நீயொரு மக்கு!!

“நீயொரு மக்கு!!” என்ற சொற்றொடரை சில வேளை நீங்கள் இன்னொருவரை நோக்கி உபயோகித்திருக்கக்கூடும். கூடவே உங்களைப் பார்த்தும் சிலர் “நீயொரு மக்கு!!” என்று சொல்லிய அனுபவங்களும் உங்களிடம் இருக்கக்கூடும். ஏன் நாம் மற்றவரை அல்லது மற்றவர் நம்மை மக்கு என சொல்ல வேண்டும் என நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

என்ன இது??? வில்லங்கத்தனமான கேள்விகளெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கிறீங்க என்று நினைக்க வேண்டாம். நாம் ஒரு விடயத்தை அறியக் கூடிய நிலையில் இருந்தும் அதை புரியாமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது அவ்விடயத்தைப் புரிந்தவர் நம்மை “மக்கு” என்று சொல்வது தான் வழக்கம். இதிலிருந்து நாம் ஒன்றை முடிவெடுக்கலாம் அதாவது எமக்கும் புரியக்கூடிய ஆற்றல் இருக்கின்ற போதும் அதை நாம் முறையாக புடம் போட்டு எடுக்கவில்லை என்பதாகும்.

தொடர்ந்து படிக்க…

மண்மலை எனும் அதிசயம்

இனிய இயற்கை காட்சிகள் நிறையவே நிறைந்த எங்கள் ஊரின் அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இயற்கையாய் அமைந்ததே “மண்மலை” என்றால் மிகையில்லை. இதனை ஊரின் கிழக்கே அமைந்துள்ள கடற்கரையை அண்டிய பகுதியில் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கக் காணலாம். “ஆமரபுட்டி” மற்றும் “Sandhill” எனும் பெயர் கொண்டும் இந்த இயற்கையாக உருவான பிரமாண்டம் அழைக்கப்படுகிறது.

மண் ஒன்று சேர்ந்து மலையாக உருவெடுத்துள்ளது, ஓர் ஆச்சரியமான விடயம்தான். இதன் உயரம் 32 அடியையும் விஞ்சி நிற்பதை அங்கு செல்லும் எவரும் உணர்ந்து கொள்வர். இதன் உச்சியில் நின்று திக்கெல்லாம் நோக்கும் போது, அலை பாயும் கடல், செழித்து வளர்ந்த தென்னைகள், அடக்கமாய் வீற்றிருக்கும் அறுகம் களப்பு என அமைந்த இயற்கை எழில்கள், விழிகளுக்கு விருந்தாகும்.

தொடர்ந்து படிக்க…

இது ரொம்ப பெரியது!!

உலகில் எத்தனை விதமான ஆச்சரியங்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றன. இவை செயற்கையாக மனிதனின் முயற்சியால் மட்டுமல்லாது, இயற்கையாகவும் இடம் பெறுகின்றன. இங்கு நான் குறிப்பிடப்போகும் தகவலும் இயற்கையாக உண்டாகியுள்ள ஆச்சரியம்தான்.

மலர் – பூ : யாவரும் விரும்பும் அழகிய சொற்கள்.. யாவரும் இரசிக்கும் அழகிய சடப்பொருள்.. யாவரும் நுகரும் இனிய நறுமணம் தாங்கி.. இப்படியாக மலர்களின் மகத்துவத்தினை அடுக்கிச் சொல்லலாம்.

மலர்களில் எனக்கு மல்லிகையைப் பிடிக்கும். ரோஸாவும் பிடிக்காதென்றில்லை. இந்தக் காலத்தில் ரோஸா பூவுக்கே அதிகம் கிராக்கி இருக்கும் என சொல்லலாம். ஏன்? என்று கேட்கிறீர்களா? அது இன்னும் சில நாட்களில் வரவுள்ள Valentine’s Day இனை ஒட்டி அன்பினைப் பரிமாறிக் கொள்ளும் அடையாளமாக ரோஜா பூ விளங்குவதாக ஒரு செய்திக்குறிப்பினை அண்மையில் வாசித்தேன்.

சரி.. சரி.. இது ரொம்ப பெரியது என்று தலைப்பையிட்டு விட்டு ஏதோ பூக்களை பற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறேன் என பார்க்கிறீர்களா?? நான் இங்கு சொல்லப்போவதோ உலகிலே மிகவும் பெரிய பூவைப் பற்றியதாகும்.

உலகிலேயே மிகப் பெரிய பூவின் பெயர் Rafflesiaceae என்பதாகும். இது சிவப்பு நிறமுடையதான மலராகவிருப்பதோடு, அதன் அகலமோ மூன்று (3) அடிகளாகும். மலர் என்றால் நறுமணம் வீசவேண்டும் என்பது கட்டாயம் தானே! இருந்தபோதும் இம்மலர் மணத்தை உடையதாகவுள்ளது. ஆனாலும் அது நறுமணம் இல்லை என்றே சொல்ல வேண்டும். சகிக்க முடியாத மணம் என சொல்லப்படுகிறது.

இம்மலர் இத்தனை பெரியதென்றால் அதன் நிறை எவ்வளவாக இருக்கும் என ஊகிக்க முடிகிறதா? ஏழு (7) கிலோ எடையுள்ள மலராக தோற்றமளிக்கிறது.

ஆகையாலே, இது ரொம்ப பெரியது தான். இம்மலர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை இங்கே நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

-உதய தாரகை