டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்

சிலவேளைகளில் நமது உணர்வுகளுக்கு அதிசக்தி கொண்ட அனுபவங்களை சின்னச் சின்ன விடயங்கள் தந்துவிடுவது அழகு. இன்று வலைப்பதிவுகள் பலதையும் வாசித்துக் கொண்டிருந்த போது, பல விடயங்கள் என் உணர்வுகளில் அதிர்வுகளைக் கொண்டு வந்தன.

உணர்வுகளில் ஏற்படும் அதிர்வுகள், சில நேரங்களில் மகிழ்ச்சியாக, அழுகையாக, சுமையாக, சிரிப்பாக என பல பரிமாணங்களை எடுப்பது யாவரும் ரசிக்க வேண்டிய கலை. துன்பங்கள் பற்றி யாரும் சொல்லும் போது, அந்த நிலைகளுக்குள் என்னை நுழைத்து அழுது கொண்ட நாட்கள் எனக்கு நிறையவே ஞாபகத்தில் உண்டு.

தொடர்ந்து படிக்க…

அது என்ன, குறும்படம்?

அப்போது எனக்கு நான்கு வயதாக இருக்க வேண்டும். பாடசாலைக்கு எனது அக்காவுடன் சென்று அக்காவின் வகுப்பில், ஓரமாக உட்கார்ந்து கொண்டிருப்பது தான் பழக்கம். ஐந்து வயதில் தான் பாலர் வகுப்பில் சேர்ப்பார்கள் என்பது உங்களுக்கும் தெரியும் தானே?

அக்காவின் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்கள் எல்லோரும் “யாரிந்தப் பையன்?” என்று கேட்டு விட்டுத் தான் பாடங்களைத் தொடங்கினார்கள். அந்த வகுப்பில் அவர்கள் என்ன படிப்பித்தார்கள் என்றெல்லாம் சத்தியமாக எனக்குத் தெரியாது.

அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த தமிழ் எழுத்துக்களே கொஞ்சம் தான். ஆங்கில எழுத்துக்கள் சிலவும் என் மனதில் மனனமாகியிருந்தது போனஸ். (இங்கிலீசும் எங்களுக்கு தெரியுமில்ல என்டு சொல்றானே!! அத விட்டுட்டு, மனனம், போனஸ் என்றெல்லாம் கதையளக்கிறது உங்களுக்கே ஓவரா படலயா, உதய தாரகை?)

தொடர்ந்து படிக்க…

வளராத மூங்கிலும் நானும்

cosmic1
அதுவொரு வெள்ளிக்கிழமை ஆனந்தமான மாலை நேரம். பகல் சாப்பாட்டை அருந்திய பின்னர், குடும்பத்தினர் எல்லோரும் குதூகலித்து அளவளாவிக் கொண்டிருந்த பொழுது. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு வயது எட்டு ஆகும். (ஆமா.. உதய தாரகை தொடங்கிட்டாரு பழைய புராணங்களைச் சொல்றதுக்கு..!!)அந்தத் தினத்தில் எனது உறவினர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.

தனது பிள்ளை கதைக்கப்பழகிவிட்டால் அம்மழலை மொழியை மற்றவர்களிடம் சொல்லிக் காட்டி ஆனந்தம் அடையாத பெற்றோர்கள் இந்த அவனியிலேயே (அதுதான் பூமி என்பதற்கு ஒத்த கருத்துச் சொல்.. இது எங்களுக்கும் தெரியுமில்ல…) இருக்கமாட்டார்கள். அப்படித்தான் நானும் அப்போது, சின்னச் சின்னச் பாடல்களை எல்லாம் படிப்பேன். (அட நீங்க வேற.. பாடல் என்றால், ‘நிலா நிலா ஓடி வா.. நில்லாமல் ஓடி வா.. மலை மேலே ஏறி வா.. மல்லிகைப் பூ கொண்டு வா… இது தாங்க…)

தொடர்ந்து படிக்க…

உப்பு மூட்டை சுமப்பேன்..

இளமைக் காலங்களில் தந்தையிடம் உப்பு மூட்டை மாதிரி என்னைத் தூக்கிச் செல்லுமாறு அன்புக் கட்டளையிட்ட ஞாபகம் எனக்கு இன்னுமிருக்கிறது. ஒவ்வொருவரினதும் வாழ்க்கையில் இளமைக் காலம் என்பது மிகவும் சுவாரஸ்யமானது. இனிமையானது.

இளமைக் கால நினைவுகளை மீட்டிப் பார்க்கும் போது, சிலவேளை எம்மையறியாமலேயே எமக்கு சிரிப்பு வரும். ஏன் வெட்கமும் வரும். ஆனால், அத்தனை ஞாபகங்களும் விலைமதிப்பற்றவைதாம்.

