  1. நன்றி கஜதீபன்,

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s