(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 2 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
சின்னஞ் சிறிய சில தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.
ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் குழுமியிருந்தனர். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். முதலில் தொடுபவர் வெற்றியாளர் — அவ்வளவு தான் போட்டி விதி.
போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் குழுமியிருந்தோரில் பலரும் இது லேசுபட்ட வேலையில்லை. இந்தச் சின்னத் தவளைகளால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்ற தொனியில் வெவ்வேறு வகையாக, தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர்.
“இந்தக் கோபுரம் ரொம்பப் பெரிசு. இதப் போய் இந்தத் தவளைகள் தொடுமா?”
“இது ரொம்பக் கஸ்டமானது. இதப் போய் ட்ரை பண்ணிக்கிட்டு”
“இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சை எட்டவே முடியாது! — சாத்தியமே கெடையாது!”
குழுமியிருந்த கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வெளிப்பட்ட வண்ணமே இருந்தன.
மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கிக் கொள்ள, இன்னும் சிலதோ திடமான நம்பிக்கையோடு அந்தக் கோபுர உச்சியை நோக்கி, ஓடிக் கொண்டிருந்தன.
“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போரதில்ல. அது ரொம்ப கஸ்டமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது. ஈற்றில் கோபுரத்தின் உச்சியைத் தொட்டது. வெற்றியும் பெற்றது.
எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியைத் தொட்டது எல்லோருக்கும் வியப்பைத் தந்தது.
விசாரித்த போதுதான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.
“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள். சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ, செவிடாக இருப்பதே சாலப் பொருத்தமானது,” என கோபாலு சொல்லச் சொன்னான்.
– உதய தாரகை
குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் ஒன்பதாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
Vanakam. miga arumai. vaalthukkal.