கடந்த ஆண்டில் மறக்க முடியாதவைகள்

கடந்த ஆண்டில் பல மறக்கமுடியாத பல நிகழ்வுகள் இடம்பெற்ற போதும், என்னைக் கவர்ந்த முக்கிய ஐந்து விடயங்களைப் பகிர்ந்து கொள்ளலாமென நினைத்தேன். இப்பதிவு உருவாயிற்று. இது முந்திய என் பதிவிலுள்ள எதிர்பார்ப்பினை சாந்தமாக்கும் என நம்புகின்றேன்.

இதோ அந்த முக்கிய ஐந்து விடயங்கள்

Avian Influenza – பறவைக் காய்ச்சல்
கடந்த வருடத்தின் ஜுன் மாதத்தில் இந்தோனேஷியாவில் கண்டறியப்பட்ட இப் பறவைக் காய்ச்சலுக்கு (Bird Flu) இலக்காகி கடந்த வருடம் மட்டும் 79 பேர் மரணமாகியுள்ளனர்.

The Da Vinci Code – தா டாவின்ஸி கோட்
Tom Hanks மற்றும் Audrey Tautou ஆகியோர் நடித்து வெளிவந்த Dan Brown எனும் எழுத்தாளரினால் எழுதப்பட்ட நாவலினைக் கொண்டு உருவாக்கம் பெற்ற தா டாவின்ஸி கோட் எனும் திரைப்படத்திற்கு பிரபலமான எதிர்ப்பு உலகளவில் கிளப்பப்பட்டது. இருந்தபோதிலும் இத்திரைப்படம் அன்புள்ளவர்கள் யாவரும் கடவுளின் தன்மைகளைப் பெறலாம் என்பதனை நயமாகச் சொன்னதாக விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Google – கூகிள்
இது இன்றளவில் தேடல் என்ற வினைச் சொல்லாக மாறிவிட்டது. கூகிள் செய்யும் ஆச்சரியங்கள் ஆயிரமாயிரம். அத்தனை ஆச்சரியங்களுக்குள்ளும் ‘புதுமை’ என்பதே மிக ஆணித்தரமாய் அலைபாயும். கடந்த மாதம் NASA எனும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டு எமக்கு நட்சத்திரங்கள் கொண்ட விண்வெளியினைக் காட்ட கூகிள் முனைந்திருக்கின்றது.

Steve Irwin – ஸ்டீவ் இர்வீன்
முதளைகளின் வேட்டையாளன் – Crocodile Hunter என பெயர் பெற்ற இர்வீன் கடந்த செப்டம்பர் மாதம் இப்பூமியினை விட்டு மறைந்தார். உயிர்களிடத்தில் அன்பு காட்டுதலை அனுபவபூர்வமாக உணர்ந்த இன்னொரு ஜீவனாக இவரைக் குறிப்பிடலாம். உலகம் அன்பையே வேண்டி நிற்கிறது என்பதை இவரின் நடவடிக்கைகளில் இருந்து உணர முடியும். இவர் 1962 ஆம் ஆண்டு பிறந்தவர். அன்பே சிவம்…

TIME Person of the Year – டைம் சஞ்சிகையின் இவ்வாண்டின் சிறந்த நபர்
டைம் சஞ்சிகையினால் இவ்வாண்டின் சிறந்த நபராக இணையத்தோடிணைந்த செயற்பாடுகளைச் செய்யும் நீங்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். You என்பதே இவ்வாண்டின் நபர். அதாவது நீங்கள். இணையத்தின் பிரஜைகளாக உருவெடுத்து அதனை தரவுகள், தகவல்கள் போன்றவற்றினால் போஷிக்கும் நீங்களே இவ்வாண்டின் டைம் சஞ்சிகையின் நபராவீர்கள்.

– உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s