மெய்யென நம்பியுள்ள பொய்கள்

நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளின் வகைகளும், நிலைகளும் ஒவ்வொருக்கு ஒருவர் வேறுபடும். நம்பிக்கை – சூழல் காரணிகளால் வலுப்படுத்தப்படலாம் அல்லது, வழு என பலரும் அதனை விட்டு நீங்கலாம். ஆனால், நம்பிக்கை – பிழையைக்கூட சரியென எண்ண வைத்துவிடும் வலிமை கொண்டது!

நம்பிக்கைகள் என்றுமே மெய்யானதாக இருந்ததுமில்லை. அதுபோலவே, என்றுமே பொய்யானதாகவும் இருந்ததில்லை. நம்பிக்கை, மெய்யுடன் கலக்கும் போது, தரம் கொள்கிறது.

பல்லாண்டுகள் எம் முன்னோர்கள் சொன்ன விடயங்களை எந்த ஆய்ந்தறிதலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் நாம், பல செய்கைகள், முறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் என்பவற்றிற்கு பின்னே காணப்படும் அழகிய அறிவியல் சார்ந்த விடயங்களை அறிய மறந்து விடுகிறோம்.

இதனால், நம்பிக்கைகள் பல வேளை கனமிழக்கிறது. சிலவேளை, புதிய காரணமில்லாத இன்னொரு (மூட)நம்பிக்கைக்கு விதை போடுகிறது. அதுவே, நம்பிக்கைக்கான இன்னொரு குழுவை உருவாக்கவும் வழி செய்துவிடுகிறது!

சின்னச் சின்ன விடயங்களில் இருக்கும் உண்மை நிலைகளைக் கூடக் கண்டு கொள்ளாமல், நாம் நினைத்தபாட்டிலேயே மெய்யென எல்லாவற்றையும் நம்புவது, எந்த வகையில் பொருத்தமானது?

கடந்த ஏப்ரல் மாதம் கூகிளின் ஊழியர் ஒருவர் நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில், நின்று கொண்டு அங்கு வந்தவர்களிடம் ஒரு சிறிய கேள்வியொன்றைக் கேட்டார். அது மிக மிகச் சிறிய கேள்விதான். ஆனால், பெற்ற விடைகள் தந்துவிட்ட பெறுபேறு கொடுமையானது.

கேட்கப்பட்ட கேள்வி What is a Browser? என்பது தான். கொடுமை என்னவென்றால், குறித்த கணக்கெடுப்பில் கலந்துகொண்ட எட்டு சதவீதமானவர்களுக்கு மட்டுந்தான் Browser என்றால் என்னவென்றே தெரிந்திருந்தது. தமிழில் Web Browser ஐ இணைய உலாவி என்று அழைப்போம்.

குறித்த நாளில் கணக்கெடுப்பில் கலந்து கொண்டோர் பலரும் Search Engine (தேடற்பொறி) ஐ இணைய உலாவி என்று நம்பி வைத்திருந்துள்ளனர். கூகிளின் Google Chrome என்ற இணைய உலாவியை எவரும் அறிந்திருக்கவில்லை என்பது இன்னொரு பெரிய கொடுமை.

அந்தக் கொடுமையை நீங்களும் பாருங்களேன். வாய்விட்டுச் சிரிக்கலாம்.

அதிகமானோர் தங்கள் கணினியில் காணப்படும் இணைய உலாவியை தங்களின் வலை உலாவலுக்கு பயன்படுத்திவிடுகின்றனர். அவர்கள் தாங்கள் பாவிக்கும் இணைய உலாவிகளைப் பற்றி எந்தக் கவனமும் எடுப்பதில்லை.

“Google Chrome ஐ போட்டு, internet ஐ browse பண்ணு, அது ரொம்ப fast ஆனது” என்றேன்.

“அதென்ன குரோம்..? சும்மா விட்டுட்டு வேலையைப் பாரு” என்றான் அவன்.

இது இன்னொருவிடம். வேறொருவன். நான்.

“Firefox பாவித்திருக்கிறயா? ரொம்ப secure ஆன browser. வேகமாக சைட்டெல்லாம் load ஆக்கும்” என்றேன்.

“என்னாது..? எனக்குத் தெரியும்.. ஆனா அதெல்லாம் install பண்ணிக் கொண்டு இருப்பானேன். என்ன கம்பியூட்டர்ல Internet Explorer இருக்கு அது போதும்” என்கிறான்.

