பாலத்தை உடைத்துப் போட்ட பறவை

பறவைகளின் பால் மனிதர்களுக்கு நிறைய ஈர்ப்பு உடையதாகவே எண்ணுகிறேன். பாடசாலைக்குச் செல்லும் சிறிய பிள்ளைகளின் கற்பனை வளத்தை கண்டு கொள்ளும் பொருட்டு ஆசிரியரால் மாணவர்களுக்கு வழங்கும் கட்டுரைத் தலைப்பு “நான் பறவையானால்…” என்பதாகும். அது மட்டுமா, இதிகாசங்கள் பலதிலும் நாட்டுக்கு நாடு தூது விடும் ஊடகங்களாகக் கூட பறவைகள் இடம்பெற்றுள்ளதை நம்மால் அவதானிக்க முடிகிறது.

இதென்ன!? பறவைகள் பற்றி ஏன் இவ்வளவு அதிகமாக கதைக்கப்போகிறீர்கள் என்று தானே நீங்கள் எண்ணுகிறீர்கள்…? இது அதிசயங்களை அடுக்கிச் சொல்லப்போகும் ஒரு ஆராய்ச்சிப் பதிவு…

புறாக்கள், தூதுவிடுதல் படலங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பறவை என்பதை நாம் அறிவோம். தூது விடுவதைச் சாத்தியமாக்கும் பொருட்டு சிறப்பாக பயிற்சிகள் வழங்கி வளர்க்கப்பட்ட புறாக்களின் கால்களில் தமது செய்திகள் எழுதப்பட்ட ஓலைகளைக் கட்டி அனுப்புவதன் மூலம் புராதான காலத்தில் தொடர்பாடல் நடந்தது. இந்தத் தொடர்பாடல் முறை காதலில் தொடங்கி அரசியல் வரைக்கும் ஆட்சியுடைமை செய்த நிகழ்வுதான் கொஞ்சம் ஆச்சரியமானது.

14.jpg

இந்த நேரத்தில் நான் கேட்டவொரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது, மன்னரிடம் அமைச்சர் சொல்லுவார், “மன்னா, தாங்களுக்கு அயல் நாட்டு மன்னரால் தூது அனுப்பிய புறா வந்துள்ளது. ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை.” இதனைக் கேட்ட மன்னர் அமைச்சரைப் பார்த்து சொன்னாராம் “அது “மிஸ்ட் கால்” அமைச்சரே.”

என்னது இப்படி ம்…. என்டு இருக்கிறீங்க? கொஞ்சம் சிரியுங்களன்.. 😆

புறாக்களை அதிகமானோர் செல்லப்பறவையாக வளர்ப்பதை கண்டிருக்கிறேன். புறாக்கள் தமக்குள்ளே அதிக அதிசயங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதென்பதை அறிவியல் ஆராய்ச்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

2.jpg

புறாக்களின் கண்பார்வை மிகவும் தெளிவுடையதாகும். மனிதர்களைப் போலவே நிறங்களைப் பார்க்கக்கூடிய கண்களையுடைய புறாக்களுக்கு பார்வையில் ஓர் அதிசயத் தன்மை உண்டு. அதாவது மனிதர்களின் பார்வைப் புலன்களுக்குத் தென்படாத கழிஊதா ஒளியையும் புறாவின் கண்கள் பார்க்கும் வல்லமையுடையன. இதனாலேயே தேடுதல் மற்றும் காப்பாற்றுதல் போன்ற நிலைகளில் உதவிக்காக புறாக்கள் மனிதனால் பயன்படுத்தப்படுகிறது.

பார்வை மட்டுமா மிகவும் நுணுக்கமானதென பார்த்தால், இல்லையென்றே சொல்ல வேண்டும். கேட்டலில் புறாக்கள் கில்லாடிகள். மனிதர்களால் உணரமுடியாத குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட சத்தத்தையும் புறாக்களின் காது உணர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றது. மலைகளின் அல்லது கட்டடங்களின் குறுக்காக வீசும் காற்றின் ஒலி, தூரத்தில் ஏற்பட்டுள்ள இடியோசை, ஏன் ஆகவும் நெடிய தொலைவில் கட்டுக்கடங்காமல் வெடித்துச் சிதறும் எரிமலையின் ஒலி என அனைத்தையும் துல்லியமாகக் கேட்கும் ஆற்றல் புறாக்களுக்கு உண்டு.

