கோழியா? முட்டையா?

“கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா? சொல்லு.. கொக்கர.. கொக்கோ..” எனவொரு திரைப்படப்பாடல் கூட இருக்கிறது. அந்தளவிற்கு இந்தக் கேள்வி மிகவும் பெரியதொரு புதிராக ஆண்டாண்டு காலமாக கேட்கப்பட்டது.

இப்புதிருக்கு விடை கண்டுபிடித்து விட்டதாக மரபணுக்களைப் (DNA) பற்றி ஆராயும் பேராசிரியர் அறிக்கை விட்டுள்ளார்.

egg-chicken.jpg

இன்று காலை பறவைக் காய்ச்சல் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள கூகிள் பண்ணிய போது (தேடிய போது), இந்தப் புதிருக்கான விடையை கண்டறியப்பட்டதாகச் சொல்லும் செய்தியை உடைய இணையத்தளமும் கிடைக்கப்பெற்றது.

கடந்த வருடம் மே மாதம் 26ஆம் திகதி இச்செய்தி வெளியாகியுள்ளது.

முதலில் கோழியா வந்தது? முட்டையா வந்தது? என்ற புதிருக்கான விடையைச் சொல்லவேயில்லையே என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. முதலி்ல் முட்டைதானாம் வந்தது. இது நான் சொல்லவில்லை. குறித்த விடயங்களைப் பற்றி ஆராயும் பேராசிரியர் சொல்கின்றார். இவ்வாறு சொல்வதற்கு ஆதாரங்களையும் அவர் குறிப்பிடுகின்றார். அவை பற்றி விரிவாக இங்கே சென்று அறிந்து கொள்ளுங்கள்.

சரி… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கோழியா…? முட்டையா? முதலில் வந்தது.. மறுமொழியாகக்கூடச் சொல்லலாமே!

-உதய தாரகை

7 thoughts on “கோழியா? முட்டையா?

 1. செந்தழல் ரவி அவர்களே!

  உங்கள் வருகைக்கு நன்றி…

  உயிரியல் கூறுகளின் பரிமாண வளர்ச்சியால் தான் முட்டை உருவானதாக சொல்கிறார்கள். ஆதலால் முட்டைக்கு முன் கோழியே இல்லையாம்.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  நன்றி.

  -உதய தாரகை

 2. அஸ்னத் நன்றி..

  ஆமா.. என்ன சொல்ல வர்ரீங்க…

  நீங்களே கோழி முட்டை என்று புதிய புதிரொன்றை ஆரம்பிச்சிடுவீங்க போல இருக்கு…

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

  -உதய தாரகை

 3. உயிரியல் கூறுகளின் பரிணாம வளர்ச்சியால்தான் முட்டை உருவானது என்பதை நம்ப முடியவில்லையே. கோழியினூடாகவே முட்டையை பெற்றுக் கொள்கிறோம் என்பது யாவரும் அறிந்த உண்மை! அப்படியிருக்கும் போது முட்டை எப்படி முதலில் தோன்றியிருக்கலாம்? அப்படியே தோன்றினாலும் அதன் பின் எப்படி கோழி வந்தது. வெறுமனே ஒரு முட்டையிலிருந்து கோழி உருவாவதென்பது சாத்தியப்படாத விடயம்.
  உதய தாரகையே, மீண்டும் ஒரு பரிசீலனையை மேற்கொண்டால் நன்று.

 4. நிறப்பிரியை,

  நன்றிகள் பல… நான் எனதிந்த பதிவிலே சொல்லியிருக்கிறேன். முட்டைதான் முதலில் வந்தது என நான் கூறவில்லை. அது தொடர்பான ஆராய்ச்சியில் உள்ள விற்பன்னர்கள் கூறியிருக்கிறார்கள். ஆதலால், அவர்களைத் தான் நீங்கள் மறு பரீசிலனை செய்யக் கேட்க வேண்டும்.

  உங்கள் தர்க்க ரீதியான கருத்துகளுக்கு வாழ்த்துக்கள்.

  தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்..

  -உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s