நீ அறியாத அடுத்த விநாடி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். நீங்கள் நினைத்த அத்தனை விடயங்களையும் உங்களுக்காக அது செவ்வனே செய்து விடுகிறது என்றும் நம்பிக் கொள்வோம்.

அந்தச் சாதனத்தை வாங்குவதும், கையடக்கத் தொலைபேசிகள் போன்று மலிவான நிலையாகவுள்ளது என்றும் எண்ணிக் கொள்வோம்.

இனி என்ன? நீங்கள் நினைத்ததெல்லாம் நடந்துவிடும். வாங்க வேண்டிய பொருளை நினைத்துச் சொன்னால், அது உங்கள் காலடிக்கு வந்துவிடும். எல்லாமே உன்னதமாக நடைபெற்றுவிடுகிறது.

இது நீடிக்குமா? நீங்களே சொல்லுங்கள். உன்னதம் என்று உருவகிக்கப்பட்டது எல்லாமே காலப்போக்கில், உன்னதமில்லாததாய் மாறி, இன்னும் மேம்பட்ட நிலையிலுள்ள நிலைகளைக் கொண்ட விடயங்களைக் காண மனம் ஏங்கி நிற்கும்.

live

என்னதான் நாம் அடுத்த விநாடி பற்றிய நிலைகளைத் தெரிந்திருந்தாலும், அது தரக்கூடிய ஆச்சரியங்கள் தான் வாழ்வை ரசிக்கச் செய்கிறது.

உன்னிடம், உன் நண்பனொருவன் நகைச்சுவை ஒன்றைச் சொல்ல நீ சிரிப்பது ஏன்? அவன் ஈற்றில் சொல்லும் நகைச்சுவை பொருந்திய அந்த ஆச்சரியத்திற்கு தான்.

கலைகள் ரசிக்கப்படுவது ஏன், அது அடுத்த விநாடியில் தரப்போகும் வியப்புக்குத்தான்.

உன் நண்பனின் நகைச்சுவையில் வரப்போகும் ஆச்சரியத்தை ஏற்கனவே தெரிந்திருந்தால், உனக்கு அது நகைச்சுவையில்லை. அது இன்னொரு செய்தி. ஆக, அடுத்த விநாடியின் மறைக்கப்பட்ட ஆச்சரியம்தான் வாழ்விற்கு சுவாரசியம் சேர்க்கிறது.

நீ, உன் நண்பனுக்கு பல நாட்களுக்குப் பின் அனுப்பும் கடிதத்திற்கு உனக்கு அவன் எழுதப்போகும் பதில் கடிதம் என்னவென்று தெரிந்தால், உன்னால் கடிதம் எழுத முடியுமா? அப்படிக் கடிதம் எழுதுவது தேவைதானா? இந்த அடுத்த விநாடியின் அறியாத ஆச்சரியம் ஆயுளின் அழகைக் கூட்டுகிறது.

எல்லாமுமே அப்படியே ஒரே மாதிரியாகவே தொடர்ந்து நடக்கையில் அது மாற்றங் காண வேண்டுமென்ற தேட்டம் மனதிற்குள் குடிகொண்டுவிடும். அப்போது அடுத்த விநாடி, ஆச்சரியத்தால் அதற்கு பதில் சொல்லும்.

“அடுத்த விநாடி ஒழித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்” என்று அன்பே சிவம் திரைப்படத்திலும் ஒரு உரையாடல் தொடரும்.

அடுத்த விநாடியின் ஆச்சரியம் உன்னை ஒவ்வொரு விநாடியும் தாக்கினால் தான் நீ வாழ்கின்றாய் என்று பொருள்.

“நீ வாழ்கிறாயா? அல்லது இங்கு இருக்கிறாயா?” என்று கோபாலு கேட்கச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் ஆறாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s