(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
மேசையில் வைத்து, கணினிகளை ஆராதித்த காலம் தொலைந்து மடியில் கணினியை வைத்து, ஆரவாரம் செய்கின்ற காலம் தொடங்கிய நிலையை அறிவீர்கள். ஆனால், கணினியின் சாத்தியங்கள் இன்றளவில் கையடக்க தொலைபேசிக்கே வந்துவிட்ட நிலை என்பது யாருமே எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலை.
தாய் மொழியில், கணினியிலோ, கையடக்கத் தொலைபேசியிலோ காரியங்கள் செய்கின்ற சாத்தியங்களை காண்கின்ற போதே, எல்லோரும் புளகாங்கிதம் அடைந்து கொள்வது தவிர்க்க முடியாததே! அந்த வகையில், iPhone இல் தமிழ் அழகாக தெரிவது அழகிலும் அழகு. மற்றும் Android பணிசெயல் முறைமைகளைக் கொண்ட கைடயக்க சாதனங்களில், தமிழ் தெரிவது இன்னும் சாத்தியமாக்கப்படவில்லை. ஆனாலும், Opera Mini இணைய உலாவியைக் கொண்டு, Android OS கொண்ட சாதனங்களிலும், அழகாய் தமிழைக் கண்டு கொள்ள முடியுமென்பது ஆறுதல்.
iPhone இன், தமிழினை அழகாக தெரியப்படுத்தும் ஆற்றலைக் கொண்டு, தமிழ் வலைப்பதிவுகளை ரொம்ப நேர்த்தியாக படிக்க முடிவது இனிமையான அனுபவம். இந்த அழகிய அனுபவத்தை கொஞ்சம் ஒரு படி மேலே கொண்டு செல்ல வேண்டுமென நினைத்தேன். அதற்காக iPhone இல், தமிழில் தட்டச்சு செய்கின்ற சாத்தியத்தை தருகின்ற செய்நிரலொன்றை (app) செய்தேன். அதன் பெயர் iTamil என்பதாகும்.
இந்த app ஐ பயன்படுத்தி, iPhone இல் அழகிய தமிழில் ஆச்சரியங்கள் நிகழ்த்திடலாம். இந்த app ஐ Google Transliterate API ஐக் கொண்டு பலப்படுத்தியுள்ளேன். அதன் படி, நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்கின்ற சொல்லின் ஒலிக்கேற்ற தமிழ்ச் சொல்லை சாமர்த்தியமாக தமிழ்ச் சொல்லாக மாற்றித் தரும். இங்கு எழுத்துப்பெயர்ப்பு (Transliterate) அழகியலாகவே நடக்கிறது.
இந்த app ஐ பயன்படுத்தி நிறைய விடயங்களை ஐபோனில் சாத்தியமாக்கலாம். தமிழில் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புதல், வலைப்பதிவில் மறுமொழி சொல்லுதல், தமிழில் குறிப்பெடுத்தல், அழைப்பெண்களை தமிழில் சேமித்தல், தமிழில் டிவிட்டுதல், நண்பருக்கு Facebook இல் செய்தி சொல்லுதல், தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல் என அவற்றை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவற்றில் ஒரு சில விடயங்களை நாம் எடுத்துக் காட்டாக இப்போது பார்க்கலாம். ஐபோனின் காட்சித்திரைகளின் வலமாக எடுத்துக்காட்டுகளை நிரற்படுத்துகிறேன்.
iTamil ஐ ஐபோனில் நிறுவுதல்
ஐபோனில், தமிழில் இலகுவில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் iTamil app ஐ உங்கள் iPhone இல் நிறுவுவதற்கு, உங்கள் iPhone இலிருந்து http://itamil.niram.org என்ற தளத்திற்கு செல்வதன் மூலம் நிறுவிக் கொள்ளலாம். அல்லது பின்வரும் QR code ஐ உங்கள் iPhone ஐக் கொண்டு scan செய்து கொள்வதன் மூலமும், நிறுவிக் கொள்ள முடியும்.
இவ்வாறு நிறுவிக் கொள்வதன் மூலம், iPhone இன் திரை iTamil app இன் icon க் கொண்டு காட்சிதரும்.

ஐபோனில் iTamil app ஐ நிறுவியதும் அது, இவ்வாறே தோன்றும்.
தமிழில் தட்டச்சு செய்தல்
எழுத்துப்பெயர்ப்பு முறையின் மூலம் iTamil app ஆனது, ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொற்களின் ஒத்த ஒலியைக் கொண்ட தமிழ்ச் சொல்லைத் அந்தக் கணத்திலேயே திரையில் தோன்ற வைக்கும். எடுத்துக்காட்டாக, “kavithai” என தட்டச்சு செய்து, space bar ஐ அழுத்தியதும், “கவிதை” என திரையில் தோன்றும். இதுவே எழுத்துப்பெயர்ப்பு (Transliterate) என வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

iTamil app இன் இடைமுகம்
தட்டச்சு செய்யப்பட்ட சொற்கள் அடங்கிய திரை பின்வருமாறு தோற்றமளிக்கும்.

