ஜெஸ்ஸியும் மக்னீஸியமும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 3 நிமிடங்களும் 11 செக்கன்களும் தேவைப்படும்.)

திரைப்படங்கள் எல்லாமே ஒவ்வொருவரிலும் அதிர்வுகளை எந்நேரமும் ஏற்படுத்துவது கிடையாது. சொல்ல வந்த விடயம், சொல்லிய விதம், அதை பார்ப்பவர்கள் விளங்கிக் கொண்ட விதம் என எல்லாமே திரைப்பட ஊடகத்தின் உயிர்நாடிகள் தாம்.

திரையில் கண்ட விடயத்தை ஒருவர் புரிந்து ரசிக்கும் விதம், மற்றவர்களாலும் அவ்வாறே ரசிக்கப்பட வேண்டுமென்கின்ற எந்த விதிமுறைகளும் கிடையாது. ஆனால், சிலவேளைகளில் பார்வையாளனை ஒரே உணர்வுகளுக்குள் கட்டிப் போடும் திரைக்காவியங்களும் தோன்றாமலில்லை.

தொடர்ந்து படிக்க…

ஒரு நாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்

மொழிகளின் அழகென்பது, வெறும் வார்த்தைகளின் ஒப்புதல்களால் சாத்தியமாக்கப்படுவதில்லை. அவை தகுந்த வடிவத்தில் மொழியில் வெளிப்படுத்தப்படும் போது, அழகு பெறுகின்றது. அர்த்தம் பெறுகின்றது. தனிநபரின் எண்ணங்களை ஒரு கூட்டத்திற்கு சொல்கின்ற போது, தனிநபரின் ஆளுமையின் தேவையோடு, மொழியின் பிரயோகமும் முக்கியத்துவம் பெறுகிறது.

பார்வையாளர்களின் கரகோசத்தைப் பெற்றுவிடுவதென்பது, யாராலும் இலகுவில் அடைந்து கொள்ள முடிவதில்லை. மாணவர் குழாமொன்றை தனது பேச்சினால், கட்டிப் போட்ட ஆளுமை ஸ்டீவ் ஜோப்ஸ் பற்றியும் அவர் பேச்சு பற்றியும் நிறத்தில், பசித்திரு. முட்டாளாயிரு என்ற பதிவின் மூலம் சொல்லியிருக்கிறேன்.

தொடர்ந்து படிக்க…

ஐந்து பேரும் ஒளவையாரும்

திட்டமிட்டுச் செய்யும் செயற்பாடுகள் யாவும் திட்டமிடப்பட்டது போலவே நடந்தேறுவது அரிதான விடயம் தான். திட்டமிடப்படாமலே வாழ்க்கைக்குச் சேரும் சம்பவங்கள், அனுபவங்கள் எல்லாம் விட்டுச் செல்லும் தடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை யாவும் ரசிக்கப்பட வேண்டியவை. பலவேளைகளில் அவையே வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கின்றன.

“நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏதுமில்லை” என்ற பாடல் வரி கூட, திட்டமிடலில் ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத நிலையைச் சொல்லி நிற்கிறது.

தொடர்ந்து படிக்க…

அழியும் உலகமும் அழியாத ஆசைகளும்

அற்புதமாக வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று சொல்லித்தரும் ‘வர்த்தகர்களை’ நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வாழ்க்கை அந்தளவுக்கு சொல்லிக் கொடுத்துப் புரியக்கூடிய விடயமா? அப்படியானால், வாழும் முறைகளைச் சொல்லிக் கொடுத்துவிட்டால் அனைவருக்கும் அற்புதமான வாழ்க்கைதான் கிடைத்து விடுமா? கேள்விகள் பல எனக்குள் நேற்று எழுந்தது.

வாழ்க்கையை அற்புதமாக பலரும் காண்பது அவர்களின் சமூக கலாசாரச் சூழலுக்கமைய வேறுபடும். வெறும் கோதுமைக் களியை மட்டும் ஆகாரமாகக் கொண்டு, உலகின் மொத்த சந்தோசத்தையும் தன் மனம், மனை என எல்லாவற்றிலும் கொண்டிருக்கும் மனிதர்களை நான் கண்டிருக்கிறேன்.

