கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 59 செக்கன்களும் தேவைப்படும்.)

ஏப்ரல் முதலாம் திகதி, முட்டாள்கள் தினமாக யாரும் அறிவர். கூகிள் தனது பங்கிற்கு முட்டாள் தினத்தில் பல சுவாரஸ்யமான விடயங்களை தன் பங்கிற்கு செய்து மக்களின் கவனத்தை உலகளவில் ஈர்த்துக் கொள்ள 2000 ஆம் ஆண்டிலிருந்து மறப்பதேயில்லை. இன்று ஏப்ரல் முதலாம் திகதி, கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

ஒவ்வொரு வருடமும் முட்டாள் தின பல நகைச்சுவைகளை உருவாக்குவதில் கூகிளுக்கு நிகர் கூகிள் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, இந்த நகைச்சுவைகளை உருவாக்குவதில் வெறுமனே Google.com இணையத்தளம் பங்கு கொள்ளாது, பிராந்தியங்களுக்குப் பொறுப்பான Google.co.uk, Google.com.au போன்ற பல நாடுகளுக்குப் பொறுப்பான தளங்களும் தன் பங்கிற்கு மிகச் சுவாரஸ்யமான விடயங்களை வழங்க தயாராகியிருக்கும்.

தொடர்ந்து படிக்க..

மெய்யென நம்பியுள்ள பொய்கள்

நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளின் வகைகளும், நிலைகளும் ஒவ்வொருக்கு ஒருவர் வேறுபடும். நம்பிக்கை – சூழல் காரணிகளால் வலுப்படுத்தப்படலாம் அல்லது, வழு என பலரும் அதனை விட்டு நீங்கலாம். ஆனால், நம்பிக்கை – பிழையைக்கூட சரியென எண்ண வைத்துவிடும் வலிமை கொண்டது!

நம்பிக்கைகள் என்றுமே மெய்யானதாக இருந்ததுமில்லை. அதுபோலவே, என்றுமே பொய்யானதாகவும் இருந்ததில்லை. நம்பிக்கை, மெய்யுடன் கலக்கும் போது, தரம் கொள்கிறது.

தொடர்ந்து படிக்க…

Google Wave இல் அலையடித்த அனுபவங்கள்

கடந்த மாதம் இறுதி நாளின் காலை நேரம் எங்கும் அமைதியாகவே விடிந்தது. விடிந்தது என்றே நம்புகிறேன். ஆனால், இணையவெளி எல்லாமே ஒரே ஆரவாரம், கும்மாளம், ஆரவாரிப்பு, ஆவல், காத்திருப்பு என எல்லாமே பரந்து விரிந்து கிடந்தன.

காரணங்கள் எதுவுமே இல்லாமல், எந்த விடயங்களும் நடப்பதில்லை. அப்படித்தான் அன்றைய பொழுதின் இணைய ஆரவாரங்களுக்கும் காரணமிருந்தது. Google Wave என்ற கூகிளின் மிகப்புதிய தொடர்பாடல் கருவி (Communication Tool) தனது பயணத்தை உலக மக்களோடு சேர்ந்து தொடங்கிய நாள்.

தொடர்ந்து படிக்க…

கூகிளுக்குள் அகிம்ஷைப் போராட்டம்

பூலோகம் தோன்றிய காலந்தொட்டு பல ஆளுமைகள் உதித்து மனிதர்களின் வாழ்தலின் அர்த்தங்களைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். பலரும் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்தச் சக்கரம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படம் 8 ஒஸ்கார் விருதுகளை வாங்கிச் சென்றது. றிச்சட் அட்டன்புரோ இயக்கிய திரைப்படமது. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்லியது தான் அந்தப் படம்.  ஆனால், வாழ்க்கை இப்படித்தான் வாழப்பட வேண்டுமென்பதையும் சொல்லி நின்றது.

தொடர்ந்து படிக்க…

புதியதொரு ஆரம்பம்…

கணினி தொடர்பான, இணையம் தொடர்பான விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு இணைய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.

அதன் முகவரி…

http://itgeek.wordpress.com

சென்று பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

சிறிய முயற்சி மட்டும்தான். தொடர்ந்து வலைப்பதிவை Update செய்ய ஆவலாயுள்ளேன்…

– உதய தாரகை

கோழியா? முட்டையா?

“கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா? சொல்லு.. கொக்கர.. கொக்கோ..” எனவொரு திரைப்படப்பாடல் கூட இருக்கிறது. அந்தளவிற்கு இந்தக் கேள்வி மிகவும் பெரியதொரு புதிராக ஆண்டாண்டு காலமாக கேட்கப்பட்டது.