தமிழில் தட்டச்சு செய்தல் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தட்டச்சு செய்யப்பட்ட தமிழ் சொற்களை Copy செய்து, தேவையான இடங்களில் Paste செய்வதன் மூலம் iPhone இல் தமிழ்ப் படுத்தலாம் அத்தோடு, நண்பர்களோடு தமிழில் சம்பாஷிக்கலாம். அதுபற்றிய எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

iTamil app மூலம் தட்டச்ச தமிழ்ச் சொற்களை Select செய்து Copy செய்கின்ற இடைமுகம்.
தமிழில் தொலைபேசி எண்களின் புத்தகம்
உங்கள் ஐபோனில், தொலைபேசி எண்களை சேமித்து வைக்கின்ற Contacts என்ற பகுதியில் தமிழில் நண்பர்களின் பெயர்களை சேமித்து வைக்க முடிவது இனிய அனுபவம்.

Contacts இல் தமிழ் சேர்க்கும் இடைமுகம்
இவ்வாறு சேர்த்த தொடர்புகளுக்கு அழைப்பை எடுக்கும் போதோ, அவர்களிடமிருந்து அழைப்பை பெறும் போதோ அழகிய தமிழில் iPhone இன் திரை தோன்றுவது கவிதை.

அழைப்பெடுக்கும் நிலை
தமிழில் குறுஞ்செய்திகளை அனுப்புதல்
தமிழில் எமது எண்ணங்களை பரிமாறும் போது, கிடைக்கின்ற அலாதியான இன்பத்தை எதுவுமே தந்துவிடுவதில்லை. என்னதான் வேற்று மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், தாய் மொழியில் கதைக்கின்ற, எண்ணங்களை பகிர்கின்ற சுகம் விபரிக்க முடியாத இன்பம்.
iPhone ஐ வைத்திருக்கும் உங்கள் நண்பருக்கு உங்கள் iPhone இலிருந்து iTamil app ஐ பயன்படுத்தி குறுஞ்செய்தி என வழங்கப்படும் SMS ஐ அனுப்பலாம். அவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். இது அழகிய கவிதை போன்ற அனுபவம்.

நண்பரிடையே நடந்த குறுஞ்செய்திப் பகிர்வு
தமிழில் குறுஞ்செய்திகள் பரிமாறப்படுகின்ற அழகு iPhone இன் திரையில் இன்னமும் அழகு கொள்கின்றது என்பது நீங்கள் உணர்ந்து கொள்கின்ற உண்மை.

குறுஞ்செய்தியை அனுப்புகின்ற நிலையின் இடைமுகம்.
இவ்வாறு இன்னும் பல நிலைகளில் உங்கள் ஐபோனில் நிறுவப்பட்டுள்ள iTamil மூலம் தமிழை தட்டச்சு செய்து, பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் ஐபோனில் நிறுவப்பட்டுள்ள ஏனைய app களின் இடைமுகத்திலும், iTamil மூலம் தட்டச்சு செய்து பெறப்பட்ட தமிழ் சொற்களை, வசனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியுமென்பது போனஸ் தகவல். குறிப்பாக iPhone apps ஆன, Notes, Twitter, Facebook, Skype ஏன், WordPress for iOS எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அழகிய தமிழை ஐபோனில் நிறைத்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது, iTamil app ஐ நிறுவுவது மட்டுந்தான். எனது இந்த முயற்சி உங்களுக்கு பயனுடையதாய் அமையும் என நம்புகிறேன். உங்கள் மறுமொழிகளையும் எண்ணங்களையும் சொல்லி அனுப்புங்கள்.
இதேவேளை இன்னுமொரு இனிப்பான தமிழ்ச் செய்தி: Google Chrome இணைய உலாவியில் இலகுவாக தமிழில் எழுத்துப்பெயர்ப்பைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யும் extension ஒன்றையும் உருவாக்கியிருக்கிறேன். நீங்களும் உங்கள் Chrome உலாவியில் நிறுவி, அழகான தமிழில் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். Google Chrome Web Store இற்கு செல்வதன் மூலம் Tamil Chrome Transliterate extension ஐ நிறுவிக் கொள்ள முடியும். அதற்கான இணைப்பு இது: http://goo.gl/kcncJ
Chrome extension தொழிற்படும் விதத்தைக் காட்டும் காணொளி இதோ,
– உதய தாரகை
நல்ல பயனுள்ள செயலி. என்னிடம் ஐ-கருவிகள் எதுவும் இல்லாததால் பயன்படுத்தி பார்க்க முடியவில்லை. ஆனாலும் இடைமுகங்களை பார்க்கும் போது மிகவும் நல்ல செயலியாகவே தெரிகிறது.
nice, your iphone app!
keep it up…….
நன்றி நிமல். 🙂
நன்றி Alex Paandiyan. 🙂
Muyarsisaikinran nanbare
very nice useful thank u
Super. Do u have any like this for windows 6.5 mobile?
ur blog is very useful.
நல்ல பயனுள்ள செய்நிரல் .. எனது ஐபோனில் பயன்படுத்தினேன் … நன்றாக இருக்கிறது
நமது மக்கள் தமிழில் எண்ணங்களை பரிமாறிக் கொள்ள மற்றுமொரு வழி
புதிய உலகுக்கு வித்தியாசமான உணர்வு கொடுக்கப்பட்டுள்ளது…. நல்ல பயனுள்ள செய்நிரல் .
பிரயோசனம் மிக்கதொரு செயலி மற்றும் பதிவு. வாழ்த்துக்கள்
நல்ல பயனுள்ள செய்நிரல்
நன்றாக இருக்கிறது!
கணித்தமிழுக்கு மேலுமொரு ஆரம் சூட்டியதற்கு நன்றி.