எண்ணம். வசந்தம். மாற்றம்.

நீயொரு மக்கு!!

“நீயொரு மக்கு!!” என்ற சொற்றொடரை சில வேளை நீங்கள் இன்னொருவரை நோக்கி உபயோகித்திருக்கக்கூடும். கூடவே உங்களைப் பார்த்தும் சிலர் “நீயொரு மக்கு!!” என்று சொல்லிய அனுபவங்களும் உங்களிடம் இருக்கக்கூடும். ஏன் நாம் மற்றவரை அல்லது மற்றவர் நம்மை மக்கு என சொல்ல வேண்டும் என நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

என்ன இது??? வில்லங்கத்தனமான கேள்விகளெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கிறீங்க என்று நினைக்க வேண்டாம். நாம் ஒரு விடயத்தை அறியக் கூடிய நிலையில் இருந்தும் அதை புரியாமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது அவ்விடயத்தைப் புரிந்தவர் நம்மை “மக்கு” என்று சொல்வது தான் வழக்கம். இதிலிருந்து நாம் ஒன்றை முடிவெடுக்கலாம் அதாவது எமக்கும் புரியக்கூடிய ஆற்றல் இருக்கின்ற போதும் அதை நாம் முறையாக புடம் போட்டு எடுக்கவில்லை என்பதாகும்.

என்ன உதய தாரகை? தத்துவம் எல்லாம் பேசுற மாதிரியே இருக்குது! என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. உண்மையில் இந்தப் பதிவின் நோக்கம் “மக்கு” எனும் சொல்லின் பாவனையை சொல்லித்தருவதல்ல. மாறாக, மனிதனின் மூளை அசாதரணமாய் அமைந்த ஒரு மனிதரைப் பற்றி பேசிடத்தான் இப்பதிவு.

இருபத்தோராம் நூற்றாண்டின் “தலை” சிறந்த விஞ்ஞானிகளும் முதன்மையானவர் யார் என்று கேட்டால் அல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) என்று நீங்கள் நிச்சயமாக அறிந்து வைத்திருப்பீர்கள். அறிந்திருக்க வேண்டும்.

250px-albert_einstein_head.jpgஇந்த மாமனிதரின் மூளையானது, ஏனைய மனிதர்களின் மூளையிலிருந்து மாறுபட்டுள்ள விடயம் பற்றியும் நீங்கள் அறிந்திருக்கக் கூடும். எண்ணக்கருக்களை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியுமான ஆற்றலைக் கொண்டிருந்த அவரின் மூளை பெளதீக நிலையிலும் மாற்றங்களைக் கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மூளை நரம்புகளுக்கு சொந்தமாக அமையும் glial எனப்படும் ஒருவகைக் கலங்களின் எண்ணிக்கையானது, ஐன்ஸ்டைனின் மூளை தொடர்பில் மிகவும் அதிகமாக காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே ஒழுங்கமைக்கும் ஆற்றலை ஐன்ஸ்டைன் அதீதமாக பெற்றிருந்தார் என விளக்கம் சொல்லப்படுகிறது. இந்த glial கலங்கள் நரம்புகளுக்குத் தேவையான பாதுகாப்பையும் ஆதாரத்தையும் வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு, ஐன்ஸ்டைனின் மூளையில் காணப்பட்ட நரம்புகளின் அடர்த்தியும் மிகவும் அதிகமானதாகும். அத்தோடு, இரு அரைக்கோளங்களையும் மூடிக் காணப்படும் காப்புறையானது சாதாரணமான மூளையிலுள்ளதை விட மிகவும் மெல்லியதாகவே காணப்பட்டுள்ளது.

கணித ஆற்றலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூளையின் பகுதியில் வித்தியாசமான வளர்ச்சியும் அவதானிக்கப்பட்டுள்ளது. சாதாரண மூளைகளைக் காட்டிலும் 15 சதவீதம் ஐன்ஸ்டைனின் மூளையில் அவை விருத்தியுற்று காணப்பட்டதாக அறியப்பட்டுள்ளது. இதனாலேயே “கணக்கில் கில்லாடி” ஆக ஐன்ஸ்டைன் திகழ்ந்தாரோ?? ஏன் சார்புக் கொள்கை என E=mc2 எனும் சமன்பாடும் தந்தாரோ??

ஆராய்ச்சியாளர்கள் அவரின் மூளையின் அசாதாரண அமைப்பைக் கண்டு ஆச்சரியமே உருவாய் காணப்படுகிறார்கள்.

“நீயொரு மக்கு!!” என்று ஐன்ஸ்டைனைப் பார்த்தும் அக்காலத்தில் அவர் பள்ளி ஆசிரியர் சொன்னதாகவும் தகவல் உள்ளது.

அவரின் பள்ளி நாட்கள் பற்றிய குறிப்பொன்றை இங்கே காணுங்கள்..

Einstein’s formal secondary education was abruptly terminated at 16. He found life in school intolerable, and just as he was scheming to find a way to leave without impairing his chances for entering the university, his teacher expelled him for the negative effects his rebellious attitude was having on the morale of his classmates.

உங்கள் மறுமொழிகளையும் சொல்லுங்களேன்…

-உதய தாரகை

“நீயொரு மக்கு!!” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Muchi Avatar
    Muchi

    எந்த மனிதனும் எல்லாவற்றையும் அறிந்திருப்பதில்லை. ஆதலால் எல்லோரும் ஒரு வகையில் “மக்கு” தான். இறைவனை ஒருவன் உணரும் நிலையில் அவன் யாவும் அறிந்தவனாகின்றான்.

  2. நளாயினி Avatar
    நளாயினி

    எனது தந்தை என்னை “மக்கு பெட்டை” என கோபம் வரும் தருணங்களில் சொல்வதுண்டு. நான் அதை செல்லமாக சொல்வதாக எடுப்பதுண்டு. ஓ… அது இது தானா விசயம்.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்