எதை நீ துரத்துகின்றாய்?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 42 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

நாம் அன்றாடம் சந்திக்கின்ற மனிதர்களில் எப்போதுமே, புதுமையான விடயங்களைக் கண்டு கொள்ள முடியும். ஒவ்வொரு தனிநபரும் உலகைக் காணும் விதம், வித்தியாசமும் தனித்துவமும் உடையதனால், இந்த அழகிய நிலை எய்தப்படுகின்றது. இதுதான் இயல்பானது. உண்மையுமானது.

பதிவிற்குள் செல்ல முன்னர் உங்களுக்காக ஒரு குட்டிக் கதை, “ஒரு ஊரில ஒரு நரி. அதோட கதை சரி.

அண்மையில் நான் கேள்வியுற்ற கதையொன்றை — நாய்க் கதை — உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைத்தேன். அதுவே இப்பதிவாயிற்று.

ஒரு ஊரில் ஒருவனிடம் மிகச் சுறுசுறுப்பான நாயொன்று இருந்தது. வீதியோரத்தில் வாகனங்கள் வரும் வரை காத்திருப்பதும், வாகனம் வந்ததும் குரைத்தபடி, அதனைத் துரத்திக் கொண்டு ஓடி, முந்திச் செல்ல முயற்சிப்பதும் தான் அதன் வேலை. இதுதான் அந்த நாயின் ஒவ்வொரு நாளினதும் செயற்பாட்டு நிலை.

இப்படியே வாகனத்தைத் துரத்திச் செல்லும் நாயை அவதானித்து வந்த அயல் வீட்டுக்காரன், “உங்கட நாய் அது துரத்திப் போகும் காரை எப்பயாவது, பிடிக்குமென்று நீங்க நெனக்கிறீங்களா?” என்று நாயை வளர்த்தவனிடம் ஒரு நாள் கேட்டான்.

“அது பற்றி நான் கவலைப்படல.. ஆனா, இந்த நாய் துரத்திப் போகும் காரை பிடிச்சால் கூட, அப்படி என்னதான் நடக்கப் போகுது என்பது பற்றியே நான் கவலைப்படுகிறேன்.” என்று அயல்வீட்டுக்காரனுக்கு அவன் பதிலளித்தான்.

“அதிகமானோர் வாழ்க்கையில் அர்த்தங்களே இல்லாத இலக்குகளை அடைவதை தங்கள் இலட்சியமாக கொண்டு செயற்படுவது கவலையளிக்கிறது,” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

2 thoughts on “எதை நீ துரத்துகின்றாய்?

  1. அர்த்தமில்லாத இலக்குகளும் அவற்றின் பால் சந்திக்கும் பிரச்சனைகளும் ஏராளமானோர் வாழ்க்கையில் ஏராளம். அப்படியான சில தருணங்களில் இப்படியான பதிவுகளும் படைப்புகளும் புது உத்வேகம் தருகின்றன.ஆளுமை நிறைந்த பல புது தகவல்கள் தரும் உதயதாரகைக்கு நன்றிகள்.

    I

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s