அழும் வரை சிரிப்பதன் விஞ்ஞானம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஆவணப்படங்கள் எனப்படுகின்ற documentary films பார்ப்பதன் பாலான எனது பிரியம் அலாதியானது. PBS இனால், ஒளிபரப்பட்ட 5 பாகங்களைக் கொண்ட The Secret Life of the Brain என்ற மூளை பற்றிய ஆவணப்படத்தை கடந்த வருடம் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

அந்த விவரணப்படம் மனித மூளை தொடர்பான பல விடயங்களையும் சொல்லி நின்றது. அதில் கலந்தாலோசிக்கப்பட்ட மூளையின் இயல்புகளுக்குள் அழுகை, சிரிப்பு ஆகிய நிலைகளில் மூளையின் பங்கு பற்றிய விடயங்கள் என்னைக் கவர்ந்து கொண்டன.

அந்த விடயங்கள் பற்றிச் சொல்லலாமென எண்ணினேன். அதுவே இப்பதிவாயிற்று!

brain

மகிழ்ச்சி அடைந்த நிலையில் நாம் சிரிக்கிறோம். வலிகள் வந்து சேருகின்ற போது, நாம் அழுகிறோம். இது உலகறிந்த உண்மை தான்.

ஆனாலும், அழும் வரைக்கும் சிரிக்கின்ற சங்கதிகளும் நடைபெறுகின்றன. ஆக, ஆனந்தத்தில் சிரிப்பது கண்ணீரையும் தோற்றுவித்துவிடுகிறது. இது எப்படி?

பொதுவாகவே, உணர்வுப் பிரவாகத்தின் வருவிளைவாகத்தான் சிரிப்பதையும் அழுவதையும் இனங்கண்டு கொள்ள முடியும்.

மூளையின் குறித்தவொரு பகுதி மட்டுந்தான், சிரிப்பதையும் அழுவதையும் சாத்தியப்படுத்துகின்றது என்பதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. மூளையின் சில பகுதிகள் பாதிப்படைவதால், உருவாகக்கூடிய ஒரு வகையான நோய் நிலைமை, pseudobulbar affect (PBA) என அறியப்படுகிறது. இந்த நோய் நிலைமை உள்ளவரால், தனது அழுகையோ, சிரிப்பையோ கட்டுப்படுத்த முடியாமலிருக்கும்.

இந்த மூளையின் குறித்த பகுதியே, அழுகையின் கண்ணீருக்கும், சிரிப்பின் ஆனந்தத்திற்கும் பொறுப்பாய் இருக்கின்றது என்று PBS இன் விவரணப்படத்தில் சொல்லப்பட்டது.

ஆனாலும், குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதால், அது உடலங்கங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தி அது கண்ணீர்ச் சுரப்பியில் அமுக்கத்தை உண்டுபண்ணுவதால் கூட சிரிக்கின்றவர்களில் அழுகை வந்துவிடுவதாகவும் நம்பப்படுகிறது. இந்தக் கண்ணீரில் எந்த உணர்வின் வெளிப்பாடும் இருக்காது. புறத்தாக்கங்கள் குறிப்பாக, தூசுகள், காற்று போன்றவற்றினாலும் கண்களில் கண்ணீர் வரும். இதுபற்றி, நான் அழுத அந்தத் தருணங்கள் என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன்.

அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், உணர்வுகளின் பகிர்வினால், அதன் பாதிப்பினால் தோன்றும் கண்ணீர், உணர்வுகளின் பாதிப்பாலல்லாமல் தோன்றும் கண்ணீரிலும் இருந்து வேறுபட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணர்வின் பாதிப்பால் தோன்றும் கண்ணீரில் இயற்கையான வலி நிவாரணியான லியூசின் என்கபலின் என்கின்ற ஹார்மோன் காணப்படுவதும் கவனிக்கத்தக்கது.

இலக்கியங்களில் ஆனந்தமும் கவலையும் ஆங்காங்கே தோற்றம் காணும். அந்தப் பொழுதுகளில் வாசகனை தன் புனைவின் பக்கம் ஈர்க்க உணர்வின் அடிப்படையான விடயங்களைச் சொல்லி, உணர்வுகளுக்கு அழுகையோ, ஆனந்தத்தின் மூலமான அழுகையோ எழுத்தாளர்கள் வழங்குவது வழக்கம் தான்.

இந்த வழமை, இலக்கியங்கள் தாண்டி அனைத்துக் கலைகளிலும் இடம்பெறுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இத்தனையும் மூளையின் அற்புதமான செயற்பாட்டின் வினையால்தான் சாத்தியமாகிறது.

“மூளை என்பது உங்கள் உடலின் உயரிய சொத்து, மின்னல் வேகத்திலியங்கும் கணினிகளைக் கண்டுபிடித்ததும் மனித மூளைதான். உங்களிடம் அகத்தே ஓர் அற்புதமான கருவி காணப்படுகிறது என்பதை மட்டும் மறக்க வேண்டாம்” — கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பன்னிரண்டாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s