உப்பு மூட்டை சுமப்பேன்..

இளமைக் காலங்களில் தந்தையிடம் உப்பு மூட்டை மாதிரி என்னைத் தூக்கிச் செல்லுமாறு அன்புக் கட்டளையிட்ட ஞாபகம் எனக்கு இன்னுமிருக்கிறது. ஒவ்வொருவரினதும் வாழ்க்கையில் இளமைக் காலம் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. இனிமையானது.

இளமைக் கால நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போது, சிலவேளை எம்மையறியாமலேயே எமக்கு சிரிப்பு வரும். ஏன் வெட்கமும் வரும். ஆனால், அத்தனை ஞாபகங்களும் விலைமதிப்பற்றவைதாம்.

ஆனால், இந்தப் பதிவு இளமைக்கால ஞாபகங்களைச் சொல்வதற்காக அல்ல. எனக்குப் பிடித்த திரையிசைப் பாடல் ஒன்றின் காட்சியமைப்பு, பாடல் வரிகள், இசை என அனைத்தையும் ஒரு வீடியோவின் மூலம் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

உப்பு மூட்டை சுமப்பேன் என்று ஏன் நான் தலைப்பிட்டேன் என நீங்கள் இந்த வீடியோவைப் பார்த்ததும் புரிந்து கொள்வீர்கள்.

– உதய தாரகை

6 thoughts on “உப்பு மூட்டை சுமப்பேன்..

 1. //இளமைக் காலங்களில் தந்தையிடம் உப்பு மூட்டை மாதிரி என்னைத் தூக்கிச் செல்லுமாறு அன்புக் கட்டளையிட்ட ஞாபகம் எனக்கு இன்னுமிருக்கிறது.//

  என்ற ஒற்றை வசனத்திலேயே, எங்கோ இருக்கும் என் தந்தையின் சாயலை நினைவுக்கு வரவழைத்துத் தந்தமைக்கு நன்றிகள்.

  அஃதிருக்க நீங்கள் நினைக்கும் போது வெட்கப்படுகிற விஷயம் ஏதாவது……….???

 2. இளமைக் காலங்களில் செய்த எத்தனையோ குறும்புகள் என் ஞாபகத்தில் அலை பாய்கின்றன. நிச்சயமாக நீங்கள் கேட்ட நான் வெட்கப்படும் விசயம் பற்றி “இன்னொரு பிரபஞ்சம்” தொடரில் சொல்வேன்.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல…

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 3. உப்பு மூட்டை சுமப்பேன் தலைப்பு ஏனென்று விளங்குகிறது…

  நீங்கள் உப்பு மூட்டை சுமந்த கதைகளையும் “இன்னொரு பிரபஞ்சம்” தொடரில் எழுதுங்கள்… 😉

 4. உண்மையிலேயே அருமையாக உள்ளது.. இப்பாடலை நான் மிகத் தீவிரமாகவே இரசிப்பவன்.

 5. நன்றி நிமல் தங்கள் வருகைக்கு..

  “இன்னொரு பிரபஞ்சம்” சொல்லும் நிலைகள் மெல்ல மெல்ல விரியும். 🙂

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

 6. @ இம்தியாஸ் ஆப்தீன்,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  இனிய புன்னகையுடன்,
  உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s