முத்தங்களும் மூன்று வருடங்களும்

வாழ்க்கையில் நாம் பல விடயங்களைச் செய்ய வேண்டுமென ஆசைப்படுவதும் அவற்றில் சிலவற்றை அதீத ஆர்வத்துடன் செய்வதும் அதனாலே பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதும் ஒரு சக்கரம் போலவே சுழன்று கொண்டேயிருக்கிறது.

ஆரம்பிப்பதுதான் கஷ்டமானது. ஆரம்பித்துவிட்டால் எல்லாமே சுபமாக அமையும். அல்லது சுபமாக அமைய வேண்டியதற்கான வழிகள் பிறக்குமென பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். போனஸாக பல நூல்களிலும் இந்த எண்ணத்தை வாசித்திருக்கிறேன்.

நிறம் என்ற எனது இந்த வலைப்பதிவை நான் தொடங்கி அதில் முதல் பதிவிட்ட நாளும் இன்று போல ஒரு நாளாகவே இருந்திருக்கிறது. அது மூன்று வருடங்களுக்கு முன்னாகவும் வந்திருக்கிறது. (என்ன உதய தாரகை.. நிறம் வலைப்பதிவு ஆரம்பித்து இன்றோடு மூன்று வருடம் பூர்த்தியாகிறது என்று சொல்லலாமே! – அதை விட்டுட்டு சும்மா சுத்தி வளைச்சிகிட்டு…)

தொடர்ந்து வாசிக்க…

இரண்டு வருடங்களும் பத்து நாட்களும்

ஏதோ புதிர் கணக்கொன்றுக்கு விடை சொல்லுமாப் போல், நான் தலைப்பொன்றை எழுதியுள்ளேனே என்றல்லவா நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு புதிரும் இல்லைங்க.. கடந்த 18 ஆம் திகதி ஒரு பதிவை நான் நிறத்தில் இட்டிருக்க வேண்டும். சில பல வேலைப்பளுக்களால் அது முடியாமல் போனது. இன்றுதான் அதற்கு நேரமான அவகாசம் கிடைத்தது.

அப்படி என்னதான் ஒரு திகதியில முக்கியமா பதிவு போட வேண்டிக்கிடக்கு என்று நீங்கள் கேட்டிறக்கூடாது என்று நினைப்பதால், என்ன விடயம் என்பதையும் சொல்லியே விடுகிறேன். நிறம் வலைப்பதிவு ஆரம்பித்து இன்றோடு, இரண்டு வருடங்களும் பத்து நாட்களும் ஆகின்றன. மூன்றாவது வருடத்தில் நிறம் வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைக்கிறது என வைத்துக் கொள்வோம்.

தொடர்ந்து படிக்க…

இரண்டாவது ஆண்டில் உங்கள் நிறம்

வணங்கத் தலையும் வழங்க மொழியும் தந்த வல்லோனைப் போற்றுகின்றேன். இது நான் பாடசாலை நாட்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது, சபையை விளிக்கப் பயன்படுத்திய வரிகள் தாம். இப்பதிவிற்கும் இவ்வசனமே முதல் வசனமான அமைதல் பொருத்தமானதாக இருக்கும் என நம்பினேன். அது இப்பதிவின் முதல் வசனமாயிற்று.

கடந்த வாரம் பூராக நிறம் வலைப்பதிவில் “என்னவென்று சொல்வது?” என்ற தலைப்புடன் இத்தனை நாட்களில் சொல்கிறேன் என சிறிய அறிவிப்பொன்றை நீங்கள் கண்டிருக்கக்கூடும். அந்த அறிவிப்பில் மறைந்திருந்த விடயத்தை இப்பதிவின் தலைப்பைக் கண்டவுடனே நீங்கள் புரிந்திருப்பீர்கள்.

கட்டுரையின் தொடர்ச்சியை வாசிக்க…