தீர்மானம்: முன்னேற்றத்தின் வேர்

அண்மையில் எனது டிவிட்டர் நண்பனொருவன், டிவிட்டிய வரிகள் சில என்னைக் கொஞ்சம் சிந்திக்கச் செய்தது. அதுவே இந்தப் பதிவிற்கும் பதியம் போட்டது எனலாம்.

யோசனைகளை சேமிப்பதிலோ அல்லது உருவாக்குவதிலோ பொருள் ஏதும் எய்தப்படாது. அது செயற்பாட்டில் வரும் போதே, நிறைய நிலைகள் சாத்தியப்படும் என்பது வெள்ளிடை மலை. என் நண்பன் டிவிட்டிய வசனம், “That’s what life is about. You make decisions and you don’t look back.” என்பது தான்.

நாம் எடுக்கும் தீர்மானங்கள் தான், எமது அடுத்த நிமிடத்தைத் தீர்மானிக்கும் ஆதாரங்கள். அது நல்லதோ கெட்டதோ என்பதெல்லாம் அதனால், ஏற்படும் விளைவுகளைப் பொறுத்து வேறுபடும். ஆனால், முன்னேற்றத்தின் முதற்படியாக, தீர்மானம் எடுத்தலும் அதனை நடைமுறைப்படுத்தலுமே அமைகிறது.

இப்போது, நீங்கள் இந்தப் பதிவை வாசிக்கிறீர்கள் என்றால், அதுவும் உங்களின் ஒரு தீர்மானம் தான். நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் எம்மையறியாமலேயே தீர்மானங்களை எடுக்கிறோம். சிலவேளைகளில் எமக்கென தீர்மானங்களை எடுக்க மற்றவர்களை நியமிக்கும் கொடுமையும் உண்டு.

life_beautiful

தீர்மானங்கள், உணரப்படாமலேயே எடுக்கப்பட வேண்டியதா? உங்கள் நண்பரொருவருடன் விடுமுறை நாளில் வெளியே ஓய்வைக் களிக்கச் செல்வதாக உத்தேசித்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் நண்பர், “இன்றைக்கு பூங்காவிற்குச் செல்வோமா? அல்லது நூதன சாலைக்குச் செல்வோமா?” என்று கேட்கிறார்.

பலவேளைகளில், பலரும் இந்த நிலைக்கு தமது பதிலாக வைத்திருப்பது, “எதுவானாலும் ஓ.கே” என்பது தான். இங்கு தீர்மானங்கள் எம்மையறியாமலேயே♥ எடுக்கப்படாமல் இருந்துவிடுகிறது. சிறு சிறு விடயங்களில் கூட தீர்மானங்களின் ஆதிக்கம் மிகவும் உன்னதமானது.

அதுவொரு சிறிய நாளாந்த உதாரணம். ஆனால், நாம் ஒவ்வொரு கணமும் தீர்மானங்கள் எடுக்கும் நிலையிலேயே இருக்கிறோம். தீர்மானங்கள் எடுக்கப்படுவதால் மட்டும் வெற்றியோ முன்னேற்றமோ நிச்சயிக்கப்பட்டு விடாது. அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஆக, தீர்மானங்கள் எம்மால் உணரப்பட்டு எடுக்கப்பட வேண்டியதே!

“வெற்றியாளர், வித்தியாசமான காரியங்களைச் செய்வதில்லை. மாறாக, அவர்கள் காரியங்களை வித்தியாசமாகச் செய்து விடுகிறார்கள்” என்ற பிரபலமான கூற்றுக்கு ஒப்ப, சாதனையாளர்கள், ஒவ்வொரு தீர்மானங்களும் தான் அவர்களை வெற்றியாளர்களாக உருவெடுக்க வைக்கிறது.

தீர்மானம் எடுப்பதில், பலரும் யோசிக்கின்ற விடயம், இந்த முடிவால் தோல்வி கிட்டிவிடுமோ என்ற அவநம்பிக்கை. முடிவுகளின் பெறுபேறுகள் சொல்லித் தரும் பாடங்களை எந்த நூலோ அல்லது கலாசாலையோ உங்களுக்குக் கற்றுத் தரப் போவதில்லை.

தோற்றுப் போகும் தருணங்களில் வாழ்க்கைக்கு அழகிய பாடங்கள் பரிசாய்க் கிடைக்கிறது என புளகாங்கிதம் கொள்வோம். கவிஞர் வைரமுத்துவின் கவிதை வரிகள் என் ஞாபகத்திற்கு இந்நேரம் வந்து தொலைக்கிறது. “தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து, விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்.” அது அப்படியாகவே இருக்கவும் வேண்டும்.

வாழ்க்கையில் தோல்வி வரும். வரவும் வேண்டும். ஆனால், தீர்மானங்கள் எடுத்து, அதனை நடைமுறைப் படுத்தும் அழகிய பாங்கை வாழ்க்கைக்கு கொண்டு வரும் போது, தோல்விகள் வெற்றிகளால் பரிவர்த்தனை செய்யப்படும்.

அறிந்திருப்பது என்பது புத்திசாலித்தனமல்ல. அறிந்தவற்றை பிரயோகிப்பதில் தான் அறிவு ஆனந்தம் கொள்கிறது.

அறிந்தவற்றை வாழ்க்கையில் நடைமுறைக்கு கொண்டுவர தீர்மானங்கள் தூணாக அமைகிறது. முன்னேற்றம் என்ற முனுமுனுப்பு வேண்டாம். முன்னேற முடியுமென திடசங்கல்பம் கொள்வோம்.

– உதய தாரகை

4 thoughts on “தீர்மானம்: முன்னேற்றத்தின் வேர்

  • தீர்மானங்கள் சிலவேளை தீர்வுகளின் அச்சாணியாகக் கூட இருந்துவிடுவது உண்டு. வாழ்க்கையின் அத்தனை விடயங்களும் வாசிக்கப்பட வேண்டும்.

   நன்றி சனூன் தங்கள் கருத்துக்கு.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

 1. இதை வாசிக்கையில் எங்கோ படித்த கதையொன்று ஞாபகம் வருகிறது.
  வாழ்க்கையில் வியாபாரம் செய்து முன்னேறி புகழின் உச்ச நிலையை அடைந்த ஒருவரிடம் உங்கள் வாழ்வில் இந்த நிலையை எவ்வாறு அடைந்தீர்கள்? என்று கேட்கப்பட்ட போது,
  “சரியான தீர்மானங்கள்”
  என்றாராம். சரியான தீர்மானங்களை எவ்வாறு எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு
  “அனுபவம் மூலமாக”
  என்றாராம். அனுபவத்தை எவ்வாறு பெற்றீர்கள் என்று கேட்டதற்கு
  “பிழையான தீர்மானங்கள்”.
  என்றாராம். நீங்கள் கூறியது போலவே எல்லாத் தீர்மானங்களும் முன்னேற்றத்திற்கு வழியே!

  • றம்ஸி வாங்கோ.. நன்றி ஆழமான கதை கொண்டு இப்பதிவுக்கு மேலும் அர்த்தம் சேர்த்ததற்கு.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s