உப்பு மூட்டை சுமப்பேன்..

இளமைக் காலங்களில் தந்தையிடம் உப்பு மூட்டை மாதிரி என்னைத் தூக்கிச் செல்லுமாறு அன்புக் கட்டளையிட்ட ஞாபகம் எனக்கு இன்னுமிருக்கிறது. ஒவ்வொருவரினதும் வாழ்க்கையில் இளமைக் காலம் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. இனிமையானது.

இளமைக் கால நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போது, சிலவேளை எம்மையறியாமலேயே எமக்கு சிரிப்பு வரும். ஏன் வெட்கமும் வரும். ஆனால், அத்தனை ஞாபகங்களும் விலைமதிப்பற்றவைதாம்.

ஆனால், இந்தப் பதிவு இளமைக்கால ஞாபகங்களைச் சொல்வதற்காக அல்ல. எனக்குப் பிடித்த திரையிசைப் பாடல் ஒன்றின் காட்சியமைப்பு, பாடல் வரிகள், இசை என அனைத்தையும் ஒரு வீடியோவின் மூலம் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

உப்பு மூட்டை சுமப்பேன் என்று ஏன் நான் தலைப்பிட்டேன் என நீங்கள் இந்த வீடியோவைப் பார்த்ததும் புரிந்து கொள்வீர்கள்.

– உதய தாரகை

இது எங்கள் நேரம்…!

மாற்றம் என்பது மட்டுமே மாறாமல் இருக்கும் என்பதை இன்னொரு தடைவை சொல்லிப் போந்த விடயத்தை அவதானிக்கும் வாய்ப்பு எனக்கு இன்று காலை கிடைத்தது. (அப்படியென்ன உதய தாரகை!! என்னப்பா இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கீங்க…??)

வரலாறுகளில் இடம்பெறாத நிகழ்ச்சிகள் எதேச்சையாக அல்லது திட்டமிட்டு நடந்து விடும் போது, அது சாதனையாகிறது. சரித்திரம் படைக்கிறது. மில்லியன் கணக்கானோர் ஒரே தடவையில் ஆனந்தக் கண்ணீர் வடித்த தருணங்களைக் கண்டிருக்கிறீர்களா?. அந்தத் தருணத்தை இன்று காலை கண்ட நேரம் நான் என்னையறியாமலேயே என் கண்கள் நனையக் கண்டேன். அத்தனை மக்களும் அத்தருணத்தை அவர்களின் நேரமாக கருதினார்கள்.

தொடர்ந்து படிக்க…