எங்கே உனது கதை?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

“கண்ணா, நீயொருத்தன் தான் இதைப் பண்ற. இதனால நீ ஒன்னும் பெரிசா கிழிக்கப் போறதில்ல. ட்றை கூட பண்ணாம பேசாம கம்மென இருந்திடு. ஆமா, சொல்லிட்டன்.” — அடிக்கடி நம்மையறியாமலேயே நமக்குள் நாமே கேட்கின்ற ஒலிகள்.

“யாருதான் இதைச் சொல்றது?” என்று நீங்கள் கேட்டு விடை கண்டதுண்டா?

அது யாருமல்ல — அவன் பெயர் தான் பயம்.

வாழ்க்கையில் பயம் எடுத்துக் கொண்டுள்ள பாத்திரம் — வில்லன். ஹீரோவான நீங்கள் எப்படியாவது அவனை வென்று, அவனை உங்கள் ஏரியாவுக்குள்ளேயே வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பயமில்லாமல் — பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்ற அளவில் செயற்படுகின்றவர்களை கண்டாலே அவர்கள் சார்பான எமது மதிப்பு கொஞ்சம் அதிகரிக்கும்.

நிலவிற்கு ஏகி அங்கு பவனி வந்தவர்கள். சூறாவளிகளைத் தாண்டியும் சுழன்று சென்றவர்கள். ஆகாயத்தில் நர்த்தனம் ஆடியோர். சுனாமிக்கே ஜுஜுபி சொன்னவர்கள்.

ஆயிரம் பேருக்கு முன்னால் நின்று தனது அழகான கருத்தை எடுத்தியம்பியோர். புற்றுநோய்க்கெதிராக நின்று வாழ்க்கையை வெல்ல முயல்வோர். ஆதரவற்ற குழந்தைகளை தன் குழந்தைகளாகப் பார்த்து வளர்க்க தத்தெடுப்போர்கள் என தமது நடவடிக்கைகளால் எம்மைக் கவரும் ஆயிரம் வகையான மக்கள் கூட்டத்தை அடுக்கிச் சொல்லிவிடலாம்.

ஏன் இவர்கள் எமது மனத்தை கவர்கின்றார்கள்? ஏனெனில், நாமும், எமது ஆழமான சிந்தையில் அவர்களாகவே இருக்கிறோம்.

நாம் யாவரும் அசலான மனிதர்கள் தாம். நிறைய குணாதியசங்களை ஒரே போன்றதாகவே கொண்டு வாழ்வின் சுழற்சியில் பயணிக்கிறோம்.

எவ்வளவுதான் எம்மிடையே கலாசார, சமூக வேறுபாடுகள் காணப்பட்ட போதும், அந்த அத்தனை வேறுபாடுகளுடைனையே நாம் ஒன்றாகவிருக்கிறோம் என்றே நான் நம்புகிறேன்.

பயம் உங்களை விட்டு அகன்று செல்லும் வரையில், (அது முற்றிலுமாக ஒருபோதும் எம்மை விட்டு செல்லாது என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும்) தைரியத்தோடு இருக்க உங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நிலையில் மற்றவர்களை கவர்ந்து அவர்கள் நேசிக்கும் இன்னொரு ஆளுமையாக நீங்கள் உருவாக்கம் பெற வழி தோன்றும்.

உலகம் முழுமை பெறுவதற்காக உங்கள் கதை நிச்சயமாகத் தேவைப்படுகிறது. எங்கே உங்கள் கதை?

“உங்களின் கதையை எப்போது உலகோடு பகிர்ந்து கொண்டு, உலகின் முழுமைக்கு உயிர் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கோபாலு கேட்கச் சொன்னான்.

Permission to Speak Freely என்ற நூலின் ஆசிரியையான, ஆன் ஜெக்ஸன் தனது வாழ்வியலின் இக்கட்டான நிலைமைகளைத் தாண்டி எவ்வாறு தனது சுதந்திரமான வாழ்வினை உருவாக்கித் தக்க வைத்துக் கொண்டார் என்பதை குறித்த அவரின் புத்தகத்திலேயே இன்னும் பலரினதும் அனுபவங்களோடு அழகாக விபரிப்பார்.

செத் கொடினின் வேண்டுகோளிற்கு ஏற்ப, “இன்று எது முக்கியமானது?” என்ற கேள்விக்கு அவர் பதிலளித்த விடயத்தை பகிர்ந்து கொள்ளலாமென்ற எண்ணம் தோன்றியது — இந்தப் பதிவு உருவாக்கம் பெற்றது.

– உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s