ஆனால், இந்தப் பதிவு இளமைக்கால ஞாபகங்களைச் சொல்வதற்காக அல்ல. எனக்குப் பிடித்த திரையிசைப் பாடல் ஒன்றின் காட்சியமைப்பு, பாடல் வரிகள், இசை என அனைத்தையும் ஒரு வீடியோவின் மூலம் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

உப்பு மூட்டை சுமப்பேன் என்று ஏன் நான் தலைப்பிட்டேன் என நீங்கள் இந்த வீடியோவைப் பார்த்ததும் புரிந்து கொள்வீர்கள்.

– உதய தாரகை

இருள் விலகட்டும் என்று பாடிய நாள்

அண்மையில் எனது புத்தக அலுமாரியில் (Book Shelf) நூலொன்றை தேடிய போது, எனது பழைய கால நினைவுகளை மீட்டிக் கொள்ளக்கூடிய வகையில் பல விடயங்கள் கண்களில் பட்டன. அவை நெஞ்சத்தைத் தொட்டன.

அந்த நினைவுகளை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். அவை இப்பதிவாயிற்று. சிறு பராயம், கடந்த காலம் என்பன சுவையான நினைவுகளைக் கொண்டது என்பதில் இரு வேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.

தொடர்ந்து படிக்க…

எங்கள் ஊர் பொத்துவில்

காரிருள் பிரியு முன்னே
கழனியை நாடித் தூய
ஏரிலே நெஞ்சைப் பூட்டி
இன்புறும் துணைவரோடு,
சீரிலே வாழும் மாதர்
சென்றுமே பணிகள் செய்து
பார்புகழ் கொழிக்க வாழும்
பண்பினர் வாழும் நாடு!

கொட்டிடும் மழை காலத்தும்
கோப்பையைக் கையிலேந்தி,
கட்டெழில் கயலின் கண்ணார்
கன்றினை அவிழ்த்துச் சென்று
இட்டமாயப் பால் கறந்து
இதமுறப் பதமுமேற்றி
பட்டினப் பகுதிக் கெல்லாம்
பால் கொடுப்போர் வாழ் நாடு!

ஏடுகள் கண்டி ராத
இன்கவி பிறக்கும் பூமி
கூடவே மூவினத்தோர்
கொள்கைகள் வாழும் பூமி,
தேடரும் வாவி மூன்றைத்
தன்னகம் கொண்ட தாலே
பாடகர் பாவில் போற்றும்
பொத்துவில் எங்கள் ஊரே!

1968.10.14ஆம் திகதி தினபதி பத்திரிகையில் வெளியான கவிஞர் கவிவாணனின் கவிதை.

காற்றின் கவலை

அவதரிப்பு முதல் தொட்டு
அன்பால் அரவணைக்கும்
என்னை…
கண்டு கொள்ளாமலே
கொல்ல நினைக்கிறீர்!!
நீர் நாட்டில்
நலமாய் சிறக்க
பிராண வாயு தந்து
பிரயாணிக்கச் செய்ததை
மறந்தீரோ…!!
கரியமில வாயு கொண்டு
கழுத்தறுக்கிறீர்..!
இதனை கண்டுணர்ந்து
யாரும் கதையளந்தால்
உடன் மறுக்கிறீர்..!
என்னை மாசாக்கின்
உன்னை தூசாக்க
எத்தனையோ உண்டு கேளீர்!
சூறாவளியென்ன?
சார்சும் அதிலொரு வகையே!
ஆனாலும், மனிதர்கள்
நன்றி மறப்பதொன்றும்
புதிதில்லை என்பதனால்
இன்னும் பூமியிலே உள்ளுர
புழுங்கித் தவிக்கின்றேன்..!!

2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் பிரசுரமான என் “கவிதை”…

புரிவதில்லை…

அலைபாயும் வேளையில்
கரை ஒதுங்கும் சருகுகள்…
இடர்காணும் நேரமதில்
அகன்றோடும் சொந்தங்கள்!!
காந்தம் கண்டு கவரப்படும் இரும்பு…
காசு வந்தால்
ஒட்டிக் கொள்ளும் உறவு!!
கதிரவன் வழியில்
கண்சிமிட்டும் சூரியகாந்தி…
நன்மை கூடுமிடும்
வேஷமிடும் உணர்வுகள்!!
இன்னும் ஏராளம்!!
வினோதமான நாடகங்கள்
இப்பூமியிலே…
மனித உணர்வுகளின்
வஞ்சத்தை எண்ண,
நெஞ்சத்தை தாக்கிறது
ஒரு புயல்..!!
இன்னும் புரியவில்லை!!
இந்நாடகங்கள் “மனிதனுக்கு”
எதற்கென்று…

2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 05 ஆம் திகதி தினகரன் பத்திரிகையில் பிரசுரமான என் “கவிதை”..