(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 7 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
நிலவின் அழகு பற்றிய கவிதைகளை ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்நாளில் கட்டாயம் கேட்டுவிடுகின்றான் என்பது வெளிப்படையான உண்மை. ஒரு பெண்ணின் அழகு பற்றிய வர்னணைகளில் கவிஞனுக்கு நிலவுதான் ஆறுதல் தருகிறது. அடைக்களம் கொடுக்கிறது. நிலவின் வளர்தல், தேய்தல் போன்ற நிகழ்வுகள் வாழ்வின் அனுபவங்களை சொல்லுவதாய் இருக்கவேண்டுமென நான் நினைப்பதுண்டு.
நிலவின் தோற்றம் பற்றிய நிலைகளில் அதற்கு அதிகமான பெயர்களும் உண்டு. நிலவில்லாத போது, அமாவாசை என்று அந்த நாள் சொல்லப்பட்டாலும் நிலவின் ஒவ்வொரு நாளின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு பெயர்களும், வடிவங்களும் இருப்பது ரசிக்க வேண்டிய சுவை.