இப்புதிருக்கு விடை கண்டுபிடித்து விட்டதாக மரபணுக்களைப் (DNA) பற்றி ஆராயும் பேராசிரியர் அறிக்கை விட்டுள்ளார்.

egg-chicken.jpg

இன்று காலை பறவைக் காய்ச்சல் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள கூகிள் பண்ணிய போது (தேடிய போது), இந்தப் புதிருக்கான விடையை கண்டறியப்பட்டதாகச் சொல்லும் செய்தியை உடைய இணையத்தளமும் கிடைக்கப்பெற்றது.

கடந்த வருடம் மே மாதம் 26ஆம் திகதி இச்செய்தி வெளியாகியுள்ளது.

முதலில் கோழியா வந்தது? முட்டையா வந்தது? என்ற புதிருக்கான விடையைச் சொல்லவேயில்லையே என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. முதலி்ல் முட்டைதானாம் வந்தது. இது நான் சொல்லவில்லை. குறித்த விடயங்களைப் பற்றி ஆராயும் பேராசிரியர் சொல்கின்றார். இவ்வாறு சொல்வதற்கு ஆதாரங்களையும் அவர் குறிப்பிடுகின்றார். அவை பற்றி விரிவாக இங்கே சென்று அறிந்து கொள்ளுங்கள்.

சரி… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கோழியா…? முட்டையா? முதலில் வந்தது.. மறுமொழியாகக்கூடச் சொல்லலாமே!

-உதய தாரகை

அதிசய கூகிள் தொடர் – 02

முந்திய எனது பதிவாகிய அதிசய கூகிள் தொடர் இலக்கம் 01 இல் குறிப்பிட்டது போன்று கூகிள் தனது நிறுவனத்திற்கு ஆளுமைகளை எவ்வாறு சேர்த்துக் கொள்கின்றதென இந்தப் பதிவில் ஆராய்வோம். கூகிளின் மொத்த நடவடிக்கைகளிலும் புதுமை, விவேகம் என்பன காணப்படுவது தனது நிறுவனத்திற்கு மனித வளங்களைச் சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையிலும் காணப்படாமலில்லை.

கீழுள்ள நிழற்படத்தினைப் பற்றி அறிவீர்களா? சற்று சிந்தியுங்கள்…

billboard_large.jpg

குறித்த நிழற்படத்தில் உள்ள விளம்பரப் பலகையில் காணப்படும் ஆங்கில எழுத்துக்கள் வருமாறு:

{first 10-digit prime found in consecutive digits of e}.com

இது கூகிள் நிறுவனத்திற்கு விவேகமான, திறமை வாய்ந்த கணினி பொறியியலாளர்களைச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, கலிபோர்னியாவின் வீதியொன்றின் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையாகும். இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது…???

ஆராய்ச்சிக்கான கேள்வி. இந்த விளம்பரப் பலகையானது, கணிதப்புதிர் ஒன்றினையே ஆங்கிலத்தில் கொண்டுள்ளது. இங்கு e என்பதனால் சொல்லப்படுவது இயற்கை மடக்கையின் அடி எண்ணொன்றாகும். இந்த மடக்கை எண்ணின் பெறுமானம் 2.71828 ஆக அமையும். இந்த எழுத்தின் கணித நிலையை துல்லியமாக அறிந்திட இங்கே செல்லுங்கள். ஆக, இந்தப் புதிருக்கு மிகச் சரியான விடையைக் கண்டுபிடித்து அந்த இலக்கங்களை இணைய உலாவியில் இணைய முகவரியாக டைப் செய்ய, அது இந்தப் புதிரினை விடச் சங்கீரணமான கணிதப் புதிரினைக் கொண்ட இணையத் தளத்திற்கு அழைத்துச் செல்லுமாம். அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகச் சரியான விடைகளை வழங்குபவர் கூகிள் எனும் புதுமைகளை செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேரலாம். புதுமையான சிந்தனை.

அது சரி மேலுள்ள கணிதப் புதிருக்கு நீங்கள் விடையைக் கண்டுபிடித்து விட்டீர்களா? முயற்சி செய்யலாமே.. உங்களால் முடியாவிட்டாலும் இணையத்தில் தேடியாவது விடையைப் பெறலாமே…!

