மூளையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

“என்ன உதய தாரகை? இப்புடி கேட்டுப்புட்டீங்க..? எங்களுக்கு மூளையப் பத்தி என்ன தெரியுமாவா?” என்று எனக்கு திட்டித் தீர்க்க ரெடியாவது போல் தோனுது.

வேணாம். நான் சொல்றன். இது ஒன்னுமில்லங்க. மூளையைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில வேளை அறிந்திருக்கக்கூடிய விடயங்களை பட்டியற்படுத்த போகிறேன். அதற்குத்தான் இந்த மாதிரி ஒரு தலைப்பு…

மூளை – இது இல்லையென்று யாரிடமும் சொல்லிவிட்டால் கோபம் என்பது அவரை அறியாமலேயே பொத்துக் கொண்டு வரும். ஆக மூளை இல்லை என்பது மனிதனோடு கூடிய சம்பாஷணைகளிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றென்றே நான் நம்புகிறேன்.

மூளை பற்றிய நீங்கள் அறிந்திருக்க முடியாதென நம்பும் விடயங்கள் இதோ.. இதனை உங்கள் மூளையில் பதிவுசெய்து கொள்ளுங்கள்.

மூளையென்பது ஒரு கொழுப்பு என்று நான் சொல்லிவிட்டால், நீங்கள் இது பற்றி என்ன சொல்வீர்கள். நீங்கள் என்னதான் சொன்னாலும் மூளை கொழுப்புத்தான். அதாவது உங்கள் தலை கொழுப்பைக் கொண்டது. ஏனென்று கேட்கிறீர்களா? மூளையின் நரம்புக்கலங்களின் மென்சவ்வுகள் யாவும் கொழுப்பமிலங்களால் உருவாகியுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சிலவேளைகளில் ஒரு செம்மறி ஆட்டின் நிறையும் ஒரு சாதாரண மனிதனின் நிறையும் சமமாக இருக்கலாம். ஆனால், இந்த நிலையில் மனிதனின் மூளையின் நிறை மட்டும் செம்மறியாட்டின் மூளையின் நிறையை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும். “அப்படியா?” என்று ஆச்சரியப்படுவது எனக்குப் புரிகிறது.

இரண்டு வயதான பிள்ளையின் மூளையானது, வயது வந்தவொருவரின் மூளையை விட இரண்டு மடங்கு சக்தியை நுகரும் தகவுடையது.

நாம் மூளையைப் பயன்படுத்துவதில்லையென எமக்கு நாமும், சில வேளை பிறரும் சுட்டிக்காட்டுவதுண்டு. ஆனால், என்ன செய்ய யார் சுட்டிக்காட்டியும் என்ன பிரயோசனம். நாம் மூளையின் பெரும்பகுதியை பயன்படுத்துவதில்லை என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

மூளை என்றால் அல்பர்ட் ஐன்ஸ்டைனைப் பற்றிக் கதைக்காமல் இருக்கவே முடியாது. நான் ஏற்கனவே அந்த விஞ்ஞானியின் மூளையின் வித்தியாசமான ஆளுமையைப் பற்றி “நீயொரு மக்கு” என்ற தலைப்பில் பதிவிட்டிருக்கிறேன். படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அந்தப் பதிவில் இடம்பெறாத ஒரு விடயம். 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி காலமான அல்பர்ட் ஐன்ஸ்டைனின் மூளையானது, Thomas Harvey எனும் வைத்தியரினால் அகற்றப்பட்டு, அது 240 துண்டுகளாக வெட்டிப் பிரிக்கப்பட்ட செய்தியை நீங்கள் அறிவீர்களா?

ஏன் இவ்வாறு அகற்றப்பட்டு துண்டாக்கப்பட்ட மூளைப் பகுதிகளை 1978ஆம் ஆண்டில் தான் குறித்த வைத்தியரிடம் இருக்கக் கண்டதாக மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு ஏழு வயதாகும் போதே மூளை அதன் வளர்ச்சியில் 95 சதவீதத்தை பூர்த்தி செய்திருக்குமென்பது நீங்கள் அறிந்த விடயமாகக் கூட இருக்கலாம்.

இப்படி நீங்கள் மூளை பற்றி அறிந்த விடயங்களைக் கூட மறுமொழியாகச் சொல்லலாமே.. இந்தப் பதிவு அறிந்த கொஞ்ச விடயங்களை பகிர்ந்து கொள்ள நினைத்ததால் உருவானது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

-உதய தாரகை

2 thoughts on “மூளையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

  1. மூளையைப் பற்றிய உங்கள் ஆக்கம் வாசிக்க சுவாரஸ்யமாக உள்ளது. வாழ்த்துக்கள்!

    ஆனாலும், மூளையைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரு தகவலையும் நிறத்துடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    மனிதனுக்கு மிக முக்கியமான மூளை, கனமான மண்டை ஓடெனும் ஒரு பெட்டி போன்ற அமைப்பினுள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. மூளையின் மேலுள்ள வன்றாயி, மென்றாயி, சிலந்திவலையுரு ஆகிய மூன்று வன்கோதுப்படைகளும் மண்டை ஓடுகளும் மூளைக்கு ஆபத்து ஏதும் வராமல் பாதுகாக்கின்றன என்பதுதான் அந்தத் தகவல்.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s