உலகில் இருபது சதவீதமானவர்கள் இன்னும் Internet Explorer (IE) எனும் Microsoft இன் இணைய உலாவியின் Version 6 ஐ (அதாவது IE6) தமது வலை உலாவலுக்காக பயன்படுத்துகின்றனர். இணையத்தின் பல இணையத்தளங்கள் இந்த உலாவியில் சரியாகத் தெரிவதில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

Kill IE6 என்று அந்த உலாவியின் பாவனையை உலகத்திலிருந்து ஒழிக்க பல போராட்டங்கள் வேறு நடைபெறுகிறது (கெளம்பிட்டாங்கய்யா..).

இணையத்தில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் கூகிளுக்கு நிகர் கூகிள் தான். கூகிளின் தொழில்நுட்ப முன்னெடுப்புகளுக்கு தடையாக விளங்கும் ஒரு விடயமாக அதிகமானோர் IE பாவிப்பது விளங்குகிறது.

அதெப்படி? என்பது உங்களின் அடுத்த கேள்வியாக இருக்கலாம்.

புதிய தொழில்நுட்ப சாத்தியங்களைக் கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்தும் போது, அந்தப் புதிய விடயங்கள் தொழிற்படும் நிலையிலுள்ள உலாவிகளிலேயே அந்தச் சேவை கொடிகட்டிப் பறக்கலாம். அண்மையில் வெளிவந்த Google Wave இனை IE இல் வெறுமனே பாவிக்க முடியாது. அதற்கு கூகிள் தரும் நீட்டிப்பொன்றை IE இற்கு install செய்ய வேண்டும் (கெளப்புறாங்கய்யா பீதிய..).

இப்போது, காணொளிகளை கண்டு களிக்க YouTube தளத்திற்கு IE6 மூலம் சென்றால், “நீங்க பயன்படுத்துவது ரொம்ப பழைய browser சார். நாங்க விரைவில் உங்களுக்கு வீடியோ காட்டமாட்டோம். முடிந்தால், அதற்கிடையில் புதிய browser ஒன்றை போட்டுக்கோங்க..!” என்று கூகிள் அறிவித்தல் கொடுக்கிறது.

Browser என்றால் என்னவென்பது பற்றி பிழையான தகவல்களை எண்ணியுள்ள மக்கள் தொடர்பில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் கூகிள் அண்மையில் What Browser என்ற செயற்றிட்டமொன்றை தொடங்கி அதற்கு அழகான இணையத்தளமொன்றையும் வெளியிட்டது.

பலரும் மெய்யென நம்பியுள்ள Browser பற்றிய பொய்களை அகற்றும் பொருட்டு, இது உதவுமென கூகிள் நினைக்கிறது. வயதுபோனவர்களுக்குக் கூட, உலாவி என்றால் என்ன? என்ற கேள்விக்கான விடையை சின்னதொரு ஒரு நிமிடம் வரை நீளும் குறுகிய காணொளி மூலம் கூகிள் விளக்குகிறது.

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?!

நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில்நுட்ப விடயங்கள் சம்மந்தமாக சொல்லும் போது, நீங்கள் கதைக்கும் கலைச்சொற்களின் பாரத்தை பார்த்தே பல பேர், இந்த மேட்டர் நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவு எடுத்துவிடுவார்கள்.

ஆதலால், தொழில்நுட்ப விடயங்களை, ஏன் சங்கீரணமான விடயங்களைக் கூட மிக எளிமையாகச் சொல்லிக் கொடுக்கும் போது, இன்னும் இதுபற்றி அறிய வேண்டுமென அவர்கள் ஆர்வங் கொள்வார்கள்.

நாம் தெரிந்திருக்கிறோம் என்பதன் உண்மை, அறிந்த விடயத்தை நாம் எந்தளவில் மற்றவருக்கு எளிமையாக எடுத்துச் சொல்ல முடிகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.

இன்னும் சில உண்மையான பொய்கள்

தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாகத்தான் பலரும் மெய்யென பொய்களை நம்பியிருக்கின்றனர் என நீங்கள் நினைக்கலாம். நினைத்தால் அதுகூட பொய்யானதே!!

நமது மூளையில் பத்து சதவீதத்தைதான் நாம் பயன்படுத்துகிறோம். ஏனைய தொன்னூறு சதவீதமும் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது என்பது நாமனைவரும் நம்பியுள்ள விடயம். ஏன் பல வியாபார விளம்பரங்கள் கூட இதைச் சொல்லி வர்த்தகமே நடத்துகிறார்கள். ஆனால், இது பொய். நாம் மூளையை முற்றாகவே பயன்படுத்துகிறோம்.

water_overdose

நீரை எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம், எந்தப் பிரச்சனையும் கிடையாது என்றே எல்லோரும் நம்புகின்றனர். உண்மை நிலை அவ்வாறல்ல. அதிகமாக நீரை அருந்தியதால் மரணமடைந்த செய்தியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நடத்திருக்கிறதே!!

