கணகாட்டும் கக்கிசமும் [புதன் பந்தல் – 05.10.2011] #6

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 51 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

இந்த வாரத்தின் புதன் பந்தல், அவஸ்தைகள் தரும் அழகிய பாடங்கள் பற்றிய விடயத்தைச் சொல்கிறது.

இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக்கூடும். ஆனாலும், மீள ஞாபகப்படுத்துவது உசிதமானதாகத் தோன்றியது.

அதுவொரு காலைப்பொழுது, பள்ளிக்கூடத்தில், வாத்தியார் பிள்ளைகளுக்கு உயிர்களின் தோற்றம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

“மயிர்க்கொட்டியொன்று, வண்ணத்துப்பூச்சியாகும் தருணத்தை நீங்கள் கண்டதுண்டா?” மாணவர்களை நோக்கி ஆவலாய் கேள்வி கேட்கிறார் வாத்தியார். மௌனம் அப்பொழுதை அலங்கரிக்கிறது.

“இந்த உறையிலிருந்து இன்னும் சில மணிநேரத்திற்குள் வண்ணத்துப்பூச்சி வெளியேற பல போராட்டங்கள் செய்யும். அந்தப் போராட்டத்தில் நீங்கள் துணைக்காக சென்று உதவி செய்யக்கூடாது” என்று கட்டளையிட்டபடி, சோதனைக்கூட வண்ணத்துப்பூச்சி வாழ்கின்ற அமைப்பை கவனிக்குமாறு கட்டளையிட்டு, வாத்தியார் நகர்ந்து செல்கிறார்.

எல்லா மாணவர்களும், வண்ணத்துப்பூச்சி குறித்த உறையிலிருந்து போராடி வெளியேற முயற்சிப்பதை கூர்ந்து அவதானிக்கின்றனர். வண்ணத்துப்பூச்சி அந்தவுறையை விட்டு வெளியேறுவதற்காக படும் அவஸ்தையைக் கண்டு கொண்ட ஒரு பையன், அதனை பொறுத்திருக்காது, அது அவ்வுறையை விட்டு வெளியேற உதவி செய்கிறான்.

அவஸ்தைகளகன்று, உறையை விட்டு நீங்கிய வண்ணத்துப்பூச்சி பிறந்த கொஞ்ச நேரத்திலேயே இறந்து போனது.

“இயற்கையின் விதிகள் அதிசயமானவை. உறையிலிருந்து வெளியேற முயற்சிக்கின்ற போது, வண்ணத்துப்பூச்சி படும் அவஸ்தைதான் அதன் இறக்கைகளுக்கு வலிமை கொடுக்கிறது. அதுவே அதன் வனப்பான வாழ்வுக்கு ஆதாரமாகிறது.”

“நீ வண்ணத்துப்பூச்சியை செயற்கையாக வெளியேற்றியதனால், வாழ்க்கையின் அழகிய பாடத்தை வண்ணத்துப்பூச்சி கற்றுக்கொள்ளும் வாய்ப்பை மறுத்தாய். அதன் மடிந்து போனது” என்ற வாத்தியார் வந்து விளக்கம் சொல்கிறார்.

அவஸ்தைகள், போராட்டங்கள் என விரியும் விசாலமான உணர்வு வீச்சுகளின் சுவாசம் எம்மைச் சேருகையில் தான் நாம் புடம் போடப்படுகிறோம். அங்குதான் நீ நீயாகி உருவாகிறாய்.

“தங்களின் பிரியமானவர்கள், எந்தத் தொல்லைகளையும் கக்கிஷங்களையும் அனுபவிக்கக்கூடாது என்று ஒவ்வொருவரும் காட்டும் அன்புத்தொல்லைகள், குறித்த பிரியமானவர்கள் வலிகளையோ, வலிமைகளையோ தெரியாமல் வளர வழிசெய்கிறது. ஈற்றில் வாழ்வின் முகவரி தொலைத்தவர்களாக அவர்கள் உருவெடுப்பது, ரொம்ப கொடுமையானது” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

One thought on “கணகாட்டும் கக்கிசமும் [புதன் பந்தல் – 05.10.2011] #6

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s