தொடர்ந்து படிக்க…

கூகிளுக்குள் அகிம்ஷைப் போராட்டம்

பூலோகம் தோன்றிய காலந்தொட்டு பல ஆளுமைகள் உதித்து மனிதர்களின் வாழ்தலின் அர்த்தங்களைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். பலரும் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்தச் சக்கரம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படம் 8 ஒஸ்கார் விருதுகளை வாங்கிச் சென்றது. றிச்சட் அட்டன்புரோ இயக்கிய திரைப்படமது. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்லியது தான் அந்தப் படம்.  ஆனால், வாழ்க்கை இப்படித்தான் வாழப்பட வேண்டுமென்பதையும் சொல்லி நின்றது.

தொடர்ந்து படிக்க…

அது என்ன, குறும்படம்?

அப்போது எனக்கு நான்கு வயதாக இருக்க வேண்டும். பாடசாலைக்கு எனது அக்காவுடன் சென்று அக்காவின் வகுப்பில், ஓரமாக உட்கார்ந்து கொண்டிருப்பது தான் பழக்கம். ஐந்து வயதில் தான் பாலர் வகுப்பில் சேர்ப்பார்கள் என்பது உங்களுக்கும் தெரியும் தானே?

அக்காவின் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்கள் எல்லோரும் “யாரிந்தப் பையன்?” என்று கேட்டு விட்டுத் தான் பாடங்களைத் தொடங்கினார்கள். அந்த வகுப்பில் அவர்கள் என்ன படிப்பித்தார்கள் என்றெல்லாம் சத்தியமாக எனக்குத் தெரியாது.

அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த தமிழ் எழுத்துக்களே கொஞ்சம் தான். ஆங்கில எழுத்துக்கள் சிலவும் என் மனதில் மனனமாகியிருந்தது போனஸ். (இங்கிலீசும் எங்களுக்கு தெரியுமில்ல என்டு சொல்றானே!! அத விட்டுட்டு, மனனம், போனஸ் என்றெல்லாம் கதையளக்கிறது உங்களுக்கே ஓவரா படலயா, உதய தாரகை?)

தொடர்ந்து படிக்க…

ஆமாங்க.. மொழிபெயர்ப்புக் கொண்டாட்டம்!!

திரைப்படங்கள் ஏற்படுத்தும் உணர்வுகளின் வெளிப்பாடு, சிலவேளைகளில் மிக வலிமையானதாக இருந்து விடுவதுண்டு. வலிமை என அவை உருவாவதற்கு அது சொல்லும் வலிகள் தான் காரணமாக அமைந்து விடுவது அழகு.

ஆனாலும், திரைப்படங்களின் உணர்வுபூர்வமான கட்டங்கள், நடிப்பு என்பனவற்றைப் பற்றி கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. அவை ரசிக்கப்பட வேண்டியவை என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.

மொழிகள் தான் நமக்கு பல வேளைகளில் உணர்வுகளை புரிந்து கொள்ள அச்சாணியாக அமைந்து கொள்கிறது. மெளனமும் ஒரு மொழி என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தொடர்ந்து படிக்க…

காளான் சோறு, உப்புமா மற்றும் என்ன நான் செய்வதோ?

வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை நாம் பட்டியலிடப் போனால், அதற்கு முடிவேதும் இருக்கவே முடியாது. அனுபவங்களின் முடிவில் கிடைக்கும் இன்பமோ துன்பமோ எப்போதும் அது இறந்த காலமாய் இருக்கும் நிலையில், பசுமையான நினைவுகளை வழங்கி நிற்கும்.

பொதுமைப்பாடான விடயங்கள் நடந்தேறும் பொழுதும் நாம் கொள்ளும் அழகிய நினைவு ஆனந்தமானது. வாழ்வின் ஒவ்வொரு கணமும் இரசிக்கப்பட வேண்டியதே!

தொடர்ந்து வாசிக்க…