ஆங்கிலமில்லாத மொழி

தமிழ் மொழி மூலம் சிந்தித்து எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் எமது வாழ்க்கையோட்டத்தில் அறிந்தோ அறியாமலோ முக்கியமான ஓரிடத்தைப் பெற்றுக் கொள்ள ஆங்கிலத்திற்கு முடிந்துள்ளது. இப்பழக்கம் தமிழ் மொழியினை பாவிக்கும் மக்களிடம் மட்டுந்தான் வந்துள்ளதா? என்று ஆய்ந்தால், இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. ஏனெனில் உலகிலுள்ள பல நாடுகளிலும் ஆங்கிலத்தினை தம் அன்றாட விடயங்களில் பாவிக்கும் தன்மை நிறைய மக்களிடம் காணப்படுகிறது. இந்நிலை எவ்வாறு சாத்தியமானது என்பதற்கு ஏகப்பட்ட காரணங்கள் பட்டியற்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை தொடர்பாக கதைக்க எனக்கு ஆர்வமில்லை.

ஆங்கிலத்தில் உள்ள சொற்களை இணைத்தே தமது சம்பாஷணைகளை தொடர உலக மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆங்கிலத்தினை நாமும் அன்றாடம் பல சந்தர்ப்பங்களில் எமது மொழியோடு இணைத்து உபயோகப்படுத்துகின்றோம். குறுந்தகவல் சேவை என உணரப்படும் SMS இனை கையடக்கத் தொலைபேசியின் ஊடாக அனுப்புவதற்கு அதிகமாக ஆங்கிலத்தினையே பயன்படுத்துகின்றோம்.

தமிழ் மொழியில் குறுந்தகவல் அனுப்புவதற்காக பல பிரத்தியேகமான நிலைகளை உள்ளடக்கிய கையடக்கத் தொலைபேசிகள் பாவனைக்கு வந்துள்ள போதும் அவை அதிகம் பிரபல்யமாகவில்லையென்றே சொல்ல வேண்டும்.

ஆங்கிலத்தில் தமிழ் மொழியைப் கூட தட்டச்சு செய்து குறுந்தகவலாக அனுப்பும் பழக்கமும் இன்னும் பலரிடம் காணப்படுகின்றது. இந்நிலை மொழி ஒரு போதும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள தடையாக இருக்காது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். (உதாரணமாக “நலம் நலம் அறிய ஆவல்” என்பதனை “Nalam nalam ariya aavel” என்று ஆங்கிலத்தில் எழுதுவதைக் குறிப்பிடலாம்.)

ஆங்கிலத்தில் இலக்கண விதிகளுக்கொப்ப தங்களது விடயங்களை தட்டச்சு செய்து (இவ்வாறு செய்வதனால் சிலவேளை குறுந்தகவல்கள் நெடுந்தகவல்களாகக் கூட மாறிவிடும் நிலையும் உண்டு) பகிர்ந்து கொள்வோரும் எம்மத்தியில் காணப்படுகின்றார்கள். இவர்கள் மொழியில் கொண்ட பற்றுதலால் இவ்வாறு குறுந்தகவல்களை எழுதுகிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம்.

ஆங்கிலச் சொற்களை குறுஞ்சொற்களாக (Short Words) மாற்றி குறுந்தகவல்களில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையோ மிகவும் அதிகமாகும். இவ்வாறானவர்கள் ஆங்கில மொழியை பிழையாக தமது அன்றாட கடமைகளின் போது பாவிக்க நேரிடும் என்பது தெளிவான உண்மையே. எடுத்துக்காட்டாக, Because என்பதை Bcos எனவும், What என்பதை Wot எனவும் பாவிப்பதனைக் குறிப்பிடலாம். இச்சொற்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

குறுந்தகவல் மூலமாக ஆங்கிலத்தினை முதன் முதலாக இனங்கண்டு கொள்ளும் நபருக்கு, அத்தகவல்களில் காணப்படும் சொற்கள் சரியான எழுத்துக்களை கொண்டு (Spelling) உண்டென எண்ணி அவற்றை தமது அன்றாட வாழ்க்கையில் பாவிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் மொழியினை அவர் பாவிக்கும் நிலைகளில் தவறுகள் நேர்வதை தவிர்க்க முடியாமல் போய்விடும். இந்நிலை ஆங்கிலத்தினை தாய் மொழியாகக் கொண்டிறாரதவர்களையே அதிகம் பாதிக்கின்றது.

இருந்தபோதும், குறுந்தகவல்களில் குறுகிய சொற்களினைப் பாவித்து பழகிய ஆங்கில மொழியினைத் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களும் தமது பரீட்சைகளின் போது விடை எழுதுகையில் இவ்வாறான குறுகிய சொற்களைப் பயன்படுத்தி விடையெழுதுவதாக பரீட்சை மதிப்பீட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது மாணவர்களின் கல்வியிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளளதாக சொல்லப்படுகின்றது.

ஆங்கிலத்தினை இவ்வாறு பாவிப்பதில் ஏற்படும் இவ்வாறான நிலைகளுக்கப்பால், சில நன்மைகளும் இவ்வாறு ஆங்கிலச் சொற்களை குறுஞ்சொற்களாக பயன்படுத்துவதால் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

என்னென்ன நன்மைகள் ஆங்கிலச் சொற்களை குறுஞ்சொற்களாக பயன்படுத்துவதால் ஏற்பட்டுள்ளது என நீங்கள் மறுமொழி இடுங்கள்.. உங்கள் எண்ணங்களையும் நிறத்தில் குவித்து உண்மையான வசந்தத்தை அனுபவியுங்கள்..

-உதய தாரகை

3 thoughts on “ஆங்கிலமில்லாத மொழி

  1. நாம் அன்றாடம் சந்திக்கும் சாதாரண விடயங்களுக்குள் இத்தனை இருக்கிறதா? வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  2. வணக்கம்.
    உங்களது ஆங்கில மொழி ஆராய்ச்சி சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்! தொலைபேசியில் மட்டுமல்ல, ஒரு மின்னஞ்சலில் கூட குறுந் தகவல்களை அனுப்பலாம் என்பது என் கருத்து. ஒரு அவசர மின்னஞ்சல் இது போன்ற குறுந்தகவல்களுக்கு பெரிதும் நன்மை பயக்கிறது.

  3. இன்று தான் கூகுள் தேடல் மூலம் உங்கள் வலைப்பதிவைக் கண்டடைந்தேன். ஒவ்வொரு இடுகையாகப் பொறுமையாகப் படித்து பின்னர் கருத்து சொல்கிறேன். உங்கள் பதிவின் செய்தியோடையை முழுமையாகத் தர முடியுமா? தற்போது கூகுள் திரட்டியில் உங்கள் இடுகைகளின் முதல் ஒரு பந்தி மட்டும் தான் தெரிகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s