(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 51 செக்கன்கள் தேவைப்படும்.) [?]
அவனுக்கு வயது, எத்தனை என்று வேண்டாம். ஆனால், வண்ணத்துப்பூச்சியைப் பிடித்துவிட வேண்டுமென்ற ஆர்வமும் ஆசையும் நெஞ்செல்லாம் நிறைந்திருந்தது.
போகும் இடமெல்லாம், வண்ணத்துப்பூச்சிகளையே அவன் துரத்திக் கொண்டிருந்தான்.
அவனால், செய்யப்படுகின்ற காரியங்கள் எப்போதும், வண்ணத்துப்பூச்சியை துரத்திக் கொண்டு அதைப்பிடிக்காமல் போய்விடுகின்ற தோல்வியிலேயே முடிந்து போயின.
சிலவேளைகளில், வண்ணத்துப்பூச்சியை பிடிப்பான். அடுத்த கணம் அது அப்படியே அது தப்பித்துப் பறந்து போய்விடும்.
வண்ணத்துப்பூச்சியைத் தேடிக் களைத்துப் போனவன், அதனைத் துரத்துவதை இனி நிறுத்திவிட வேண்டுமென முடிவெடுத்து, தனது ஏனைய காரியங்களில் கண்ணும் கருத்துமாய் கருமமாற்றத் தொடங்கினான்.
வண்ணத்துப்பூச்சியை துரத்திப் பிடித்துக் கொள்ள வேண்டுமென அவனுக்கிருந்த எண்ணத்தை அவன் தொலைத்த நாளிலிருந்து, அவன் ஆர்வமாய் அவனது ஏனைய காரியங்கள் செய்யும் போது, தனது தோளில் வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்து கொள்வதைக் கண்டான்.
வண்ணத்துப்பூச்சியை துரத்துவதை நிறுத்தி, வேறு வேளைகளில் திளைத்திருந்த அவனை, வண்ணத்துப்பூச்சிக்கு பிடித்துப்போனது ஆச்சரியமாகத் தான் அவனுக்கு இருந்திருக்க வேண்டும்.
மகிழ்ச்சிதான் இந்த வண்ணத்துப்பூச்சி. மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென நீங்கள் அதனைத் தேடித் தேடித் துரத்திக் கொண்டிருந்தால், அது உங்களைக் கிட்டிவிடுவதை விட எட்டிக் கொள்ளாத இடத்தை நோக்கி ஏகிவிடுவது நடப்பதை தவிர்க்க முடியாது.
நீங்கள் உங்கள் கருமங்களை விருப்பிச் செய்து, அதில் திளைத்திருந்தால், உங்கள் பக்கம் மகிழ்ச்சி தன்பாட்டிலேயே கவரப்பட்டு, தோள் மீது தங்கிவிட தோழமையோடு வந்து சேரும்.
அண்மையில் வாசித்த ஒரு ஜென் கதைதான் இது. இதனை இப்படி பதிவு செய்யலாம் என்ற ஏற்பாட்டில் தான் இந்தப் பதிவு.
“நீங்கள் வண்ணத்துப்பூச்சியை தேடிப் பிடித்துவிட, அதனை இன்னும் துரத்துகிறீர்களா?” — கோபாலு கேட்கச் சொன்னான்.
– உதய தாரகை
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
வண்ணத்துப்பூச்சியை வைத்து (மாற்றி) அசத்தி விட்டீர்கள்…
நன்றி…
அருமையான கருத்தை மிக மிக
அழகாகச் சொல்லிச் செல்லும் பதிவு
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
அருமையான பதிவு! பலநாள் தெளிவின்றி தேடிய கேள்விக்கு இந்தப் பதிவின் மூலம் விடை கிடைத்தது.
நன்றி.