உலகத்திலுள்ள பலரும் இப்புதிரினை விடுவிக்க நிறைய பிரயர்த்தனங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பதனை இந்த தளத்திற்கு செல்வதன் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

கூகிள் தனது நிறுவனத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதில் காட்டும் புதுமை அந்த நிறுவனத்தின் அத்தனை வருவிளைவுகள், நடவடிக்கைகள் என்பனவற்றிலும் காணப்படுகின்றன என்பதனை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

அடுத்த தொடரில் கூகிள் நிறுவனத்திற்குள்ளே எவ்வாறு அதன் ஊழியர்கள் வேலைகளைச் செய்கின்றார்கள் என்பதனைப் பற்றி ஆராய்வோம்..

தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களையும் மறுமொழியாக இடுங்கள்..

-உதய தாரகை

அதிசய கூகிள் தொடர் – 01

கூகிள் (Google) – ஓர் அறிமுகம்

இணைய உலகிலே, இன்றைய காலகட்டத்தில் கூகிள் என்ற சொல்லைப் பயன்படுத்தாது எந்த விடயம் சார்பாகவும்; கதைக்க முடியாதளவுக்கு கூகிள் மிக வேகமாக மக்களை ஆட்கொண்டுவிட்டது என்றே சொல்லவேண்டியுள்ளது.

அண்மையில் கூகிள் என்ற பெயர்ச்சொல் முக்கியமான ஆங்கில அகராதிகளில் தேடல் என்னும் வினைச்சொல்லின் ஒத்தகருத்துச்சொல்லாக (google) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவ்வாறு தேடல் எனும் வினைச்சொல்லிற்கு பதிலாக பல வேற்று மொழிகளிலும் கூகிள் என்ற சொல்லை சேர்த்து பயன்னடுத்துவதாக விக்கிபீடியா சொல்கிறது! தமிழில் தேடுவதை கூகிள் பண்ணு! என்று குறிப்பிடலாமெனவும் விக்கிபீடியா தரவுப்பக்கத்தில் குறிப்பிடப்படுகின்றது.

இத்தனை விடயங்களை கொண்டுள்ள கூகிள் எவ்வாறு தோற்றம் பெற்றது என முதலில் அறிந்து கொள்வோம்.

1995 இல், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University)சந்தித்த நண்பர்களான லெரி பேஜ் (Larry Page) மற்றும் சேர்ஜே பிரின் (Sergey Brin) ஆகிய இருவரும், குறித்த பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான சேவையகத்தில் (Server) நிறுவப்பட்டு இயங்கும் தேடற்பொறியான BackRub இனை, உருவாக்கினர். பின்னர், இத்தேடற்பொறிக்கு பல புதிய நுட்பங்களைப் புகுத்தி, புதிய தொழில்நுட்ப உத்திகளடங்கிய தேடற்பொறியை உருவாக்கி, அதற்கு Patent License ஐயும் பெற்றனர். இந்தத் தேடற்பொறி மூலம் பல இலட்சக்கணக்கான இணையத்தளங்களில் தேடல் மேற்கொள்ள முடியுமென்பதனால், ஒன்று எனும் இலக்கத்திற்கு பின்னால் நூறு பூச்சியங்களை சேர்ப்பதன் மூலம் தோன்றும் எண் பெறுமானத்திற்கு ஆங்கிலத்தில் பாவிக்கப்படும் ‘Googol’ எனும் பெயரை இந்தத் தேடற்பொறிக்குச் சூட்டத் தீர்மானித்தனர். ஆனால், பிழையாக எழுத்துக்கூட்டப்பட்டதால், Google எனும் பெயர் இந்த தேடற்பொறிக்கு வந்தது.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் Google ஸ்தாபனம் நிறுவப்பட்டு, அதன் Google எனும் Search Engine உம் இணையப் பயனர்களுக்கு விருந்தாக வந்து சேர்ந்தது. இன்றைய நிலையில் கூகிள் இணையத்தின் எல்லா நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது வெள்ளிடை மலை.

இவ்வாறான கூகிள் எனும் பாரிய இணையச் சேவை வழங்கும் நிறுவனம், தமது நிறுவனத்தில் வேலை செய்வதற்காக பொருத்தமான ஆளுமைகளை தெரிவு செய்யும் முறை வித்தியாசமானது அத்தோடு சுவாரஸ்யமானது.!! இதுபற்றி அதிசய கூகிள் தொடர் 02 இல் பார்ப்போம்… உங்கள் கருத்துக்களையும் அனுப்பி வையுங்கள்..