புறாக்கள் நிற்கும் இடத்திலிருந்து திடீரென பறந்து போவதை நீங்கள் கட்டாயம் அவதானித்திருப்பீர்கள். அதுகூட, உங்களால் கேட்கமுடியாத ஒரு ஒலியை புறா கேட்டதால் உருவாகும் நிலையாகுமென்றே அறியப்பட்டுள்ளது.

இப்படி ஆற்றல்களைக் கொண்ட புறாக்கள், இற்றைக்கு சுமார் 120,000 ஆண்டுகளிற்கு முன்பாக உலகில் தோற்றம் கண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சாதாரண பொதுமைப்பாடான புறாவொன்றின் அலகிலிருந்து வால் வரையான அதன் நீளம் 32 சென்றி மீற்றர் என்பதோடு, அது 0.35 கிலோ கிராம் எடையையுடையதாகவும் காணப்படுகிறது. புறாக்களில் ஆண் புறாக்கள் பெண் புறாக்களை விடவும் நிறையில் கொஞ்சம் அதிகமானதாகும்.

பொதுவாக புறாவானது, இரண்டு வெள்ளை முட்டைகளை இடும். பெற்றோர்கள் இருவரும் அந்த முட்டையை அடைகாப்பதில் ஈடுபடுவார்கள். ஆண் புறாக்கள் வழக்கமாக முட்டைகளை பகல் வேளையில் அடைகாக்கும். பெண்புறாக்கள் இரவு வேளைகளில் அடைகாக்கும். குஞ்சு பொரிப்பதற்கு 18 நாட்கள் எடுக்கும்.

என்ன உதய தாரகை, புறாவைப் பற்றி இப்படி தகவல்களை அடுக்கிக் கொண்டு போறீங்க.. அதிசயமான மேட்டர் என்னு சொன்னீங்க ஒன்னையும் காணோமே!!? என்றல்லவா என்னிடம் உங்களுக்கு கேட்கத் தோனுகிறது. இருக்கட்டும். இருக்கட்டும். தொடர்ந்து படியுங்கள்.

நீங்கள் புறாக்கள் வாழும் இடங்களைக் கவனித்திருக்கிறீர்களா? உயர்ந்த கட்டடங்கள், உயர்ந்த பாலங்கள் ஆகியவற்றில் ஒரு கூடுகட்டி வாழ்ந்திருக்கும். இவற்றின் கூடுகளை இலகுவில் கண்டறிந்து கொள்ள முடியாது. அந்தளவிற்கு மறைத்து வைத்துக் கொள்ளும் கலையை நிறையவே கற்றுக் கொண்டுள்ள பறவை தான் புறா.

சரி மேட்டருக்கு வர்ரேன். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவில் ஒரு பாரிய அனர்த்தம் இடம்பெற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

என்னது இப்படி முழிக்கிறீங்க… 🙄

அதுதாங்க மிஸிஸிப்பி ஆற்றின் மேலாக அமைக்கப்பட்டிருந்த பாலம் உடைந்து விழுந்ததே ஞாபகமிருக்கிறதா? இவ்வனர்த்தத்தின் போது, 13 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர்வரைக் காயங்களுக்குட்பட்டனர்.

3.jpg

இந்த அனர்த்தம் எதனால் ஏற்பட்டதென நீங்கள் அறிவீர்களா? புறாவினால் தான் இந்த அனர்த்தம் ஏற்பட்டதென ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

41.jpg

புறாக்களின் எச்சம் இருக்கிறதே அது உருக்கின் எதிரி என்றுதான் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது. பாலங்களிலேயே அதிகளவில் புறாக்கள் வாழ்வதாக நாம் அறிந்து கொண்டோம். இந்தப் பாலத்திலும் அதிகளவில் புறாக்கள் வாழ்ந்துள்ளன. எச்சங்களை பாலத்தில் மிச்சமாக குவித்துள்ளன. இந்த எச்சங்கள் பாலத்தின் இரும்பு உருக்கின் துருப்பிடித்தலின் வேகத்தை விரைவாக்குவதில் அதிக பங்கெடுத்துள்ளன.

