ஏந்தாத வரைக்கும் இனிமைதான்!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 36 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கோபாலு கேள்விப்பட்டுச் சொன்ன ஒரு குட்டிக்கதை இன்றைய பதிவாகிறது.

ஒரு பேராசிரியர், குவளையொன்றினுள் நீரை நிரப்பி, மாணவர்களை நோக்கி, “இந்தக் குவளை எத்தனை கிராம் நிறை இருக்கும்?” என வினவினார்.

மாணவர் பக்கமாக, “200 கிராம்கள், 250 கிராம்கள், 300 கிராம்கள்” என பதில்கள் ஒலித்தன.

“ஆனால், உண்மையில் இது என்ன நிறை என்று எனக்கும் சரியாகத் தெரியாது,” என்று கூறிய பேராசியர், “உங்களுக்கான எனது கேள்வி என்னவென்றால், இந்தக் குவளையை நான் சில நிமிடங்களுக்கு இப்படியே ஏந்திக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்?”

“எதுவுமே நடக்காது” என்று ஏகோபித்த பதில் மாணவர்கள் பக்கமாக ஒலித்தது.

life-pro

“அப்படியென்றால், இதை நான் ஒரு சில மணித்தியாலங்கள் இப்படியே ஏந்திக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்?” என்று பேராசியர் கேட்க,

ஒரு மாணவனோ, “உங்கள் கை வலிக்கத் தொடங்கும்” என்று பதில் சொன்னான்.

“நீ சொன்னது முற்றிலும் உண்மையானது” என பேராசியர் அந்த மாணவனின் பதிலை மெச்சி, “இப்படியே நான் இந்தக் குவளையை ஒரு நாள் முழுக்க ஏந்திக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்?” என மாணவர்களை நோக்கிக் கேட்டார் பேராசிரியர்.

இதைக் கேட்ட மாணவன் ஒருவன், “சார், நீங்கள் ஒரு நாள் முழுக்க இப்படியே இந்தக் குவளையை ஏந்திக் கொண்டிருந்தால், உங்கள் கை வலித்து விறைத்துப் போய், பக்கவாதம் தான் வரும். நாங்கள் வைத்தியசாலைக்கு உங்களைக் கூட்டிச் செல்ல வேண்டியிருக்கும்” எனச் சொன்னான்.

இதைக் கேட்ட ஏனைய மாணவர்களோ, சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

“மிக நல்லது. இவ்வளவு நடந்தாலும், இந்தக் குவளையின் நிறையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா?” என்று பேராசிரியர் கேள்விக் கணைகளை தொடுப்பதைத் தொடங்கினார்.

“இல்லை” என்றே பதில் மாணவர்கள் பக்கமிருந்து வந்தது.

“அப்படியானால், கை வலிப்பதற்கும் தசை நொந்து போவதற்கும் எது காரணமாகவிருக்கலாம்?” — பேராசிரியரின் இந்தக் கேள்வி, மாணவர்களை புதிருக்குள் ஆழ்த்தியது.

“இந்த வலியிலிருந்து நான் மீள என்ன செய்ய வேண்டும்?” என்ற பேராசிரியரின் கேள்விக்கு, “குவளையைக் கீழே போட வேண்டும்” என்பது ஒரு மாணவனின் பதிலாகியது.

“அப்படியே தான்” — பேராசிரியர் சொன்னார்.

வாழ்க்கையின் பிரச்சனைகள் என்பதுவும் இப்படித்தான். கொஞ்சம் நேரம் பிரச்சனைகளைப் பற்றி எண்ணிக் கொள்கையில் அது பரவாயில்லை போலிருக்கும். தொடர்ச்சியாக அந்தப் பிரச்சனையைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்க தலை வலிக்கத் தொடங்கும்.

இன்னும் தொடர்ச்சியாக அது பற்றியே எண்ணமாகவிருந்தால், உன்னை எதுவுமே செய்யவிடாது. வாதம் வந்தவன் போன்ற நிலைக்குத் தள்ளிவிடும்.

வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள், சவால்கள் என்பவற்றைப் பற்றி எண்ணுதல் தேவைதான். ஆனால், அவற்றை எந்நேரமும் ஏந்தித் திரிவதால் வலிகள் வந்து உன்னை எதுவுமே செய்ய முடியாமல் பண்ணிவிடும் என்பது உண்மையாகும்.

“இன்றைய நாளைத் தொடங்கும் நீ, உன் பிரச்சனைகள் என்ற குவளையை கீழே போட்டுவிட்டு, சவால்களை சமாளிக்க முன்னே செல்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பத்தாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

Advertisements

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s