அதோ வானத்தை பார்! பட்டமல்ல, சுப்பர் நிலவு

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும்  7 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நிலவின் அழகு பற்றிய கவிதைகளை ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்நாளில் கட்டாயம் கேட்டுவிடுகின்றான் என்பது வெளிப்படையான உண்மை. ஒரு பெண்ணின் அழகு பற்றிய வர்னணைகளில் கவிஞனுக்கு நிலவுதான் ஆறுதல் தருகிறது. அடைக்களம் கொடுக்கிறது. நிலவின் வளர்தல், தேய்தல் போன்ற நிகழ்வுகள் வாழ்வின் அனுபவங்களை சொல்லுவதாய் இருக்கவேண்டுமென நான் நினைப்பதுண்டு.

நிலவின் தோற்றம் பற்றிய நிலைகளில் அதற்கு அதிகமான பெயர்களும் உண்டு. நிலவில்லாத போது, அமாவாசை என்று அந்த நாள் சொல்லப்பட்டாலும் நிலவின் ஒவ்வொரு நாளின் வளர்ச்சிக்கும் ஒவ்வொரு பெயர்களும், வடிவங்களும் இருப்பது ரசிக்க வேண்டிய சுவை.

நீல நிலவு பற்றிய விடயத்தை நான் நிறத்தில் 2007 ஆம் ஆண்டு எழுதிய அத்தி பூத்தாற் போல்.. என்ற பதிவில் சொல்லியிருப்பேன். அண்மைக் காலமாக, நிலவு பற்றிய அவதானிப்புகள், கவனங்கள் எல்லாமே அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டியுள்ளது.

இம்மாதம் 19ஆம் திகதி, ஆகாயத்தில் நிலவை வழமை போலவே காணலாம். ஆனால், அந்த நிலா சுப்பர் நிலா என்ற பெயர் கொண்டு வழங்கப்படுகிறது. அப்படியேன் அது அழைக்கப்பட வேண்டும், என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அன்றைய தினத்தில் நிலவு பூமிக்கு மிக அண்மித்த நிலையில் காணப்படும் சந்திரனின் கோளப்பாதைக்குள் வந்துவிடுகிறது. இவ்வாறான நிலை மீண்டும் 18 வருடங்களின் பின்னர் நடக்குமாம். பூமிக்கருகாய் இருக்கும் நிலவாய், நிலா வந்துவிடும் நிலையில் அது சுப்பர் நிலவென்று சொல்லப்படுகிறது.

பூமிக்கு அருகாமையாக வந்துவிடப்போகும் நிலவினால், பூமியின் இயக்கக் கோலங்களில் மாறுதல்கள் ஏற்படலாமோ என்ற ஐயம் பலரிடமும் இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

மார்ச் 19ஆந் திகதி, தோன்றப் போகும் நிலவு வெறும் சாதாரண பௌர்ணமி நிலவாக இருக்கப் போவதில்லை. அதுவொரு சுப்பர் நிலவாக இருக்கப் போகிறது என்பது மட்டும் திண்ணம்.

நிலவின் ஈர்ப்புவிசையின் அலாதியான பிரியம், எமது பூமியின் சமுத்திரங்களின் அலைகளில் ஆதிக்கம் செலுத்துவது பற்றிய நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். சமுத்திர பேரலைகளையும் இது ஏற்படுத்தலாம் என்பதும் நீங்கள் அறிந்ததே! ஆக, நிலவு பூமிக்கு மிக்க அண்மையில் வருகின்ற போது, எமது பூமியில் பூகம்பங்களோ, சுனாமி என்கின்ற ஆழிப் பேரலைகளோ ஏற்படுமா? என யோசிப்பது நியாயமான சந்தேகத்தை தன்னகம் கொண்டுள்ள கேள்விதான்.

இது பற்றிய பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் புவியியல் ஆய்வகத்தின் ஆய்வுகளின் முடிவில், சுப்பர் நிலவிற்கும் பூமியின் அசாதாரண மாற்றங்களுக்கும் எந்தத் தொடர்புகளும் இனங்காணப்படவில்லை.

“ஆபத்துக்கள் நடக்கலாம், ஆனாலும், ஆபத்துக்கள் நடக்காத பட்சத்தில் நீங்கள் அவசர நிலையை சமாளிப்பதற்காக வாங்கி வைத்த மெழுகுவர்த்திகள், தகரத்திலடைத்த உணவுகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் என்பன எஞ்சலாம்” என வானியலாளரான ரிச்சார்ட் நோல் சொல்கிறார்.

நாம், எமது ஞாபகங்களை மூளை நினைவகத்தில் தேக்கி வைக்கப்படுகின்ற முறையானது, ஒரு முறையான கோலத்தை (Pattern) கொண்டுள்ளது. எல்லாச் சம்பவங்களையும் நாம் கோலமொன்றின் அடிப்படையிலேயே எம் நினைவகத்தில் வைத்துக் கொள்கிறோம். பௌர்ணமி நாட்கள் என்பது கூட, சாதாரண நாட்களைப் போன்றதே, ஆனாலும், நாம் அந்த நாளில் நடக்கின்ற நிகழ்வுகளை அந்த நாளோடு சேர்த்தாற் போல், நினைவில் வைத்துக் கொள்கிறோம். இந்தக் கோலந்தான், பௌர்ணமி நாட்களில் தீங்குகள் அதிகம் நடக்கின்றது என்ற பிரம்மையை உண்டு பண்ணுகிறது.

சாதாரண நாட்களில் நடக்கின்ற கசப்பான, உழுக்கின்ற சம்பவங்கள் எல்லாவற்றையும், எல்லா நேரமும் நாம் ஒருபோதும் நினைவில் இருத்துவதில்லை. இதனால் தான், 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் சுப்பர் நிலவு தோன்றிய போதுள்ள காலநிலை மாற்றங்கள், இயற்கை அனர்த்தங்கள் என்பன வரவுள்ள சுப்பர் நிலவின் தாக்கம் பற்றிய கூற்றுக்களுக்கு வலு சேர்க்கின்ற ஆதாரங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனாலும், மேற்சொன்ன ஆண்டுகள் தவிர்ந்த ஆண்டுகளில், மிகப்பாரியளவான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனாலும், நாம் தகவல்களை நினைவில் வைத்து கிரகிக்கின்ற கோலத்தின் அடிப்படையில் அவற்றை ஞாபகப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.

அண்மையில் ஜப்பானில் இடம் பெற்ற பூகம்பம், அதனைத் தொடர்ந்த சுனாமி ஆகிய அனர்த்தங்களுக்கு பின்னணியில் சுப்பர் நிலவு பற்றிய அனுமானங்களுக்கு வாய்ப்பேயில்லை என விஞ்ஞானம் ஆணித்தரமாக சொல்கின்றது.

“விஞ்ஞானத்தின் மொத்த முடிவுகளுமே பல அனுமானங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகிறது” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

2 thoughts on “அதோ வானத்தை பார்! பட்டமல்ல, சுப்பர் நிலவு

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s