1987 – 1989 காலப்பகுதிக்கான இந்தப் பாலம் பற்றிய ஆய்வாளரின் அறிக்கையில் புறாக்களின் எச்சங்கள் கொண்ட பகுதி பெரிய படையாக பாலத்தில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். 1996 இல், புறாக்கள் கூடுகளைக் கட்டுவதைத் தவிர்ப்பதற்கான முற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், இந்த நடவடிக்கைகள் அவ்வளவு பலனளிக்கவில்லை.

“புறாக்களின் எச்சம் அமோனியா அமிலத்தை கொண்டுள்ளது. இந்த எச்சமானது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து அகற்றப்படாமல் விடப்பட்டால், அது அவ்விடத்தில் செறிவுடைய உப்பாக உருவெடுக்கும். இவ்வாறு உருவாகியுள்ள கூறுடன் நீர் கலந்து விடும் போது, மின்னிரசாயனத் தாக்கங்கள் பலதும் இடம்பெற்று, உருக்கினது பகுதிகளை துருப்பிடிக்கச் செய்யும் வலிமையை அது பெறுகிறது.” என அமெரிக்க இரசாயனவியல் அமைப்பின் இரசாயனவியலாளர் புறா எச்சத்தின் இரசாயன விளைவுகளைப் பற்றி விபரிக்கின்றார்.

இவ்வாறாக உருவாகும் அமோனியாவைக் கொண்ட உப்போடு, ஈரலிப்பு இரண்டறக் கலக்கும் நிலையில், மின்னிரசாயனத் தாக்கங்கள் நடந்தேறி இரும்பு துருப்பிடித்தலுக்கு ஆளாகிறது. நீண்டகால அடிப்படையில் ஒரு கட்டமைப்பில் அமைப்பியலில் உறுதியின்மையை தோற்றுவிக்கும் தன்மையை ஏற்படுத்துவதை இந்தத் தாக்கம் உறுதி செய்யும்.

கொலராடோ போக்குவரத்து திணைக்களம், புறாக்களை பாலங்களின் பகுதிகளில் கூடுகளைக் கட்டவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை இரண்டு வருடங்களாக ஆராய்ந்து வருகிறது. புறாக்களின் எச்சம் கொங்கிறீட் போன்ற உயர் வலிமையுடைய அமைப்புகளைக் கூட இலகுவில் கரைத்து விடும் ஆற்றலுடையதாக காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

ஒரு பாரிய கட்டமைப்பை வெறும் எச்சத்தால் உடைத்துப் போட்டுவிட்ட புறாக்களின் செயலை வலிமை என்பதா? அல்லது இயற்கையின் விதி என்பதா? அல்லது அதிகாரிகளின் கவனமின்மை என்பதா? என்னதான் சொன்னாலும் ஒரு பாலம் உடைந்து நொருங்கி விட்டது.

இயற்கையில் அற்புதங்கள் ஆயிரமாயிரம் உண்டு. நமக்குள்ளேயே நாம் ஆயிரம் அற்புதங்களை வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவற்றை தெளிவாக கண்டுணர்ந்து எம்மை நாமே புடம் போட்டால், அதிசயங்கள் பலவற்றையும் நாமும் உணர்ந்து கொள்ளலாம். உணர்த்திவிடலாம்.

– உதய தாரகை

2 thoughts on “பாலத்தை உடைத்துப் போட்ட பறவை

  1. “பாலத்தை உடைத்துப் போட்ட பறவை ” – புறா புராணமே பாடி விட்டீர்கள். நல்ல ஒரு செய்தியை அழகாக எழுதியிருக்கிறீர்கள். ந‌ல்ல ஈடுபாட்டுடன் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

  2. நன்றி கமலா அம்மா.

    உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    – உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s