The Moment of Truth என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் வெறும் lie detector என்ற polygraph கருவியின் மூலம் போட்டியில் கலந்து கொள்ளுபவர் சொல்லும் விடயங்கள் உண்மையா பொய்யா என கண்டுபிடிக்கப்படும். ஆம், இல்லை என்ற விடைகளை சொல்லும் போது, அது உண்மையா அல்லது பொய்யா என அந்த கருவி கண்டுபிடித்துச் சொல்லிவிடும்.

இந்தப் போட்டியில் கேட்கப்படும் கேள்விகளோ, படு மோசமானவை. அந்தரங்கமான விடயங்கள் பற்றியதாகும். ஆனால், வெற்றியாளருக்குக் கொடுக்கப்படும் பரிசு பல மில்லியன் டொலர்களாகும்!!

குறிப்பிட்ட கருவியால் பொய்யைக் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி முடிந்தாலும் அதன் பெறுபேறு மிகவும் சரியானதா? 1996 ஆம் ஆண்டு, American Civil Liberties Union, “பொய்யைக் கண்டுபிடிக்கும் எந்த கருவியும் கிடையாது. “லை டிடக்கடர்” என்பது குருதி அழுத்தம், சுவாசிக்கும் வீதம் போன்றவற்றைக் கொண்டே உண்மைத் தன்மையை அறிகின்றது. இந்த உளவியல் ரீதியான மாற்றங்களை பல உணர்ச்சிகள் மூலம் மாற்றமடையச் செய்ய முடியும்” என அறிக்கை விட்டது.

மெய், பொய் எதுவெனச் சொல்லும் கருவி பொய்யைச் சரியாக கண்டுபிடிக்காது என்ற விடயமும் ஒரு மெய்யாகும். பொய்யைச் சரியாகக் கண்டுபிடிக்கும் என்று நம்பியது மெய்யான பொய்யாகும் (குழம்பிட்டீங்களா?).

பொய், மெய் என்பன பற்றி அறிதலே வாழ்க்கையின் மூட நம்பிக்கைகளை களைதலுக்கான ஆதாரம். இன்று ஆதாரம் இல்லாமலே பல விடயங்கள் ஆதரவு வேண்டி நிற்பது கொடுமை! தேடல் ஒன்றுதான் தெளிவின் வழி!

– உதய தாரகை

9 thoughts on “மெய்யென நம்பியுள்ள பொய்கள்

 1. //பல்லாண்டுகள் எம் முன்னோர்கள் சொன்ன விடயங்களை எந்த ஆய்ந்தறிதலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் நாம், ..//
  மறைமுகமாக எதையோ Touch பண்ணுகிற மாதிரி தோணுதே… அது பற்றி எப்போது தெளிவாய்ச் சொல்லப் போறீங்க?

  • @Ramzy,

   எதையோ தொடுவதாய் இருக்கிறதா? இருக்கலாம். எல்லாம் பற்றி நிறத்தில் சொல்வேன். வில்லியம் ஒஸ்லரின் எனக்குப் பிடித்த கூற்றொன்று உள்ளது.

   We are here to add what we can to life, not to get what we can from life.

   அப்படியாகவே வாழ்க்கை இருக்கவும் வேண்டும். வாழ்க்கைக்கு சேர்க்கக் கூடிய பல விடயங்கள் பற்றியும் பேசலாமென எண்ணியுள்ளேன்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • @நிமல்,

   வாங்க நிமல். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

  • @மு. மயூரன்,

   வாங்க மயூரன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

 2. //நீங்கள் கதைக்கும் கலைச்சொற்களின் பாரத்தை பார்த்தே பல பேர், இந்த மேட்டர் நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவு எடுத்துவிடுவார்கள்.

  hee..hee….

  //பொய், மெய் என்பன பற்றி அறிதலே வாழ்க்கையின் மூட நம்பிக்கைகளை களைதலுக்கான ஆதாரம். இன்று ஆதாரம் இல்லாமலே பல விடயங்கள் ஆதரவு வேண்டி நிற்பது கொடுமை! தேடல் ஒன்றுதான் தெளிவின் வழி!

  it’s true.

  • நன்றி குந்தவை அக்கா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

   தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

   இனிய புன்னகையுடன்,
   உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s